

கின்னஸ் புத்தகத்தில் இந்த உலகத்திலேயே பயமில்லாத ஒரு விலங்கைப் பற்றி எழுதி வைத்திருக்கிறார்கள். அதன் பெயர்தான் ஹனி பேட்ஜர் (Honey badger) சிங்கத்துடன் சண்டை போடுவது, பாம்மை சாப்பிடுவது போன்ற பயமற்ற செயல்களை செய்யும் இந்த விலங்கு பார்ப்பதற்கு சிறிதாக இருக்கும். பிறகு எப்படி இந்த விலங்கால் பயமில்லாமல் வாழ முடிகிறது என்று கேட்கிறீர்களா? அதைப் பற்றி விரிவாக இந்தப் பதிவில் காண்போம்.
ஆப்பிரிக்கா மற்றும் தென்இந்தியாவில் அதிகமாக காணப்படும் ஒரு வித்தியாசமான விலங்குதான் ஹனி பேட்ஜர்ஸ். 70 அல்லது 80 லட்சம் வருடங்களுக்கு முன்பு Mustelinia என்ற இனத்தில் இருந்து பிரிந்து வந்ததுதான் ஹனி பேட்ஜர்ஸ். இது Weasels இனத்தை சார்ந்தது. இந்த விலங்கு யாருக்குமே பயப்படாமல் சண்டைப்போடும் குணத்தைக் கொண்டது.
தேனியுடைய புழுக்கள், தேன், குட்டி எலிக்கள், மீன்கள் போன்றவை இதனுடைய உணவுகளாகும். இதனுடைய உணவில் அதிகமாக பாம்புகள்தான் இருக்கும். பிளாக் மாம்பா முதல் கிங் கோப்ரா வரையிலான அதிக விஷமுள்ள பாம்புகளை அசால்டாக சாப்பிடும்.
ஹனி பேட்சர் 10 கிலோ முதல் 14 கிலோ வரையிலான எடையைக் கொண்டது. இதன் நீளம் 70 முதல் 80 சென்டி மீட்டர் வரை வளரக்கூடிய தன்மையைக் கொண்டது. உலகத்தில் உள்ள பாலூட்டி மிருகங்களில் இந்த ஹனி பேட்ஜருக்குதான் தடிமனான தோல் உள்ளது. ஒரு சென்டி மீட்டர் வரை அதனுடைய தோல் தடிமனாக இருப்பதால், சிங்கமே வந்து கடித்தாலும் இதற்கு எதுவும் ஆகாது.
அதுமட்டுமில்லாமல் இதன் உடலுக்குள் இயற்கையாகவே Neurotoxins ஐ முறிக்கக்கூடிய Antidote இருக்கிறது. அதனால் பாம்பினுடைய விஷம் எந்த வகையிலுமே இந்த பேட்ஜரை பாதிக்காது. அதிக விஷமாக இருந்தால் சற்று நேரம் மயங்கிவிடும். பிறகு எழுந்து அதே பாம்புடன் சண்டைக்கு போகுமாம் இந்த ஹனி பேட்ஜர். பேட்ஜர் குட்டியாக இருக்கும்போது தேள்களுடன் விளையாடுமாம்.
தேனை சாப்பிடப் போகும்போது தேனிக்கள் இதை கொட்டினாலும் இதற்கு எதுவுமே ஆகாது. அந்த தேனிக்களின் கொட்டு இதனுடைய தோலை தாண்டி போகாது. ஒரு குறிப்பிட்ட தூரத்திற்கு 30 Km/hr இதனால் ஓட முடியும். கிட்டத்தட்ட ஹூசைன் போல்ட் அளவிற்கான ஓட்டம். இதனுடய கைகளில் 35 முதல் 45 மில்லி மீட்டர் நகங்கள் உள்ளது. இதை வைத்து எலி வலைகளை கண்டுப்பிடித்து வேட்டையாடும். இந்த நகத்தை வைத்து இதனால் மரத்தில் ஏற முடியும்.
சிறுத்தை புலிதான் வேட்டையாடி உணவை மரத்தில் ஒளித்து வைக்குமாம். அதை அசால்டாக இந்த ஹனி பேட்ஜர் சென்று சாப்பிடும். பலமுறை கூண்டில் அடைத்து வைக்கப்பட்ட ஹனி பேட்ஜர் தனக்கு கிடைத்த பொருட்களைப் பயன்படுத்தி தப்பித்து ஓடியிருக்கிறது. இது மிகவும் அதிபுத்திசாலியான மிருகமாகும்.
ஹனி பேட்ஜர்ஸ் அதிகமாக தனிமையை விரும்பும் மிருகம். 24 வருடங்கள் இந்த ஹனி பேட்ஜர்ஸ் உயிர் வாழும். பல மிருகங்கள் இந்த ஹனி பேட்ஜருடன் சண்டை போடவே போகாதாம். 'கடுகு சிறுத்தாலும் காரம் குறையாது' என்று சொல்வதற்கு சிறந்த எடுத்துக்காட்டு இந்த ஹனி பேட்ஜர்ஸ்தான்.