பாம்பை விட மிகக் கொடிய 7 ஜீவராசிகள் எவை தெரியுமா?

நீல-வளைய ஆக்டோபஸ், விஷ டார்ட் தவளைகள், பஃப்பர் ஃபிஷ், கல் மீன், கூம்பு நத்தைகள், பெட்டி ஜெல்லிமீன்
நீல-வளைய ஆக்டோபஸ், விஷ டார்ட் தவளைகள், பஃப்பர் ஃபிஷ், கல் மீன், கூம்பு நத்தைகள், பெட்டி ஜெல்லிமீன்
Published on

பாம்பு என்றாலே அதனுடைய நச்சுத்தன்மை காரணமாக பலருக்கும் பயம். ஆனால், இந்த உலகில் பாம்பை விட கொடிய ஜீவராசிகள் சில உண்டு. அவை என்ன என்பது பற்றி இந்தப் பதிவில் பார்ப்போம்.

1. நீல-வளைய ஆக்டோபஸ் (Blue ringed Octopus): இது மிகுந்த சக்தி வாய்ந்த விஷம் கொண்டது. அளவில் சிறியதாக இருந்தபோதிலும் அவை மனிதர்களுக்கும் வேட்டையாடுபவர்களுக்கும் நம்ப முடியாத அளவிற்கு ஆபத்தை விளைவிக்கின்றன. இது டெட்ரோடோடாக்சின் எனப்படும் விஷத்தை உற்பத்தி செய்கிறது. இந்த ஆக்டோபஸ் கடித்தால் மனிதர்களுடைய நரம்புகளை பாதித்து சுவாசம் மற்றும் தசைகள் உட்பட பல பகுதிகளை பாதிக்கிறது. உடல் பக்கவாதத்திற்கும் வழிவகுக்கிறது. சில நிமிடங்களில் சுவாச செயலிழப்பால் மரணத்தை விளைவிக்கும். இது கடித்ததும் லேசான கூச்ச உணர்வை ஏற்படுத்தும். பின்பு குமட்டல், பார்வை இழப்பு, விழுங்குவதில் சிரமம், தசை முடக்கம் போன்ற கடுமையான அறிகுறிகளை தொடர்ந்து மரணத்தை விளைவிக்கும்.

2. விஷ டார்ட் தவளைகள் (Poison dart frogs): இவற்றில் விஷத்தன்மை வாய்ந்த தோல் சுரப்பிகள் உள்ளன. மனிதர்களை கடித்தால் நரம்பு மற்றும் தசை செயல்பாடுகளை பாதிக்கிறது. பக்கவாதம், இதய செயலிழப்பு, பின்பு மரணத்தை ஏற்படுத்துகிறது. இந்தத் தவளை தன்னுடைய உடலில் இருந்து நச்சுக்களை உற்பத்தி செய்யாது. அதற்கு பதிலாக நச்சு நிறைந்த உணவை உட்கொள்ளுவதன் மூலம் தன் உடலில் விஷத்தை சேமிக்கிறது. ரசாயனங்கள் கொண்ட எறும்புகள் பூச்சிகள் போன்றவற்றை உண்டு அவற்றில் இருந்து நச்சுக்களை பெறுகிறது.

3. பஃப்பர் ஃபிஷ் (Puffer fish): இதனுடைய கல்லீரல், கருப்பை, தோல் மற்றும் சதை ஆகியவற்றில் நச்சுத்தன்மை உள்ளது. இது கடித்தால் நரம்பு, சுவாச செயலிழப்பு பக்கவாதம் மற்றும் மரணம் ஏற்படும். இது கடித்ததும் உடனடியாக மருத்துவ உதவி செய்யாவிட்டால் சில மணி நேரங்களில் மரணம் ஏற்படும்.

4. கல் மீன் (Stone Fish): இது உலகிலேயே மிகவும் விஷமுள்ள மீனாக கருதப்படுகிறது. இவற்றை மிதிக்கும்போது அல்லது கையாளும் போது சக்தி வாய்ந்த நச்சுத்தன்மையை வெளிப்படுத்துகிறது. இது தீவிர வலி, வீக்கம், திசு நசிவு, இதய பாதிப்பு மற்றும் மரணத்தை ஏற்படுத்தும். இதனுடைய முள் உடலில் பட்டால் உடனடியாக சுடுநீரில் பாதிக்கப்பட்ட பகுதியை கழுவ வேண்டும். இதனால் விஷத்தின் தன்மை குறையும். அதேசமயம் உடனே மருதுதுவ சிகிச்சை அளிப்பதும் மிகவும் அவசியம்.

5. கூம்பு நத்தைகள் (Cone snails): கடலில் வாழும் இந்த நத்தைகள் திமிங்கலத்தில் இருக்கும் ஹார்பூன்கள் போன்ற ஊசி போன்ற பற்களை கொண்டுள்ளன. இவை மனிதர்களுக்கு ஆபத்தான விஷத்தை உடலில் செலுத்துகின்றன. பக்கவாதம் சுவாச செயலிழப்பு மற்றும் மரணத்தை ஏற்படுத்தும்.

இதையும் படியுங்கள்:
சளி, இருமல், தும்மல் போன்ற கபப் பிரச்னைகளை குணமாக்கும் தங்கப்பால்!
நீல-வளைய ஆக்டோபஸ், விஷ டார்ட் தவளைகள், பஃப்பர் ஃபிஷ், கல் மீன், கூம்பு நத்தைகள், பெட்டி ஜெல்லிமீன்

6. பெட்டி ஜெல்லிமீன் (Box Jellyfish): பெட்டி ஜெல்லிமீன்களின் வாயை சுற்றியுள்ள பகுதிகளில் விஷம் நிறைந்த கொடுக்குகள் உள்ளன. அவை இதய செயலிழப்பு, பக்கவாதம் மற்றும் சில நிமிடங்களில் மரணத்தை ஏற்படுத்தும். அவை இந்திய பசிபிக் பிராந்தியத்தில் காணப்படுகின்றன. மேலும், இவை மனிதர்களை கொட்டும் போது தாங்க முடியாத வலியையும், வேதனையையும் ஏற்படுத்தும்.

7. நன்னீர் நத்தைகள்; (Freshwater Snails): இவை ஒட்டுண்ணிப் புழுக்களை சுமந்து செல்கின்றன. இது ஸ்கிஸ்டோசோமியாசிஸை ஏற்படுத்தும். இது கடுமையான உறுப்பு சேதம் மற்றும் மரணத்திற்கு வழிவகுக்கும். ஆண்டுதோறும் மில்லியன் கணக்கான மக்கள் இதனால் பாதிக்கப்படுகின்றனர், பல்லாயிரக்கணக்கான இறப்புகளுக்கும் வழிவகுக்கிறது. எனவே, இது போன்ற விஷ ஜந்துக்களிடம் மிகவும் கவனமாக இருப்பது அவசியம்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com