

மஸ்ரூம் 65:
மஷ்ரூம் ஒரு பாக்கெட்
கடலை மாவு 2 ஸ்பூன்
கான்பிளார் 1 ஸ்பூன்
அரிசி மாவு 2 ஸ்பூன்
இஞ்சி பூண்டு விழுது 1 ஸ்பூன்
கரம் மசாலா 1 ஸ்பூன்
மிளகாய்த்தூள் 1/2 ஸ்பூன்
உப்பு தேவையான அளவு
மஞ்சள் தூள் 1/2 ஸ்பூன்
எலுமிச்சை சாறு 1 ஸ்பூன்
எண்ணெய் பொரிக்க
மஷ்ரூம்களை நன்கு கழுவி சுத்தம் செய்து சிறிதாக நறுக்கி எடுத்துக்கொள்ளவும். ஒரு பாத்திரத்தில் கடலை மாவு, அரிசி மாவு, கான்ஃப்ளார், மிளகாய்த்தூள், மஞ்சள் தூள், உப்பு, கரம் மசாலா, இஞ்சி பூண்டு விழுது என அனைத்தையும் சேர்த்து கைகளால் நன்கு கலந்து விடவும். எலுமிச்சை சாறு ஒரு ஸ்பூன் விட்டு தேவையான அளவு தண்ணீர் சேர்த்து சிறிது கெட்டியாக கலந்து கடைசியாக மஷ்ரூம்களையும் சேர்த்து நன்கு கலந்துகொள்ளவும்.
அடுப்பில் வாணலியை வைத்து எண்ணெய் விட்டு, எண்ணெய் நன்கு காய்ந்ததும் கலந்து வைத்துள்ள மஷ்ரூம்களை எண்ணையில் உதிர்த்து போட்டு பொன்னிறமாக வறுத்தெடுக்கவும். மிகவும் ருசியான மஷ்ரூம் 65 தயார்.
காளான் மிளகு பிரட்டல்:
காளான் 1 பாக்கெட்
வெங்காயம் 1
தக்காளி 1
இஞ்சி பூண்டு விழுது 1 ஸ்பூன்
சோம்பு பொடி 1/2 ஸ்பூன்
மிளகுத்தூள் 1 ஸ்பூன்
மஞ்சள் தூள் 1/2 ஸ்பூன்
மிளகாய் தூள் 1/2 ஸ்பூன்
கரம் மசாலா 1/2 ஸ்பூன்
உப்பு தேவையானது.
தாளிக்க: கடுகு, சோம்பு, மிளகாய் வற்றல், கறிவேப்பிலை, நல்லெண்ணெய்
காளானை சுத்தம் செய்து நறுக்கி சூடான தண்ணீரில் போட்டு இரண்டு நிமிடங்கள் வைக்கவும். பிறகு தண்ணீரைப் பிழிந்து எடுத்து தனியாக வைக்கவும். வெங்காயம், தக்காளியை பொடியாக நறுக்கிக் கொள்ளவும்.
அடுப்பில் வாணலியை வைத்து சூடானதும் எண்ணெய் விட்டு கடுகு, சோம்பு, மிளகாய் வற்றல் கிள்ளியது, கறிவேப்பிலை சேர்த்து கடுகு பொரிந்ததும் பொடியாக நறுக்கிய வெங்காயம், தக்காளி சேர்த்து வதக்கவும். அத்துடன் இஞ்சி பூண்டு விழுதையும் சேர்த்து மஞ்சள் தூள், மிளகாய்த்தூள், கரம் மசாலாத்தூள் சேர்த்து வதக்கவும். கடைசியாக நறுக்கி வைத்துள்ள காளானை சேர்த்து தேவையான அளவு உப்பு போட்டு மூடி வைத்து 5 நிமிடங்கள் மிதமான சூட்டில் வேகவிடவும். இதற்கு தண்ணீர்விடத் தேவையில்லை.
நன்கு வெந்ததும் சோம்புப் பொடி, மிளகு பொடி, பொடியாக நறுக்கிய கொத்தமல்லி இலை சேர்த்து கிளறி இறக்க மிகவும் ருசியான, சத்தான காளான் மிளகு பிரட்டல் தயார்.
இதனை சாதம், சப்பாத்தி, பூரி போன்ற எல்லா உணவுகளுடனும் சேர்த்து சாப்பிடலாம்.