எல் நினோ குறுந்தொடர்: எல் நினோவின் வரலாறு - அத்தியாயம் 1

எல் நினோ எப்படி அன்றாட வாழ்க்கையைப் பாதிக்கிறது என்பதை சாமான்ய வாசகர்களும், விவசாயிகளும் தெரிந்து, புரிந்துகொள்ள உதவும் குறுந்தொடர்..!
El Niño - Tamil Environment Series
El Niño - Tamil Environment SeriesImage credit: Chatgpt
ஷாராஜ்

இலக்கியவாதி மற்றும் நவீன தாந்த்ரீக ஓவியர். 7 சிறுகதைத் தொகுப்புகள், 6 நாவல்கள், இரு கவிதைத் தொகுப்புகள், ஒரு மொழிபெயர்ப்பு நூல், ஒரு கட்டுரை நூல், ஒரு ஆய்வுக் கட்டுரை நூல், 5 சிறார் கதைத் தொகுப்புகள் வெளியாகியுள்ளன. சிறுகதை மற்றும் நாவல் போட்டிகளில் பல பரிசுகளும், சில விருதுகளும் பெற்றவர். பொருளாதாரம் உட்பட பல்வேறு பிரிவுகளில் இவரது கட்டுரைகள் மற்றும் சிந்திக்க வைக்கும் சிறுகதைகள் கல்கி ஆன்லைனில் தொடர்ந்து இடம் பெற்று வருகின்றன.

Updated on: 

எல் நினோ குறுந்தொடர்: எல் நினோவின் வரலாறு - அத்தியாயம் 1

சமீப காலத்தில் எல் நினோ பற்றிய பேச்சு பத்திரிகை, தொலைக்காட்சி ஊடகங்களில் நடந்துகொண்டிருக்கிறது. இவ்வளவு காலமாக எப்போதாவது பேசப்பட்ட அந்த விஷயம் இப்போது தமிழ்ப் பத்திரிகைகளில் கட்டுரைகளாகவும், தமிழ்த் தொலைக்காட்சிகளில் செய்தி, செய்தித் தொகுப்பு, கலந்துரையாடல் ஆகிய வடிவங்களிலும் இடம்பெறுகிறது. என்றாலும் போதிய அளவுக்கு அது பேசப்படவில்லை என்றும், அதிகமாகப் பேச வேண்டிய தேவை இருக்கிறது என்றும் சூழலியல் விஞ்ஞானிகள், வல்லுநர்கள், ஆர்வலர்கள் கருத்து தெரிவிக்கின்றனர்.

எல் நினோ குறித்த செய்திகள் கடந்த சில ஆண்டுகளாகத்தான் நமது நாட்டில் வெளியாகி மக்களிடம் ஓரளவு கவனம் பெற்றுள்ளது. வானிலை அறிக்கைகளில், விவசாய ஆலோசனைக் கூட்டங்களில், சூழலியல் கருத்தரங்குகளில் — எங்கு பார்த்தாலும் இந்தச் சொல் ஒலிக்கிறது. மழை தாமதமானாலும், அளவுக்கு அதிகமாகப் பெய்தாலும், கோடை வெயில் கடுமையாக இருந்தாலும் — “இது எல் நினோவின் தாக்கம்” என்று சொல்லப்படுவது வழக்கமாகிவிட்டது.

Loading content, please wait...