கோடைகாலத்தில் காரில் பயணிக்கும் போது மிகப்பெரிய நிவாரணம் அளிக்கும் ஒன்றாக இருப்பது காரில் இருக்கும் ஏசிதான். காரில் ஏசி மட்டும் இல்லை என்றால் இந்த வெயில் காலத்தில் பொசுங்கி விடுவோம். இருப்பினும் காரில் ஏசியை ஆன் செய்ததும் அது குளிர்ச்சிஅடைய சிறிது நேரம் நாம் காத்திருக்க வேண்டும். ஆனால் இந்தப் பதிவில் நான் சொல்லப்போகும் சில டிப்ஸை பாலோ செய்வது மூலமாக, காரில் ஏசியை ஆன் செய்ததும் வேகமான குளிர்ச்சியை நீங்கள் அடையலாம்.
உங்கள் காரை நிறுத்தும்போது வெயிலில் நிறுத்தாமல், நிழலான இடத்தைக் கண்டுபிடித்து சூரியஒளி படாமல் பார்க்கிங் செய்யவும்.
வெகு நேரம் நிறுத்தி வைக்கப்பட்டுள்ள காரை ஆன் செய்வதற்கு முன்பாக சிறிது நேரம் ஜன்னல்களைத் திறந்து சூடான காற்று வெளியேற நேரம் கொடுக்கவும். இதன் மூலமாக காற்றில் உள்ளே சிக்கி இருக்கும் வெப்பமான காற்று வெளியேறி ஏசி விரைவாக குளிர்ச்சியைக் கொடுக்க உதவும்.
ஏசியை ஆன் செய்து காரின் உள்ளேயே இருக்கும் காற்றை மறுசுழற்சி செய்வதைவிட, Fresh Air Mode பயன்படுத்தி புதிய காற்று மூலமாக குளிர்விப்பதை இயக்கவும். இதனால் காரின் உள்ளே வெப்பநிலை விரைவாகக் குறையும்.
ஏசியை ஆன் செய்ததும் அதன் குளிர்ச்சித்தன்மையை சரிசெய்து, ஃபேன் வேகத்தை அதிகமாக வைக்கவும். இதன் மூலமாக காற்றோட்டம் அதிகமாகி குளிரூட்டும் திறன் மேம்படுகிறது.
ஏசியை ஆன் செய்ததும் தொடக்கத்தில் வின்ஷீல்டு மற்றும் முன்பக்க டாஷ்போர்டுகளை நோக்கி ஏசியை இயக்கச் செய்யுங்கள். இந்த முறையில் கண்ணாடியில் இருக்கும் அதிக வெப்பம் குளிர்ச்சியடைவதால், காரின் உள்ளே விரைவாக குளிர்ச்சி ஏற்பட அனுமதிக்கிறது.
ஏசியை ஆன் செய்ததும் காரின் உட்புறத்தில் இருக்கும் சூடான காற்றை வெளியேற்ற, பின் இருக்கையில் உள்ள ஜன்னல்களை லேசாகத் திறந்து விடவும்.
சில கார்களில் ‘மேக்ஸ் ஏசி’ என்ற அமைப்பு இருக்கும். இது காரின் ஏசி சிஸ்டத்தை அதிகபட்ச திறனில் செயல்படுத்துகிறது. நீங்கள் ஆரம்பத்தில் ஏசியை இயக்கம்போது இந்த விருப்பம் மிகவும் பயனுள்ளதாக இருக்கும்.
உங்கள் ஏசியின் செயல் திறனை அதிகரிக்க காரின் ஏசி சிஸ்டத்தை முறையாகப் பராமரித்துக் கொள்ளுங்கள். அவ்வப்போது ஏசி பில்டர்களை சுத்தம் செய்து முறையாக பராமரித்தாலே, ஏசியின் குளிரூட்டும் திறன் அதிகரிக்கும்.
இந்த எளிய வழிமுறைகளைப் பின்பற்றி காரில் ஏசியை ஆன் செய்தால் விரைவான குளிர்ச்சியை நீங்கள் அடைய முடியும்.