மழை பெய்தால் மண் மணப்பது ஏன் தெரியுமா?

மண் வாசனை
மண் வாசனைhttps://www.snexplores.org
Published on

முதல் மழை பெய்யும்போது வரும் மண் வாசனையை முழு மூச்சாக உணர்வோம். இது எவ்வாறு உருவாகிறது என மனதில் பல யோசனைகள் தோன்றும். வறண்ட வானிலைக்குப் பின் ஏற்படும் முதல் மழையின்போதுதான் இந்த அருமையான வாசனை  நம்மை மகிழ்விக்கும். மண் தன்னுள் பல்வேறு வகையான பொருட்களை உள்ளடக்கிக் கொண்டிருக்கும் ஒரு திடப்பொருள். ஆனாலும், ஒரு குறிப்பிட்ட நுண்ணுயிரி தனது இனப் பெருக்கத்திற்காக வெளியிடும் ஒருவகை பொருள் மண்ணிலேயே தங்கி இருக்கும். பருவநிலை மாறும்போது ஏற்படும் முதல் மழைத்துளிகள் வறண்ட மண் மீது படும்போது அந்த மண் அப்படியே தெறித்துக் கிளம்பி காற்றுடன் கலந்து ஒரு வேதி மாற்றம் அடைந்து நமக்கு இனிமையான ஒரு வாசனையை ஏற்படுத்தும்.

இந்த மர்மமான மண் வாசனை, ‘பெட்ரிச்சார்’ என்று அழைக்கப்படுகிறது. இந்த சொல்லை ஜாய்பியர் மற்றும் ரிச்சர்டு தாமஸ் என்ற ஆராய்ச்சியாளர்கள் 1964ல் வெளியிட்ட, ‘அர்கில்லெசியஸ் வாடையின் இயல்பு’ என்னும் கட்டுரையில் பயன்படுத்தினர். இந்த மண் வாசனை ஏற்பட மண்ணில் உள்ள நுண்ணுயிரிகள், தாவரங்கள், இடி, மின்னல் காரணமாகும்.

ஈரமான மண்ணுடன் கூடிய நுண்ணுயிரிகள்: ஜியோஸ்மின் எனப்படும் ஒரு மூலக்கூறு ஈரமான மண்ணை சுற்றி நீடிக்கும். இந்த ஜியோஸ்மின் மண்ணில் உள்ள முதன்மையான ஸ்ட்ரெப்டோமைசஸ் என்ற பாக்டீரியாவால் தயாரிக்கப்படுகிறது. இந்த பாக்டீரியாக்கள் மண்ணில் ஏராளமாக உள்ளன. அனைத்து ஸ்ட்ரெப்டோமைசீட்களும் ஜியோஸ்மினை உருவாக்குவதற்கான மரபணுவை கொண்டுள்ளன. இது ஒரு முக்கியமான செயல்பாட்டை கொண்டுள்ளது.

இதுபற்றி பொஸ்டனிலுள்ள MIT பல்கலைக்கழகம் ஒரு ஆராய்ச்சி நடத்தியதில், வறண்ட நிலத்தின் மேல் ஒரு துளி மழை நீர் விழும்போது அது காற்று குமிழியையும் சேர்த்தே உட்தள்ளுகிறது. இந்தக் காற்று குமிழிகள் மேலே விரைந்து வந்து வெடிக்கும் போது aerosols எனப்படும் நுண்ணிய மண் துகள்களை வளி மண்டலத்துக்குள்ளே வீசுகின்றன. இவ்வாறு காற்றில் புறப்படும் துகள்களே அந்த புது மண்ணின் வாசனையை காற்றுக்குத் தருகின்றன.

தாவரங்கள்: தாவர இலை முடியில் தாவர இரசாயனங்களாகிய ஜியோஸ்மின், டெர்பின்ஸ் உற்பத்தி செய்யப்படுகிறது. மழை பெய்யும்போது அவை சேதப்படுத்தப்பட்டு அந்த ரசாயனங்களின் கூட்டுப் பொருட்கள் வெளிவருகின்றன. சில செடிகளின் வேர்களில் வாசனை திரவியங்கள் இயற்கையாக உருவாகும். அவை மழையுடன் கலக்கும்போது மண் வாசனை உருவாவதாக சில ஆராய்ச்சியாளர்கள் கூறுகின்றனர். வறண்ட கால நிலையில் தாவரத்தின் வளர்சிதை மாற்றம் தாமதப்படுத்தப்படுகிது. மழை பெய்யும்போது அவை புத்துணர்வு அடைவதால் தாவரங்கள் இந்த வாசனையை வெளிவிடுகின்றன.

இதையும் படியுங்கள்:
ஆடலரசனின் குஞ்சிதபாதத்தை மணிமுடியாக சூட்டிக்கொண்ட கூற்றுவ நாயனார்!
மண் வாசனை

மின்னல்: மிஸ்ஸிஸிப்பி பல்கலைக்கழக பேராசிரியர் ‘மரிபெத் ஸ்டோல் ஜென்பர்க்’ விவரிக்கையில், ‘மின்னல் மட்டுமின்றி இடியும், மழையும்தான் இதற்குக் காரணம். குறிப்பாக, மழையானது காற்றின் தரத்தை மேம்படுத்தும், தூசிகள் மற்றும் வாயுக்களில் இருக்கும் திட மற்றும் திரவ வடிவிலான சிறு பொருட்கள் (aerosols) மழை பெய்யும்போது வெளியேறி காற்று சுத்தப்படுத்தப்படுகிறது’ என்கிறார். ஜியோஸ்மின் என்ற ஆற்றல்மிக்க மூலப்பொருளானது அதனை நீர்த்துப்போக செய்தாலும் இந்த வாசனையை கண்டுபிடித்து விடலாம். ஜியோஸ்மினுக்கும், மனிதர்களுக்கும் ஒரு வித்தியாசமான தொடர்பு இருக்கிறது.

உண்மையில் லேசான மற்றும் மிதமான மழை பொழிவுகள் சுற்றியுள்ள வளி மண்டலத்தில் வலுவான, ‘பெட்ரிச்சோர்’ வாசனையை உருவாக்குகின்றன.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com