சிலந்தி ஏன் விவசாயிகளின் தோழன்?

Spider the farmer's friend.
Spider the farmer's friend.

விளைநிலங்களுக்கு தீங்கு விளைவிக்கும் பூச்சிகளை உண்டு விவசாயிகளின் தோழனாய் விளங்கும் சிலந்திகள்.

பொதுவாக விவசாயிகளின் தோழன் என்று மண்புழு அழைக்கப்படுகிறது. ஆனால் மண்புழு மட்டும் விவசாயிகளுக்கு தோழன் கிடையாது. சிலந்திகளும் விவசாயிகளுக்கு நல்ல தோழனே. ஆம், விவசாயத்திற்கு தீங்கு விளைவிக்கும் பல்வேறு வகையான பூச்சிகள், புழுக்களை சிலந்தி உணவாக உட்கொண்டு பயிர்களின் வளர்ச்சியை பாதுகாக்கிறது. மகசூல் கூட உதவி செய்கிறது.

விளைநிலங்களில் காணப்படும் சிலந்திகள் அனைத்தும் நன்மை தரும் சிலந்தி வகைகளை ஆகும். 6 குடும்பத்தைச் சேர்ந்த 30 வகையான சிலந்திகள் விவசாய பயிர்களை பாதுகாக்க மிகப்பெரிய உழைப்பை செலுத்துகின்றன. தீங்கு விளைவிக்கும் பூச்சிகள், புழுக்கள் குறிப்பாக தத்துப்பூச்சி, இலை மடக்கு புழு, தண்டு துளைப்பான், இலைகளை உண்ணும் புழு ஆகியவற்றை சிலந்தி உணவாக சாப்பிட்டு உதவுகிறது. இதனால் பூச்சி மருந்து அடிக்க தேவை இல்லை என்பதும் குறிப்பிடத்தக்கது. இதன் காரணமாக உணவு நஞ்சாக மாறாமல் பாதுகாக்க முடியும்.

ஆனால் பெரும்பான்மையான விவசாயிகள் இதைப் பற்றிய புரிதல் இல்லாமல் சிலந்தி விளைச்சலை பாதிக்கிறது என்ற எண்ணத்தில் பூச்சி மருந்துகளை தெளிக்கின்றனர். இதனால் பயிருக்கு நன்மை செய்யக்கூடிய பூச்சிகளும் கொல்லப்படுகின்றது. இவ்வாறு சிலந்தியும் கொள்ளப்படுகிறது.

இதையும் படியுங்கள்:
சிலந்தி கடி பற்றி அறியவேண்டிய அவசியத் தகவல்கள்!
Spider the farmer's friend.

சிலந்திகள் வாழும் விளை நிலங்களில் பூச்சி மருந்து அடிக்க தேவை இல்லை. பெருமளவில் பூச்சி மருந்துகளை தெளிப்பதை குறைப்பது சிலந்திகளை பாதுகாத்து நெற்பயிற் இயற்கையான முறையில் செழிப்பாக வளர உதவும்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com