‘முகமூடிக் கொள்ளையர்கள்’ என அழைக்கப்படும் விலங்குகள் எவை தெரியுமா?

அக்டோபர் 1, சர்வதேச ரக்கூன் பாராட்டு தினம்
raccoon
raccoon
Published on

க்கூன்கள் மிகவும் குறும்புக்கார விலங்குகள். இவற்றைக் காட்டின் முகமூடி அணிந்த கொள்ளையர்கள் என்று செல்லமாக அழைப்பார்கள். இவற்றின் சிறப்பம்சங்கள் மற்றும் வேடிக்கையான இயல்புகள் பற்றி இந்தப் பதிவில் பார்ப்போம்.

ரக்கூன்களின் சிறப்பம்சங்கள்:

புத்திசாலிகள்: ரக்கூன்கள் வட அமெரிக்காவில் உள்ள புத்திசாலித்தனமான பாலூட்டிகளில் ஒன்றாகக் கருதப்படுகின்றன. புதிய சூழ்நிலைகளுக்கு ஏற்ப பிரச்னைகளுக்கு ஆக்கபூர்வமான தீர்வுகளைக் கண்டறியும் திறன் பெற்றவை

நீச்சல் வீரர்கள்: மிகச் சிறந்த நீச்சல் வீரர்கள். பெரும்பாலும் ஆறுகள், ஏரிகள் மற்றும் குளங்களில் விளையாடிக் கொண்டிருக்கும். இவை இரவு நேரத்தின்போது 30 அடி ஆழத்தில் நீந்தி இரவு உணவிற்கு மீன்பிடித்து உண்ணும். கூட்டமாக வாழும் இயல்புடையவை. உணவைக் கூட்டத்தினருடன் பகிர்ந்து கொள்கின்றன. உணவு உண்ணும் முன்பு அவற்றைக் கழுவி விட்டு உண்ணும் வழக்கமுடையவை.

நினைவாற்றல்: ரக்கூன்களுக்கு அதீதமான நினைவாற்றல் உண்டு. அசைவ உணவை எங்கே சேமித்து வைத்தோம் என்பதை நினைவில் வைத்துக்கொள்ளும். பின்பு அவற்றை மீட்டெடுத்து உண்ணும்.

வாழ்விடம்: இவை காடுகள், ஈர நிலங்கள் மற்றும் நகர்ப்புறங்கள் உட்பட பரந்த அளவிலான வாழ்விடங்களில் காணப்படுகின்றன. பெரும்பாலான நேரத்தை இவை மரங்களில் செலவிடுகின்றன. அங்கு கூடுகளை உருவாக்கி தங்கள் குட்டிகளை வளர்க்கின்றன.

வேடிக்கையான அம்சங்கள்: இவற்றின் கண்களைச் சுற்றி தனித்துவமான கருப்பு முகமூடி போன்ற அமைப்பு உள்ளது. இது அவர்களுக்கு குறும்புத்தனமான தோற்றத்தை அளிக்கிறது. எனவே, முகமூடி அணிந்த கொள்ளைக்காரர்கள் என்று இது அழைக்கப்படுகிறது. மேலும், உணவை திருடித் தின்பதாலும் இந்தப் பெயர் வந்தது. இவற்றுக்கு பெரிய தட்டையான பாதங்கள் உள்ளன. அவற்றின் கீழே தனித்துவமான வடிவத்தை கொண்டுள்ளன. அவை நகரும்போது கால்கள் ஒரு டம்ளர் போன்ற தனித்துவமான ஒலியை எழுப்புகின்றன. இதனால் அவை தடுமாறி அல்லது கீழே விழுவது போல நடக்கின்றன. இது பார்ப்பதற்கு மிகவும் நகைச்சுவையாக தோன்றும். ரக்கூன்களுக்கு பெரிய காதுகள் உள்ளன. அவை சிறிய ஒலிகளைக் கூட கண்டறிய உதவுகின்றன.

உணவுக் காதலர்கள்: இவை நல்ல உணவுக்காதலர்கள். மேலும் திருடி உண்பதில் வல்லவர்கள். குப்பைத் தொட்டிகள், செல்லப்பிராணிகளின் உணவுகள் மற்றும் தோட்டப் பயிர்கள் போன்றவற்றில் தமது கைவரிசையைக் காட்டி விடும்.

திறமையான கைகள்: ரக்கூன்களின் விரல்கள் மிகவும் நெகிழ்வாகவும் வலுவான நகங்களையும் கொண்டுள்ளன. இவற்றின் கைகள் திறமையானவை. குப்பைத் தொட்டிகளை திறந்து பரிசோதிக்கவும், பூட்டுகளை திறக்கவும் பயன்படுகின்றன.

இதையும் படியுங்கள்:
பேப்பர் பிளேட்டுகள் Vs பாக்கு மட்டை தட்டுகள்: எது சிறந்தது?
raccoon

அழகிய விலங்குகள்: குறும்புத்தனம் செய்தாலும் அழகான குட்டி விலங்குகளாக இவை கருதப்படுகின்றன. அவற்றின் மென்மையான ரோமங்கள், வட்டமான முகங்கள் மற்றும் சிறிய மூக்குகள் பார்ப்பதற்கு அழகாகவும் ரசிக்கத்தக்கதாகவும் உள்ளன. இந்தக் கண்கவர் உயிரினங்களை மனிதர்களுக்கு மிகவும் பிடிக்கும். பலவிதமான குரல்களின் மூலம் தங்களுடைய குழுவை இவற்றால் தொடர்புகொள்ள முடியும். விசில் மற்றும் முணுமுணுப்பு போன்றவற்றை வெளிப்படுத்தும். தகவல் தெரிவிக்க உடல் மொழி மற்றும் வாசனை அடையாளங்களையும் வெளிப்படுத்துகின்றன.

விளையாட்டுத்தனம்: மரம் ஏறுவதில் இவை சிறந்தவை. கூர்மையான நகங்கள் மற்றும் சுறுசுறுப்பான உடல்களைப் பயன்படுத்தி மரங்களை அளவிடவும் கீழிருந்து மேலே ஏறவும் பயன்படுத்துகின்றன. மேலும் கட்டடங்களின் ஓரங்களிலும் ஏறி இறங்குகின்றன. தங்கள் குழுவினருடன் ஒருவரை ஒருவர் துரத்துவது, குச்சிகள் கொண்டு விளையாடுவது போன்றவற்றில் ஈடுபடும். மனிதர்களிடம் கூட சண்டையிடவும் விளையாடவும் செய்யும்.

தீங்கு: குறும்புகள் செய்தாலும் சில சமயம் மனிதர்களுக்கும் செல்ல பிராணிகளுக்கும் தீங்கு விளைவிக்கும் இயல்புடையவை. இவற்றின் கூர்மையான பற்கள் மற்றும் நகங்கள் செல்லப்பிராணிகளையும் மனிதர்களையும் பதம் பார்க்கும் தன்மையுடையவை. அவை தாக்க வரும்போது எதிர்த்து நிற்காமல் பின்வாங்குவது நல்லது.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com