மேக்கப் பொருட்களை ஏன் அவசியம் மறுசுழற்சி செய்ய வேண்டும் தெரியுமா?

Makeup set
Makeup sethttps://dermacompanies.in

பெண்கள் புதிது புதிதாக உடைகளை வாங்குவதைப் போல ஒப்பனைப் பொருட்களையும் அதிக அளவில் வாங்கிக் குவிக்கிறார்கள். பயன்படுத்திய சில பழைய ஒப்பனைப் பொருட்களை மறுசுழற்சி செய்யலாம்.

ஒப்பனைப் பொருட்களை மறுசுழற்சி செய்ய வேண்டிய அவசியம் என்ன?

இளம் பெண்கள் அதிக அளவில் அழகு சாதனப் பொருட்களை பயன்படுத்துகிறார்கள். இவற்றை உபயோகித்து முடித்ததும் குப்பையில் வீசி எறியும்போது அவை சுற்றுச்சூழலுக்கு மாசு உண்டாக்குகின்றன. எனவே அவற்றை மறு சுழற்சி செய்ய வேண்டியது அவசியம்.

ஒப்பனைப் பொருட்களை வாங்கும்போது கவனிக்க வேண்டியவை: அவை மக்கும் தன்மை உள்ளதா என்பதை கவனிக்க வேண்டும். மறுசுழற்சி செய்யக்கூடிய வகையில் இருக்கிறதா என்று பார்க்க வேண்டும். தேவையான பொருட்களை மட்டுமே வாங்க வேண்டும். மலிவு மற்றும் சலுகை விலையில் கிடைக்கிறது என்று பொருள்களை தேவையில்லாமல் வாங்கிக் குவிக்க வேண்டாம். தூரிகைகள் மற்றும் மேக்கப் அப்ளிகேட்டர்களை சுத்தம் செய்வதன் மூலம் நீண்ட காலம் அவற்றை உபயோகப்படுத்தலாம். அழகு சாதனப் பொருட்களின் காலாவதி ஆகும் காலத்தை தெரிந்து கொண்டு அது வரை அவற்றைப் பயன்படுத்தலாம்.

எத்தனை மாதங்கள் அவற்றை உபயோகிக்க வேண்டும் தெரியுமா?

திரவ ஐலைனர் மற்றும் மஸ்காரா மூன்றில் இருந்து ஆறு மாதங்கள்.

ஐ ஷேடோ, க்ரீம் ஷேடோ மற்றும் பிளஷ் - 12 முதல் 18 மாதங்கள்.

உதட்டு பளபளப்பு (லிப் கிளாஸ்) 12 முதல் 18 மாதங்கள்.

லிப் லைனர், உதட்டுச் சாயம் (லிப்ஸ்டிக்) மற்றும் தூள் செய்யப்பட்ட ஐ ஷேடோ- 12 முதல் 18 மாதங்கள்.

மறுசுழற்சி செய்யக்கூடிய ஒப்பனைப் பொருட்கள்: மஸ்காரா குழாய்கள் பெரும்பாலும் பிளாஸ்டிக்கால் ஆனவை. இருப்பினும் சில பிராண்டுகள் மஸ்காரா குழாய்களை மறுசுழற்சிக்கு ஏற்றவாறு வடிவமைக்கின்றனர். அது போன்ற பிராண்டுகளை வாங்க வேண்டும்

ஒப்பனை தூரிகைகள் (மேக்கப் பிரஷ்ஷஸ்): பெரும்பாலும் பிளாஸ்டிக், மரம் அல்லது உலோகத்தால் செய்யப்பட்ட கைப்பிடிகள் இருக்கும். இவை செயற்கை அல்லது இயற்கை இழைகள் உள்ளிட்ட பொருள்களின் கலவையால் தயாரிக்கப்படுகின்றன. பிளாஸ்டிக்கைத் தவிர்த்து மரம் அல்லது உலோகத்தால் செய்யப்பட்ட தூரிகைகளின் கைப்பிடிகளை மறுசுழற்சி செய்யலாம்.

நெயில் பாலிஷ் பாட்டில்கள்: பிளாஸ்டிக்கால் ஆன நெயில் பாலிஷ் பாட்டில்களை விட கண்ணாடி பாட்டில்களை வாங்க வேண்டும் இவற்றை எளிதாக மறுசுழற்சி செய்யலாம்.

காம்பேக்ட் பவுடர் கேஸ்: கண்ணாடி இல்லாத வெறும் காம்பேக்ட் பாக்ஸ்களை மறுசுழற்சி செய்யலாம்.

உதட்டுச் சாயக் குழாய்கள் (லிப் பாம்கள்): சில குறிப்பிட்ட பிராண்டுகள் லிப்பாம்களை மறுசுழற்சிக்கு ஏற்றவாறு தயாரிக்கின்றனர். அதுபோன்ற பொருட்களைப் பார்த்து வாங்க வேண்டும்.

கண்ணாடி பாட்டில்கள் மற்றும் ஜாடிகள்: சில வாசனை திரவியங்கள் சரும பராமரிப்பு பொருட்கள் போன்றவை கண்ணாடியால் செய்யப்பட்டிருக்கும். இவற்றை உள்ளூர் மறுசுழற்சி மையங்களில் கொண்டு போய் சேர்க்கலாம்.

காகித பேக்கேஜிங்: சில மேக்கப் தட்டுகள் மற்றும் பெட்டிகள் அட்டையால் செய்யப்பட்டிருக்கும். இவற்றை மிக எளிதாக மறுசுழற்சிக்கு பயன்படுத்தலாம்.

இதையும் படியுங்கள்:
ஒருவரின் வாழ்க்கை மாறுவது எதனால்? யார் காரணம்?
Makeup set

சில மேக்கப் பொருட்கள், ஐலைனர்கள் மற்றும் லிப் லைனர்கள் போன்றவை உலோகத்தால் செய்யப்படுகின்றன. உதாரணமாக அலுமினியத்தால் செய்யப்பட்ட லிப் பாம்கள் மற்றும் லிப் லைனர்கள் மறுசுழற்சிக்கு ஏற்றவை.

நமது உடலை அழகுபடுத்துவதில் மட்டும் கவனம் செலுத்தினால் போதாது. நாம் வாழும் இந்த பூமியும் நாம் வாழ்வதற்கு ஏற்ற வகையில் அழகாகவும் ஆரோக்கியமாகவும் இருக்க வேண்டும். நமக்கு பின்னர் வரும் சந்ததிகளும் வாழ ஏற்ற இடமாக இருக்க வேண்டும். இந்த நோக்கத்தை அவசியம் நாம் இவற்றை வாங்கும்போது கவனத்தில் கொள்ள வேண்டும்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com