கங்காருவிற்கு முன் அஸ்திரேலியாவை ஆக்கிரமித்திருந்தது இந்த உயிரினம்தான்!

Astralia Ancient Animal
Astralia Ancient Animal

ஆஸ்திரேலியா என்றால் பலருக்கும் ஞாபகம் வரும் ஒரே உயிரினம், கங்காருதான். ஏனெனில் அந்தளவுக்கு கங்காரு ஆஸ்திரேலியாவில் அதிகம் உள்ளது. ஆனால், பல மில்லியன் வருடங்களுக்கு முன்னர் வாழ்ந்த ஒரு உயிரினத்தின் தடையமானது, இப்போதைய கங்காருபோலவே அப்போது ஒரு உயிரினம் அதிகளவு வாழ்ந்ததை நிரூபித்துள்ளது.

சுமார் 25 ஆண்டுகளுக்கு முன்பு ஆராய்ச்சியாளர் எலிசபெத் ஸ்மித் மற்றும் அவரது மகள் க்ளைட்டி ஆகியோர் ஓபல் (படிக கற்கள்) சுரங்கத்தின் அமைப்புகளை அப்புறப்படுத்தும் பணிகளை செய்துக்கொண்டிருந்தனர். அப்போதுதான் அவர்கள் 'மோனோட்ரீம்’ உயிரினங்களின் புதைபடிவங்களை கண்டுபிடித்தனர். இந்த உயிரினத்தின் தாடை எலும்பின் புதைபடிவ எச்சங்கள், வடக்கு நியூ சவுத் வேல்ஸில் கண்டறியப்பட்டன.

இங்கு மேலும் பல பண்டைய உயிரினங்கள் மற்றும் அழிந்து வரும் மோனோட்ரீம் இனங்களின் புதைபடிவங்களும் கண்டுபிடிக்கப்பட்டன. அவர்கள் அந்தப் புதைபடிவ மாதிரிகளை ஆஸ்திரேலியா அருங்காட்சியகத்திற்கு நன்கொடையாக வழங்கினர். சுமார் 100 முதல் 120 மில்லியன் வருடங்களுக்கு முன்னர் வாழ்ந்த உயிரினத்தின் அந்த மாதிரிகளை, அவர்கள் ஆய்வு செய்யாமல் பத்திரமாகப் பூட்டி வைத்துவிட்டனர்.

கிடைத்த அந்த நான்கு மாதிரிகளை மீண்டும் இரண்டு ஆண்டுகளுக்கு முன்னர்தான் வெளியில் எடுத்து ஆராய்ச்சியைத் தொடங்கினர்.

அதில் ஒன்று மட்டும் ஏற்கனவே கண்டுப்பிடித்த மாதிரியைப் போல இருந்த புதைபடிவ மாதிரியாகும். மற்ற மூன்றுமே இதுவரை ஒருமுறைக்கூட யாருக்கும் கிடைக்காத மாதிரிகளாகும். மோனோட்ரீம் இனத்தில் மொத்தம் 5 விலங்கு வகைகள் உள்ளன. அதில் ஒன்று ப்ளாட்டிபஸ் வகை, மற்ற நான்கும் எக்கிட்னா வகைகளாகும்.

இதனையடுத்து அந்த மாதிரிகளை ஆராய்ச்சிசெய்துப் பார்த்ததின்மூலம் அந்த பண்டைய உயிரினத்துக்கு 'ஓபலியோஸ் ஸ்ப்ளென்டென்ஸ்’ (Opalios splendens) என்று பெயரிடப்பட்டுள்ளது. இந்த இனம் பிளாட்டிபஸ் மற்றும் எக்கிட்னாவுடன் ஒத்திருப்பதால் 'எக்கிட்னாபஸ்' என்ற செல்லப் பெயர் அதற்கு சூட்டப்பட்டுள்ளது. 'எக்கிட்னா' என்பது இன்று உலகில் வாழும் ஒரே முட்டையிடும் பாலூட்டி இனம். மற்ற இனங்கள் அழிந்துவிட்டன.

இதையும் படியுங்கள்:
டி20 தொடரில் புதிய விதி… இந்தியாவின் லக் இதுலேயே தெரிஞ்சுருச்சேப்பா!
Astralia Ancient Animal

"ஆஸ்திரேலியா, கங்காரு போன்ற மடி கொண்ட மார்சுபியல் (marsupials) இன பாலூட்டி விலங்கினங்கள் வாழ்வதற்கு, நீண்ட காலத்திற்கு முன்பே முட்டையிடும் பாலூட்டிகளான மோனோட்ரீம்களின் நிலமாக இருந்தது என்பதை இந்த புதைபடிவங்கள் காட்டுகின்றன. 100 மில்லியன் ஆண்டுகளுக்கு முன்பு, பூமியில் கடந்த காலத்திலோ அல்லது நிகழ்காலத்திலோ இல்லாத அளவுக்கு லைட்னிங் ரிட்ஜ் பகுதியில் அதிக மோனோட்ரீம்கள் இருந்ததாகத் தெரிகிறது."  என்று ஆராய்ச்சியாளர் ஸ்மித் பெருமிதத்துடன் கூறுகிறார்.

ஆனால், தற்போது கங்காரு இருப்பதைவிடவும், மிக அதிகமாக 100 மில்லியன் ஆண்டுகளுக்கு முன்னர் எக்கிட்னாபஸ் இருந்ததை ஆதாரத்துடன் நிரூபிக்க இன்னும் சில காலங்கள் தேவைப்படும் என்று கூறுகிறார்கள், ஆராய்ச்சியாளர்கள்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com