வெடிக்கும் ஐஸ்லாந்து எரிமலைகள்
வெடிக்கும் ஐஸ்லாந்து எரிமலைகள்

ஐஸ்லாந்தில் ஏன் அடிக்கடி எரிமலைகள் வெடிக்கின்றன தெரியுமா?

Published on

ட ஐரோப்பிய நாடான ஐஸ்லாந்தில் அடிக்கடி எரிமலைகள் வெடிக்கின்றன. கடந்த 9 மாதங்களில் மட்டும் ஐந்தாவது முறையாக சமீபத்தில் எரிமலை வெடித்துள்ளது. இது 50 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு எரிமலை குழம்பு வெளியேறியிருப்பதாகக் கூறப்படுகிறது.

ஐஸ்லாந்தில் அடிக்கடி எரிமலை வெடிப்பதற்கான காரணங்கள்:

ஐஸ்லாந்தின் இருப்பிடம்: ஐஸ்லாந்து மத்திய அட்லாண்டிக் ரிட்ஜில் அமைந்துள்ளது. மத்திய அட்லாண்டிக் ரிட்ஜ் என்பது அட்லாண்டிக் பெருங்கடலின் தரையில் அமைந்துள்ள ஒரு நடுக்கடல் முகடு ஆகும். இது உலகின் மிக நீளமான மலைத்தொடரின் ஒரு பகுதி ஆகும். இது இரண்டு பெரிய டெக்டோனிக் தட்டுகளுக்கு இடையிலான எல்லை ஆகும். அவை வட அமெரிக்கா தட்டு மற்றும் யுரேசிய தட்டு. இந்த தட்டுகள் மெதுவாக நகர்ந்து பூகம்பங்கள் மற்றும் எரிமலை வெடிப்புகள் உட்பட பல புவியியல் செயல்பாடுகளை உருவாக்குகின்றன.

டெக்டோனிக் தட்டுகள்: டெக்டோனிக் தட்டுகள் என்பவை பூமியின் மேலோட்டத்தின் பெரிய துண்டுகள் ஆகும். அவை  தன் கீழ் உருகிய அடுக்கில் மெதுவாக நகர்ந்து கொண்டிருக்கும். அவற்றின் இயக்கங்களே பூகம்பங்கள், எரிமலை வெடிப்புகள் மற்றும் மலைகள் உருவாக்கம் ஆகியவற்றை ஏற்படுத்துகின்றன. ஐஸ்லாந்தில் சுமார் 130 எரிமலைகள் உள்ளன. இவை நாடு முழுவதும் பரவியுள்ள பல்வேறு எரிமலை அமைப்புகளின் ஒரு பகுதியாகும். இவற்றில் தோராயமாக 30 செயலில் இருப்பதாகக் கருதப்படுகிறது. நடு அட்லாண்டிக் ரிட்ஜில் ஐஸ்லாந்தின் இருப்பிடமாததால் பூமியில் மிகவும் எரிமலைச் செயலில் உள்ள இடங்களில் ஒன்றாகும். ஐஸ்லாந்தில் உள்ள மிகவும் பிரபலமான எரிமலைகளில் ஹெக்லா, கட்லா, எய்ஜாஃப்ஜல்லஜோகுல் மற்றும் கிரிம்ஸ்வொட்ன் ஆகியவை அடங்கும்.

மாக்மா இயக்கம்: இந்த டெக்டோனிக் தட்டுகள் விலகிச் செல்லும்போது பூமியின் ஆழத்திலிருந்து மாக்மா என்கிற உருகிய பாறை அந்த இடைவெளியை இட்டு நிரப்ப மேலே எழுகிறது. மாக்மாவின் இந்த இயக்கம் பூமியின் மேலோட்டத்தில் ஒரு கடுமையான அழுத்தத்தை உருவாக்குகிறது. இதுவே எரிமலை வெடிப்புகளுக்கு வழிவகுக்கிறது.

அதிகரித்த செயல்பாடு: சமீபத்தில் ஐஸ்லாந்தின் கீழ் மாக்மா செயல்பாடு அதிகரித்துள்ளது. மேலும், மாக்மா மேற்பரப்பு நோக்கி உயர்கிறது. இது பூமிக்குள் ஏற்படும் இயற்கையான சுழற்சிகளின் காரணமாக இருக்கலாம். இவை பூமியின் மேற்பரப்பில் அதிக அழுத்தத்தை உருவாக்குகின்றன.

இதையும் படியுங்கள்:
கெஃபிருக்கும் தயிருக்கும் உள்ள வித்தியாசங்களும், நன்மைகளும்!
வெடிக்கும் ஐஸ்லாந்து எரிமலைகள்

புவியியல் ஹாட்ஸ்பாட்: ஐஸ்லாந்து ஒரு புவியியல் ஹாட்ஸ்பாட்டாக அமைந்துள்ளது. ஹாட்ஸ்பாட் என்பது பூமியின் மேற்பரப்பில் வெப்பமாக இருக்கும் ஒரு பகுதியாகும். அது அடிக்கடி எரிமலை வெடிப்பதற்கு வழிவகுக்கிறது. ஹாட்ஸ்பாட் மற்றும் மிட் மத்திய அட்லாண்டிக் ரிட்ஜ் ஆகியவற்றின் கலவை ஐஸ்லாந்தை அடிக்கடி எரிமலை வெடிக்கும் நாடாக மாற்றுகிறது. காலப்போக்கில் பூமியின் மேற்பரப்புக்கு அடியில் அழுத்தம் உருவாகிறது. அழுத்தம் அதிகமாகும் போது பூமியின் மேல் ஓட்டில் விரிசல்கள் ஏற்படலாம். இது வெடிப்புக்கு வழிவகுக்கும். ஐஸ்லாந்தில் சமீபத்தில் எரிமலை வெடிப்புகள் அதிகரித்திருப்பது அதிக அழுத்தம் மற்றும் வெடிப்பின் காரணமாக இருக்கலாம் என்று கூறப்படுகிறது.

இயற்கை மாறுபாடு: எரிமலை செயல்பாடுகள் இயற்கையாகவே காலப்போக்கில் மாறுபடும். அவை வெடிக்கும் காலங்கள் மற்றும் அமைதியான காலங்கள் என அவற்றின் போக்கில் மாறுதல்கள் ஏற்படும். கடந்த 9 மாதங்களில் ஐஸ்லாந்தின் இயற்கையான எரிமலை சுழற்சியில் அதிகரித்த செயல்பாடுகளின் காரணமாக கூட அடிக்கடி எரிமலை வெடித்திருக்கலாம்.

logo
Kalki Online
kalkionline.com