

எல் நினோ… ?
இது என்ன எல் நினோ… ?
இது தட்பவெப்ப நிலையைக் குறித்து செயல்படும் இயக்கம். பசிபிக் பெருங்கடலில் வெப்பநிலை அதிகரித்துக்கொண்டே வருகிறது.
இதன் பாதிப்பு... உலகம் முழுக்கப் பாதிக்கும்.
மத்திய மற்றும் கிழக்கு பிராந்தியங்களில் வெப்பநிலை அதிகரித்து சுட்டு எரிக்கும். பின்னர் பேய் மழை பெய்யும். இவ்வாறு மாறி மாறி வெப்பநிலை தொல்லை கொடுக்கும்.
இந்தியாவைப் பொறுத்தவரை 2026-ல் பாதிப்பு அதிகம் இருக்கும் என ஆராய்ச்சியாளர்கள் கூறுகின்றனர். அதாவது தென் மேற்கு பருவ மழை போதுமான அளவு பெய்யாமல்… வறட்சி நிலை வரலாம் என்று சொல்லி உள்ளனர்.
தென் இந்தியாவில் முக்கியமான பருவம் தென்மேற்கு பருவ மழை காலம். இது பொய்த்துப் போனால் வறட்சி வரும். எந்தச் சாகுபடியும் செய்யமுடியாது.
2026 ஜுன் முதல் செப்டம்பர் வரை வறட்சி காரணமாக தென் இந்தியாவில் பெரும் பிரச்னை வரக்கூடிய வாய்ப்பு உண்டு.
காலநிலை மாற்றம் ஏற்கனவே உலகம் சந்தித்து வருகிறது.
வெயில் காலங்களில் கனமழை பெய்வதும் மழை காலத்தில் பயங்கர வெப்பநிலையும் எதிர்கொண்டு வருகிறது. இதற்கு காரணம் எல் நினோ அல்ல. சுற்றுச்சூழல் மிகவும் மோசமாகி வருவதே காரணம்.
இதை எந்த நாடும் கண்டுகொண்டதாக தெரியவில்லை.
வெறும் கூட்டம் போட்டு செயல்திட்டம் வகுக்காமல் கலைந்து விடுகிறார்கள்.
ஐ. நா. கூட ஒன்றும் செய்ய முடியவில்லை. ஜீ-8 கூட்டங்கள் சம்பிரதாயமாகத்தான் நடைபெறுகிறது.
வருங்கால சந்ததிக்கு நாம் ஒரு பசுமையான உலகை விட்டுவிட்டுச் செல்ல வேண்டும். அது இந்தச் சமூகத்தின் பொறுப்பு.
சரி.. இப்போது இந்தியாவிற்கு வருவோம்... தென் மேற்கு பருவ மழை பெய்யும்விட்டால் தென் இந்தியாவில் வறட்சி பரவலாக இருக்கும். சாகுபடி செய்யமுடியாது.
உணவுப் பற்றாக்குறை ஏற்படும். விவசாயிகள் அதிக துன்பம் அடைவார்கள். விலைவாசி எகிறும். இதனால் நகரங்களில் உணவுத் தட்டுப்பாடு ஏற்படும்.
எனவே, எல் நினோ பாதிப்பு இந்தியாவிற்கு வர வேண்டாம். ஆராய்ச்சி செய்பவர்கள் கருத்து பொய்த்துப்போகட்டும்.
2026 தென்மேற்கு பருவ மழை எப்போதும் போல பெய்யட்டும்.
இங்கு கவனிக்க வேண்டிய விஷயம் உண்டு. உலகம் மாசுபாடு சிக்கலில் தத்தளித்துக்கொண்டு இருக்கிறது. இதற்கு காரணம் பெரிய தொழிற்சாலைகள், ஐரோப்பா, அமெரிக்க குளிர்சாதன பெட்டி கக்கும் விஷ புகை இத்யாதி.
நமது வெளி மண்டலத்தை காக்க ‘ஓசோன்' என்ற திரை உண்டு. ஆனால் மாசு அதிகரித்து அதில் ஓட்டை விழுந்துவிட்டது.
பூமியின் மண் மக்கா குப்பையால் மாசு அடைந்துவிட்டது.
இது பெரிய விஷயம். இதை கண்டுக்கொள்ளாமல் விட்டால் பேராபத்து காத்து இருக்கிறது.
மாசற்ற பூமி மட்டுமே நமக்கு இப்போது தேவை. சுற்றுச்சூழல் பாதுகாப்பு என்பது நமது (எல்லா நாடுகளுக்கும்) முக்கிய அஜென்டாவாக இருக்க வேண்டும்.
எல்லா நாடுகளிலும், எல்லா கண்டங்களிலும் சுற்றுச்சூழல் பாதுகாப்புத்தான் மிகவும் முக்கியமான விஷயம். உலக நாடுகள் இதற்கு ஒரு செயல்திட்டம் தீட்டிச் செயல்பட வேண்டும்.
பூமியைக் காப்போம்…! பசுமை ஆக்குவோம்…! எதிர்காலம் நமதே…!
இந்த கட்டுரையை வாசிப்பதன் மூலம், பருவநிலை மாற்றத்தின் பின்னணியில் எல் நினோ ஏற்படுத்தும் தாக்கங்களை முன்கூட்டியே உணர்ந்து, உணவு மற்றும் நீர் மேலாண்மையில் தங்களை தற்காத்துக்கொள்ளும் அறிவார்ந்த முடிவுகளை வாசகர்கள் பெறுவார்கள். சுற்றுச்சூழல் பாதுகாப்பில் ஒவ்வொரு தனிமனிதனின் பங்களிப்பு எவ்வளவு முக்கியம் என்பதை உணர்வார்கள்.