நம் இந்திய நாட்டில் உள்ள காடுகளிலும், மலைப் பாங்கான பிரதேசங்களிலும் பல வகையான மிருகங்கள் வாழ்ந்து வருகின்றன. அவற்றில் சிலவற்றை மிருகக்காட்சி சாலைகளில் நாம் பார்த்திருக்கக் கூடும். சில மிருகங்கள் பார்ப்பதற்கு மிகவும் அரிதானவை. அப்படிப்பட்டவற்றில் பத்து வகையான விலங்குகள் மற்றும் அவை வாழும் இடங்கள் பற்றிய விவரங்களை இப்பதிவில் பார்க்கலாம்.
இந்தியன் ஸ்பாட்டட் செவ்ரோடைன் (The Indian Spotted Chevrotain) எனவும் அழைக்கப்படும் இந்த விலங்கு மான் இனத்திலேயே மிகச் சிறியதாகும். இதன் உயரம் 25-30 cm அளவே உள்ளது. கிழக்கு மற்றும் மேற்குத் தொடர்ச்சி மலைப்பிரதேசத்தில் இவை வாழ்கின்றன.
இந்தியாவிலுள்ள ஒரே ஒரு மனிதக்குரங்கினம் (Ape) இது. நீண்ட கைகளுடன், உடலில் அடர்ந்த முடியுடையது. விதை பரவலுக்கு உதவும் விலங்கு. வட கிழக்கு இந்தியாவின் மழைக் காடுகளில் வாழ்பவை.
கண்கவர் வண்ணங்களுடன், கனமான நீண்ட வாலுடைய அணில். ஒரு மீட்டர் நீளத்திற்கு வளரக்கூடியது. சத்புரா மலைப்பகுதி, மேற்குத் தொடர்ச்சி மலைப்பகுதி மற்றும் கிழக்குத் தொடர்ச்சி மலையின் சில பகுதிகளிலும் இதைக் காணலாம்.
விண்மீன் மண்டலத்திலுள்ள ப்ளூ மற்றும் மஞ்சள் நிற நட்சத்திரம்போல் இதன் உடலிலும் வடிவங்கள் இருப்பதால் இதற்கு இந்தப் பெயர் வந்துள்ளது. இது நீரிலும் நிலத்திலும் வாழக்கூடியது. இதன் வாழ்விடங்கள் அழிக்கப்பட்டு விட்டதால், கேரளாவின் மதிகெட்டான் ஷோலா நேஷனல் பார்க் இதை 'பாதுகாக்கப்பட வேண்டிய முதன்மை இனம்' என்ற பிரிவில் வைத்துள்ளது. மேற்குத் தொடர்ச்சி மலையின் தென் பகுதிகளில் இதைக் காணலாம்.
ஓரிட வாழ்வியாக உள்ள இந்த நாட்டு வகைக் குரங்குகள் சமூக நலனை மேம்படுத்தவும், உடனிருக்கும் மற்ற குரங்குகளுடனான இணைப்பை வலுப்படுத்தவும் பாடுபடக் கூடியவை. கோவாவின் பகவான் நேஷனல் பார்க்கில் இவைகளைக் காணலாம்.
உருமாறும் தன்மை கொண்ட, இரவில் பறந்து திரியும் பறவை இது. தவளையின் அகன்ற வாய் போன்று இதன் அலகு அமைந்திருப்பதால் இதற்கு இப் பெயர் உண்டானது. மேற்குத்தொடர்ச்சி மலையின் வெப்ப நிலைக்காடுகளில் இதைக்காணலாம்.
மூங்கிலை உணவாக உட்கொள்ளும் விலங்கு இது. இந்தியாவில் உச்சபட்ச சட்ட பாதுகாப்பு பெற்ற விலங்குகளில் இதுவும் ஒன்று. டார்ஜிலிங், சிக்கிம், அருணாச்சல பிரதேசம் போன்ற மாநிலங்களில் காணப்படுபவை.
'முதனி' (Primate) எனப்படும் உயர் பாலூட்டி வகையை சேர்ந்தது. பிரைமேட் வகையில் விஷத்தன்மை கொண்ட ஒரே விலங்கு லோரிஸ். இதன் கண்களைச் சுற்றியுள்ள கருப்பு வளையங்களின் காரணமாக இதற்கு இப்பெயர் வந்துள்ளது. டச் (Dutch) மொழியில் 'லோரிஸ்' என்றால் பபூன் என்று அர்த்தம். வடகிழக்கு இந்தியாவின் மழைக் காடுகளில் காணப்படும் விலங்கு லோரிஸ்.
நீரிலும் நிலத்திலும் வாழக்கூடியது இது. இந்த வகை தவளைக்கு மரங்கள் மீது ஏறும் திறனும் உண்டு. இதன் மஞ்சள் நிறம் கொண்ட கால் விரல்கள் மற்றும் பாதத்தை இணைக்கும் ஜவ்வு (Webbing) சிவப்பு நிறம் உடையது. உடல் பச்சை நிறத்தாலானது. மேற்குத் தொடர்ச்சி மலையின் மழைக்காடுகளில் இதைக் காணமுடியும்.
அமைப்பு அறிவித்துள்ள பாதிப்படையக் கூடிய விலங்குகளின் பட்டியலில் இதுவும் ஒன்று. சிதைந்து விழுந்து கிடக்கும் மரங்களின் உள் வெற்றிடப் பகுதியை வாழ்விடமாகக் கொண்டுள்ளது. அடர்த்தியாக உரோமம் வளர்ந்துள்ள, இதன் உடல் மற்றும் தலைப் பகுதி சாக்லேட் நிறம் கொண்டது. கழுத்து மற்றும் நெஞ்சுப் பகுதி, கேனரி என்ற பறவையின் இறகுகளின் நிறமாகிய பளீர் மஞ்சளைக் கொண்டு தனித்துவம் பெற்றுத் திகழ்கிறது. மேற்குத் தொடர்ச்சி மலைக் காடுகளில் இந்த விலங்கைக் காணலாம்.