எல் நினோ குறுந்தொடர்: பசிபிக் கடலில் தொடங்கும் ஆட்டம்! - அத்தியாயம் 2

எல் நினோ எப்படி அன்றாட வாழ்க்கையைப் பாதிக்கிறது என்பதை சாமான்ய வாசகர்களும், விவசாயிகளும் தெரிந்து, புரிந்துகொள்ள உதவும் குறுந்தொடர்..!
El Niño - Tamil Environment Series
El Niño - Tamil Environment SeriesImage credit: Chatgpt
ஷாராஜ்

இலக்கியவாதி மற்றும் நவீன தாந்த்ரீக ஓவியர். 7 சிறுகதைத் தொகுப்புகள், 6 நாவல்கள், இரு கவிதைத் தொகுப்புகள், ஒரு மொழிபெயர்ப்பு நூல், ஒரு கட்டுரை நூல், ஒரு ஆய்வுக் கட்டுரை நூல், 5 சிறார் கதைத் தொகுப்புகள் வெளியாகியுள்ளன. சிறுகதை மற்றும் நாவல் போட்டிகளில் பல பரிசுகளும், சில விருதுகளும் பெற்றவர். பொருளாதாரம் உட்பட பல்வேறு பிரிவுகளில் இவரது கட்டுரைகள் மற்றும் சிந்திக்க வைக்கும் சிறுகதைகள் கல்கி ஆன்லைனில் தொடர்ந்து இடம் பெற்று வருகின்றன.

Updated on: 

எல் நினோ குறுந்தொடர்: பசிபிக் கடலில் தொடங்கும் ஆட்டம்! - அத்தியாயம் 2

முதல் அத்தியாயத்தில் பார்த்த வாக்கர் சுழற்சியை நினைவுகூரவும். பசிபிக் கடலின் மேற்குப் பகுதியில் (இந்தோனேசியா, ஆஸ்திரேலியா ஒட்டி) சூடான நீரின் மேல் காற்று மேலெழும்பி, கிழக்கு நோக்கிப் பயணித்து, தென் அமெரிக்காவின் மேல் குளிர்ந்து இறங்கி, மீண்டும் மேற்கு நோக்கித் திரும்பும் ஒரு தொடர்ச்சியான வளையம். இந்த இயல்பான இயக்கத்தை இயக்கிவைப்பது ‘வணிகக் காற்று’ (Trade Winds) என்று அழைக்கப்படும் ஒரு நிலையான காற்று அமைப்பு. இது மேற்கு நோக்கி வீசி, சூடான நீரைப் பசிபிக் கடலின் மேற்குப் பகுதியில் குவித்து வைத்திருக்கும்.

இக்காற்றுகள் புவியின் வட அரைக்கோளத்தில் வடகிழக்கிலிருந்தும், தென் அரைக்கோளத்தில் தென்கிழக்கிலிருந்தும் பெரும்பாலும் ஒரே சீரான திசையில் வீசக்கூடியவை. இத்தகைய சீரான காற்றுப் பாதையைப் பயன்படுத்தித்தான் பழங்கால மாலுமிகள் தங்களது பாய்மரக் கப்பல்களில் சரக்குகளை ஏற்றிச் சென்று நாடுகளுக்கு இடையே வணிகம் (Trade) மேற்கொண்டனர். அதனாலேயே இதற்கு ‘வணிகக் காற்று’ என்ற பெயர் ஏற்பட்டது.

Loading content, please wait...