எளிதில் விவசாய பயிர் காப்பீடு செய்யும் வழிகள்!

Easy ways to get crop insurance
Easy ways to get crop insurance
Published on

யிர் காப்பீடு செய்வது எப்படி? அதன் பிறகு பாதிப்பிற்கான தொகை எவ்வாறு நிர்ணயிக்கப்படுகிறது என்பது குறித்து இந்தப் பதிவில் பார்ப்போம்.

நடப்புப் பருவத்தில் சம்பா மற்றும் தாளடி பயிரிடும் விவசாயிகள் பயிர் காப்பீடு செய்ய தற்போது அதிகம் ஆர்வம் காட்டி வருகின்றனர். இதனால் பயிர் காப்பீடு செய்யும் மையங்களில் அதிக அளவிலான கூட்டம் காணப்படுகிறது. இந்த நிலையில், இன்றுடன் பயிர் காப்பீட்டுக்கான தேதி முடிவடைந்த நிலையில் தமிழ்நாடு வேளாண் துறை அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் மத்திய அரசுக்கு பயிர் காப்பீடு செய்ய கால நீட்டிப்பு வழங்க வேண்டும் என்று கடிதம் எழுதி உள்ளார். இதைத் தொடர்ந்து மத்திய அரசு நவம்பர் 22ம் தேதி வரை பயிர் காப்பீடு செய்ய கால நீட்டிப்பு செய்து உத்தரவிட்டிருக்கிறது.

இனி, பயிர் காப்பீடு செய்வது எப்படி என்று பார்ப்போம். பிரதம மந்திரி பயிர் காப்பீடு திட்டத்தின் கீழ் நெல், கம்பு, சோளம், மக்காச்சோளம், ராகி, உளுந்து, பருத்தி, உருளைக்கிழங்கு, மிளகாய், இஞ்சி, மஞ்சள், மரவள்ளிக்கிழங்கு, வாழை மற்றும் உணவு தானியப் பயிர்கள் மற்றும் எண்ணெய் வித்து பயிர்கள் ஆகியவற்றிற்கு பயிர் காப்பீடு செய்யப்படுகிறது.

பயிர் காப்பீடு செய்ய விரும்பும் விவசாயிகள் அரசுடைமையாக்கப்பட்ட வங்கிகள், வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கங்கள், பொது சேவை மையங்கள், இ சேவை மையங்கள் மூலமாக விண்ணப்பிக்கலாம். மேலும், விண்ணப்பிக்கும்பொழுது முன் விண்ணப்பப் படிவத்தை நிரப்பி கூடுதலாக சிட்டா, அடங்கல் அல்லது விதைப்பு அறிக்கை, வங்கி புத்தகத்தின் முகப்புப் பக்க நகல், ஆதார் நகல் ஆகியவற்றை இணைக்க வேண்டும்.

பயிர் காப்பீட்டை மிக எளிமையாக விண்ணப்பிக்க விரும்புவோர் தாங்களாகவே https://pmfby.gov.in/ என்ற இணைய பக்கத்திற்கு சென்று விவசாய முனை பக்கத்தை கிளிக் செய்துகொள்ள வேண்டும். அதன் பிறகு பெயர், பயிரிடும் பயிரின் விவரம் ஆகியவற்றை பதிவு செய்து, ஆதார் எண், நிலத்தின் சர்வே எண், முகவரி, வங்கிக் கணக்கு விவரம் ஆகியவற்றை பதிவு செய்து உறுதி செய்து கொள்ளலாம். மேலும், அதற்கான பிரிமியத் தொகையையும் உடன் செலுத்த வேண்டும்.

பிரிமியத் தொகையை பயிரிடும் பயிரின் குறைந்தபட்ச மகசூலை கணக்கிட்டு செலுத்தலாம். அல்லது கூடுதலாக மகசூலை கருத்தில் கொண்டு 150 சதவீதம் வரை கூடுதல் காப்பீட்டு பணத்தையும் செலுத்து வசதி உண்டு. இவ்வாறு அனைத்துத் தரப்பு விவசாயிகளும் பிரிமியத் தொகையை செலுத்த முடியும்.

இதையும் படியுங்கள்:
தமிழக நெல் விவசாயத்தின் நன்மை, தீமைகள்: இது உண்மையிலேயே லாபகரமானதா?
Easy ways to get crop insurance

காப்பீடு செய்யும்போது தொகைக்கு ஏற்ப அரசு சார்பில் மானியம் அறிவிக்கப்படுவதும் வழக்கமான நடைமுறையாக மாறியுள்ளது.

இனி, பாதிப்பை கணக்கிடும் முறை குறித்துக் காண்போம். பாதிப்புகளை கணக்கிட பகுதிவாரியாகப் பிரித்து அளவிடப்படும். ஒவ்வொரு பயிருக்கும் வரையறுக்கப்பட்ட பகுதியில் இத்திட்டம் உள்ளது. வருவாய் கிராம அளவில் தற்போது பயிர் காப்பீடு கணக்கீடு செய்யப்படுகிறது. இவ்வாறு வருவாய் கிராமத்தில் குலுக்கல் முறையில் தேர்வு செய்யப்படும் ஐந்து இடங்களில் மகசூல் கணக்கீடு செய்யப்பட்டு, சராசரி மகசூல் மதிப்பிடப்படும். ஒரு குறிப்பிட்ட பயிரின் உத்திரவாத மகசூல் என்பது கடந்த மூன்று அல்லது ஐந்து வருடத்தின் சராசரி மகசூலை உறுதியளிக்கப்பட்ட நஷ்டஈட்டு விகிதத்தோடு 60%, 80%, 90% பெருக்கும்போது கிடைக்கும் மகசூலின் அளவாகும். உத்திரவாத மகசூலை கணக்கிட நெற்பயிருக்கு மூன்று வருட சராசரி மகசூலும் இதர பயிர்களுக்கு ஐந்து வருட சராசரி மகசூலும் கணக்கில் எடுத்துக்கொள்ளப்பட்டு காப்பீட்டுத் தொகை நிர்ணயிக்கப்படுகிறது.

இறுதியாக, மாநில அரசின் 49 சதவீத பங்களிப்புத் தொகையையும், மத்திய அரசின் 49 சதவீத பங்களிப்பு தொகையையும் மற்றும் விவசாயிகளினுடைய 2 சதவீத பங்களிப்புத் தொகையும் சேர்த்து பயிர் காப்பீடு வழங்கப்படுகிறது.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com