டி20 தொடரில் புதிய விதி… இந்தியாவின் லக் இதுலேயே தெரிஞ்சுருச்சேப்பா!

Rohit sharma and Virat kohli
Rohit sharma and Virat kohli

டி20 உலகக்கோப்பை போட்டி வரும் ஜூன் 2ம் தேதி நடைபெறவுள்ளது. அந்தவகையில் தற்போது ஒரு புதிய விதி கொண்டுவரப்பட்டுள்ளது.

பொதுவாக விளையாட்டு என்றாலே பல விதிமுறைகள் விதிக்கப்படும். அதிலும் கிரிக்கெட் போட்டி என்றால் சொல்லவே தேவையில்லை, எக்கச்சக்கமான விதிமுறைகள் இருக்கும். ஆனால் அனைத்து வீரர்களுக்கும் அனைத்து விதிமுறைகளும் தெரியுமா என்று கேட்டால் சந்தேகம் தான். இதற்கு உதாரணம், சென்ற ஆண்டு நடைபெற்ற ஐசிசி ஆடவருக்கான உலகக்கோப்பை போட்டியில் கூட ஒரு நிகழ்வு நிகழ்ந்தது. பங்களாதேஷ் அணிக்கு எதிராக நடைபெற்ற போட்டியில் இலங்கை வீரர் ஆஞ்சலோ மேத்யூஸ் timed out முறையில் ஆட்டமிழந்தார்.

அதாவது, ஒரு வீரர் ஆட்டமிழந்த பின் அடுத்த வீரர் களத்திற்கு தாமதமாக வந்தால் time out முறையில் ஆட்டமிழக்க நேரிடும். ஆஞ்சலோ அதற்கான காரணம் கூறியும் கூட அவரை விளையாட அனுமதிக்க வில்லை. ஒரு முன்னணி வீரருக்கே இதுபோன்ற விதிமுறைகள் தெரியவில்லை. இதற்கு காரணம் கிரிக்கெட்டில் அவ்வளவு அதிகமான விதிமுறைகள் உள்ளன என்பதுதான்.

அந்தவகையில் தற்போது டி20 உலகக்கோப்பையில் ஒரு புதிய விதி அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. அது எந்த விதி என்று பார்ப்பதற்கு முன்னர், 4 குரூப்களாகப் பிரிக்கப்பட்ட 20 அணிகளைப் பற்றி பார்ப்போம்.

குரூப் ஏ: இந்தியா, பாகிஸ்தான், அமெரிக்கா, அயர்லாந்து, கனடா.

குரூப் பி: இங்கிலாந்து, ஆஸ்திரேலியா, நமீபியா, ஸ்காட்லாந்து, ஓமன்.

குரூப் சி: மேற்கிந்திய தீவுகள், நியூசிலாந்து, ஆப்கானிஸ்தான், உகாண்டா, பப்புவா நியூ கினியா.

குரூப் டி: தென்னாப்பிரிக்கா, இலங்கை, பங்களாதேஷ், நெதர்லாந்து, நேபாளம்.

முதல் சுற்றில் ஒவ்வொரு குரூப்பிலும் முதல் இரண்டு இடங்களைப் பிடித்த அணிகள் அடுத்த சுற்றுக்கு முன்னேறும். 8 அணிகள் முன்னேறும் நிலையில், அதிலிருந்து நான்கு அணிகள் அரையிறுதி போட்டிகளுக்கு முன்னேறும். பின்னர் இரண்டு அரையிறுதி போட்டிகளில் வெற்றிபெரும் அணிகள் இறுதிபோட்டியில் நேருக்கு நேர் மோதும். இதுதான் நடைமுறை.

இப்போது புதிய விதியைப் பற்றி பார்ப்போம்:

அதிக வெற்றிகளை பெறும் அணிகள் முதல் இரண்டு இடத்தைப் பிடித்திருக்கும். இரண்டு அணிகள் ஒரே அளவில் புள்ளிகள் எடுத்து இருந்தால், யார் அதிக ரன் ரேட்டில் இருக்கிறார்களோ, அவர்கள் முதல் இடத்திலும் இரண்டாவது இடத்திலும் இருப்பார்கள். மேலும் இரண்டுக்கும் மேற்பட்ட அணிகள் ஒரே அளவில் புள்ளிகள் எடுத்து இருந்தால், அவர்கள் மோதிக்கொண்ட போட்டியில் யார் வெற்றி பெற்று இருக்கிறார்கள் என்று பார்க்கப்படும். அதன் அடிப்படையில் இரண்டு அணிகள் தகுதி பெறும்.

இதையும் படியுங்கள்:
Norway Chess 2024: நம்பர் 1 வீரரை வீழ்த்திய பிரக்ஞானந்தா!
Rohit sharma and Virat kohli

ஒவ்வொரு குழுவிலும் இடம்பெறும் ஐந்து அணிகளும் வரிசையாக வைக்கப்பட்டு இருக்கின்றன. குறிப்பாக தற்பொழுது இந்தியா இடம்பெற்று இருக்கும் குழுவில் இந்தியாவின் பெயர் முதல் இடத்திலும் பாகிஸ்தான் பெயர் இரண்டாவது இடத்திலும் இருக்கின்றன. ஒருவேளை மழை வந்து இந்தியா இடம் பெற்றிருக்கும் குழுவில் ஒரு போட்டிக் கூட நடைபெறவில்லை என்றால், அந்தக் குழுவில் முதல் இரண்டு இடங்களில் இருக்கும் இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகள் அடுத்த சுற்றுக்கு முன்னேறும்.

இதுபோல நான்கு குழுக்களிலும் எட்டு அணிகளுக்கு முதல் இரண்டு இடங்கள் கொடுக்கப்பட்டிருக்கின்றன. ஒரு போட்டி கூட லீக் சுற்றில் ஒரு குழுவிலும் நடக்காமல் போகும்போது, தற்போது முதல் இரண்டு இடங்கள் கொடுக்கப்பட்டிருக்கும் அணி அடுத்த சுற்றுக்கு முன்னேறும் புதிய விதி கொண்டுவரப்பட்டிருக்கிறது. ஆனால், மழையும் தொடர்ந்துக் கொட்ட போவதில்லை, லீக் போட்டிகள் நடைபெறாமல் இருக்க வாய்ப்பும் இல்லை. ஆனால், அமெரிக்காவில் இப்போது புயலாமே!

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com