
வளர்ப்புப் பிராணிகளில் நன்றி உள்ள ஜீவனாக நாய் கருதப்படுகிறது. வீட்டுக்குக் காவலாக வளங்கும் நம் வளர்க்கும் நாய்கள் அதிக ஆண்டுகள் நம்மோடு வாழ்ந்தால் சந்தோஷம்தான். அதிக ஆண்டுகள் உயிர் வாழும் சில வகை நாய் இனங்கள் குறித்து இந்தப் பதிவில் காண்போம்.
Chihuahua: இந்த இன நாய்கள் சுமார் 17ஆண்டுகள் வரை உயிர் வாழக்கூடியவை. நல்ல தோழமையுடன் பழகக் கூடியவை. சுலபமாக பராமரிக்கக் கூடியவை. நல்ல உணவு மற்றும் விலங்கு டாக்டர் செக் அப் மூலம் அதிக நாட்கள் இவை உயிர் வாழக் கூடியது.
Toy poodle: இந்த வகை நாய்கள் 14ல் இருந்து 18 வருடங்கள் வரை உயிர் வாழக் கூடியவை. இதன் உடலில் புசு புசுவென்று உள்ள முடி அலர்ஜி எதிர்ப்பாக இருப்பதால் அலர்ஜி பிரச்னை உள்ளவர்களை இது பாதிக்காது. அளவில் சிறியதாக இருக்கும் இது, மிகவும் உண்மையாக இருக்கும்.
Dachshund: நீளமான உடம்பும் குட்டையான கால்களும் உள்ள இந்த வகை நாய்கள் 12ல் இருந்து 14 ஆண்டுகள் வரை வாழும். குழந்தைத்தனமான விளையாடக் கூடியதாக இருந்தாலும் மிகவும் அடம் பிடிக்கும் குணம் கொண்டவை.
Shih Tzu: இந்த வகை நாய்கள் 13லிருந்து 16 ஆண்டுகள் வரை உயிர் வாழக்கூடியது. அபார்ட்மெண்டில் வைத்து வளர்க்க ஏற்றது. நடைப்பயிற்சிக்கு அழைத்துச் சென்றாலும் இதன் பாசமான குணத்தால் எப்போதும் எஜமானரோடு இருப்பதையே விரும்பும். எந்த சூழ்நிலையிலும் ஒத்துப்போகக் கூடியது.
Lhasa Apso: திபெத்தில் காணப்படும் இந்த வகை நாய்கள் 15 ஆண்டுகள் வரை வாழக் கூடியது. முடிகளுடன் கூடிய உடல் அமைப்பைக் கொண்ட இது, சுதந்திரமாக இயங்கக் கூடியது.
Jack Russell Terrier: பலம் வாய்ந்ததாகக் கூடிய இந்த நாய்கள் 16 ஆண்டுகள் வாழக் கூடியவை. சாகசங்களில் ஆர்வம் உடைய இது மிகவும் புத்திசாலியானது.
Maltese: சாதுவான இந்த வகை நாய்கள் 15 வருடங்கள் வரை வாழக் கூடியது. விளையாட்டாகவும் பாசமாவும் இருக்கக் கூடியது. எஜமான விசுவாசம் அதிகமாக உள்ள இனம்.
Yorkshire Terrier: சிறிய அளவில் இருக்கும் இந்த வகை நாய்கள் 16 வருடங்கள் வாழக் கூடியது. இதன் உடலில் உள்ள முடி அலர்ஜியை ஏற்படுத்தாது. தன்னை வளர்ப்பவரோடு பாசமாகவும் விசுவாசமாகவும் உள்ள நாய்கள்.
Miniature Schnauzer: 15 வருடங்கள் வரை வாழக்கூடிய இந்த நாய்கள், அபார்ட்மெண்ட்களில் வளர்க்கக் கூடியவை. எஜமானரிடம் நன்கு தோழமையோடு பழகும்.
Pomeranian: சிறிய அளவில் புசுபுசு முடியுடன் உள்ள இது 16 வருடங்கள் வரை வாழக் கூடியது. மிகவும் ஜாக்கிரதை உணர்வு கொண்டது. இதை அடிக்கடி பிரஷ் செய்து பராமரிக்க வேண்டும்.