கெஃபிருக்கும் தயிருக்கும் உள்ள வித்தியாசங்களும், நன்மைகளும்!

கெஃபிர், தயிர்
கெஃபிர், தயிர்
Published on

கெஃபிர் (Kefir) என்பது பாலில் இருந்து தயாரிக்கப்படும் ஒரு புளித்த உணவு வகையாகும். பார்க்க தயிர் போலவே இருக்கும். ஆனால், தயிரை விட அதிக புளிப்பு மற்றும் லேசான கசப்பு சுவையில் இருக்கும்.

தயிருக்கும் கெஃபிருக்கும் உள்ள வித்தியாசங்கள்:

தயிர்: பாலை காய்ச்சி ஆற வைத்து கால் ஸ்பூன் தயிர் சேர்த்து, உறை ஊற்றி சில மணி நேரம் கழித்து உருவாவது தயிர். இதன் நொதித்தல் செயல்முறை குறுகியது. நாலிலிருந்து ஆறு மணி நேரத்தில் தயிர் உருவாகி விடும். இது பாக்டீரியாவை மட்டுமே உள்ளடக்கிய ஒரு செயல்.

கெஃபிர்: இது பாக்டீரியா மற்றும் ஈஸ்ட் ஆகியவற்றின் கலவையாகும். கெஃபிர் தானியங்களுடன் பாலை புளிக்க வைப்பதன் மூலம் தயாரிக்கப்படுகிறது. இதன் நொதித்தல் செயல்முறை சற்றே நீண்டது. இது தயார் ஆவதற்கு 12ல் இருந்து 24 மணி நேரம் எடுத்துக்கொள்ளும்.

லாக்டோஸ்: தயிரைக் காட்டிலும் குறைவான லாக்டோஸ் கெஃபிரில் உள்ளது. தயிரில் அதிக லாக்டோஸ் உள்ளது. மேலும், இதில் புரதம் அதிகம். வைட்டமின் பி12 மற்றும் பிற ஊட்டச்சத்துக்கள் கொண்டது. கெஃபிரில் புரோபயாட்டிக்குகள் அதிகம். தயிரைக் காட்டிலும் குறைவான புரதம் இருக்கும்.

பயன்பாடு: கெஃபிரை ஒரு பானமாக உட்கொள்ளலாம். ஸ்மூத்தீஸ், சாலட் டிரெஸ்ஸிங்  மற்றும் சூப்புகளுக்கு பயன்படுத்தலாம். தயிரை சாதம், பழங்கள் அல்லது தேனுடன் உண்ணலாம். சமையல் மற்றும் பேக்கிங்கில் பயன்படுத்தப்படுகிறது. சாஸ் மற்றும் இனிப்புகளிலும் பயன்படுத்தப்படுகிறது.

கெஃபிரின் நன்மைகள்:

1. இதில் புரோபயாட்டிக்குகள் நிறைந்துள்ளன. இவை ஆரோக்கியமான குடல் நுண்ணுயிரிகளை பராமரிக்க உதவும். செரிமானத்தை மேம்படுத்தும், நோய் எதிர்ப்பு செயல்பாட்டை அதிகரிக்கும். இரைப்பை, குடல் பிரச்னைகளின் அபாயத்தை குறைக்கும்.

2. குடல் வீக்கம், மலச்சிக்கல் போன்றவற்றை சரி செய்யும். இது லாக்டோசை உடைக்க உதவுகிறது. மேலும், ஜீரணத்திற்கு ஏற்றது.

3. நோய் தொற்றுகளை எதிர்த்துப் போராடும் திறனை உடலுக்குத் தருகிறது. அதனால் நோய் எதிர்ப்பு மண்டலத்தை வலுப்படுத்தும். இதில் வைட்டமின் டி கால்சியம் மற்றும் மெக்னீசியம் போன்ற ஊட்டச்சத்துக்கள் உள்ளன. இவை உடலின் ஆற்றலுக்கு உதவுகின்றன.

4. எலும்பு ஆரோக்கியம் மேம்படுகிறது. இதில் கால்சியம், வைட்டமின் k2 மற்றும் வலுவான எலும்புகளை பராமரிக்க உதவும் ஊட்டச்சத்துக்களைக் கொண்டது. வழக்கமாக இதை எடுத்துக்கொண்டால் ஆஸ்டியோபோரோசிஸ் மற்றும் எலும்பு முறிவுகளின் அபாயத்தை குறைக்க உதவும்.

5. கெஃபிரில் அழற்சி எதிர்ப்புப் பண்புகள் உள்ளதால் உடலில் ஏற்படும் வீக்கத்தை குறைக்க உதவுகிறது. இதய நோய் மற்றும் கீல்வாதம் போன்ற நாள்பட்ட நோய்களின் அபாயத்தை குறைக்கும்.

6. இதில் உள்ள புரதச்சத்து முழுமையான உணர்வை தருகிறது. எனவே, எடை மேலாண்மைக்கு உதவுகிறது. ஆரோக்கியமான வளர்சிதை மாற்றத்தையும் அதிகரிக்கிறது.

7. குடல், மூளை இணைப்பு என்பது கெஃபீரில் உள்ள புரோபயோடிக்குகளால் ஆதரிக்கப்படுகின்றன. ஆரோக்கியமான உடல், மன ஆரோக்கியத்தில் நேர்மறையான விளைவுகளை ஏற்படுத்துகின்றன. கவலை மற்றும் மனச்சோர்வின் அறிகுறிகளை குறைக்கும் என்று ஆய்வுகள் கூறுகின்றன.

இதையும் படியுங்கள்:
கண் அசைவைக் கொண்டு மனதைப் படிக்கும் கலை தெரியுமா?
கெஃபிர், தயிர்

8. இதில் பாக்டீரியா எதிர்ப்பு பண்புகள் உள்ளதாலும், இதில் உள்ள புரோபயோடிக்குகளாலும் விஷத்தை ஏற்படுத்தும் சில நோய் கிருமிகள் உட்பட தீங்கு விளைவிக்கும் பாக்டீரியாக்களை எதிர்த்துப் போராட ஏதுவாக உள்ளன.

9. இது சரும ஆரோக்கியத்திற்கு நன்மை பயக்கும். முகப்பரு மற்றும் பிற சருமம் சம்பந்தப்பட்ட பிரச்னைகளைத் தீர்க்கும்.

10. கொலஸ்ட்ரால் அளவை குறைக்கும். இரத்த சர்க்கரையை கட்டுக்குள் வைக்கும். எனவே, நீரிழிவு நோயாளிகளுக்கும் இதய நோயாளிகளுக்கும் ஏற்றது.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com