
நெடுஞ்சாலையில் பயணம் செய்யும்போது செவ்வரளி செடிகள் சாலை சென்டர் மீடியனில் இருப்பதை பார்த்திருப்பீர்கள். இந்த செடிகள் ஏன் நடப்பட்டுள்ளது, யாரால் தினசரி பராமரிக்கப்பட்டு பச்சை பசுமையாக வளர்க்கப்படுகிறது என்று தெரியுமா?
நெடுஞ்சாலையில் எப்போதும் வாகன போக்குவரத்து அதிகமாக இருக்கும். இந்த வாகனங்களில் இருந்து வெளியேறும் புகையில் இருந்து கார்பன் நச்சுக்கழிவு அதிகளவு வெளியேறும். இந்த நச்சுக்கழிவை காற்றில் உறிஞ்சி தூய ஆக்சிஜனாக மாற்றித்தரும் பண்பு தாவரங்களுக்கு உண்டு. இது செவ்வரளி செடிக்கு இன்னும் கூடுதலாக இருக்கம். இதன் இலைகளின் அடர்த்தி தன்மை இதற்கு ஒரு காரணம். இது காற்றில் உள்ள கார்பன் கழிவை எளிதில் உள்வாங்கும். செவ்வரளி பொதுவாகவே வறண்ட பகுதிக்கு ஏற்ற தாவரமாகும். இதனால் யரும் தண்ணீர் ஊற்றி பராமரிக்கவேண்டிய அவசியம் இல்லை. மண் அரிப்பை கட்டுப்படுத்துவதிலும், இரைச்சல் மாசுவை கட்டுப்படுத்துவதிலும் செவ்வரளி செடி முக்கியப்பங்கு வகிக்கிறது.
இது வாகனத்தின் முகப்பு விளக்கை எதிரே வரும் வாகனத்தில் படராமலும் தடுக்கிறது. பொதுவாக செவ்வரளி இலைகளை ஆடு, மாடு என எதுவும் சாப்பிடாது.
சில நேரங்களில், வாகனங்கள் வேகக் கட்டுப்பாட்டை இழந்து நெடுஞ்சாலை தடுப்பின் மீது மோதியும் விபத்து ஏற்படுவதுண்டு. அரளிச் செடிகள் அடர்த்தியாக வளர்ந்திருப்பதால் தடுப்புச் சுவரை மோதும் வாகனத்தின் வேகம் ஓரளவு குறைக்கப்படுகிறது. இதனால் வாகனத்திற்கு ஏற்படும் சேதமும், அதில் பயணிக்கும் நபர்களுக்கு ஏற்படும் காயங்களும் குறைவாக இருக்கின்றன என்றும் சொல்லலாம். இவை மட்டுமல்ல, அரளிச் செடிகள் ஒலி மாசுபாட்டையும் கட்டுப்படுத்துகிறது என்று கேள்விப்பட்டதும் மிகவும் வியப்பாக இருந்தது. நெடுஞ்சாலைகளில் வாகனங்களின் ஒலி மாசு என்பது எப்பொழுதும் அருகிலுள்ள குடியிருப்புப் பகுதிகளை மிகவும் பாதிக்கும். அரளிச் செடிகள் இயற்கையான ஒலித்தடைகளாக செயல்பட்டு ஒலி மாசை குறைக்கிறது. இதனால் சுற்றுப்புறத்தை பாதிக்கும் ஒலி மாசு வெகுவாக குறைகிறது.
அழகு மட்டுமே பிரதானம் என்பதால் செவ்வரளி செடியை யாரும் ஒடிக்கமாட்டார்கள். இதனால் தான் நெடுஞ்சாலை ஓரங்களில் செவ்வரளி செடிகள் வளர்க்கப்படுகிறது. அரளி செடியை யாரும் வீட்டில் வளர்க்கமாட்டார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.