எல் நினோ குறுந்தொடர்: இந்தியா மற்றும் தமிழகத்தில் எல் நினோ பாதிப்புகள் - அத்தியாயம் 4

எல் நினோ எப்படி அன்றாட வாழ்க்கையைப் பாதிக்கிறது என்பதை சாமான்ய வாசகர்களும், விவசாயிகளும் தெரிந்து, புரிந்துகொள்ள உதவும் குறுந்தொடர்..!
El Niño - Tamil Environment Series
El Niño - Tamil Environment SeriesImage credit: Chatgpt
ஷாராஜ்

இலக்கியவாதி மற்றும் நவீன தாந்த்ரீக ஓவியர். 7 சிறுகதைத் தொகுப்புகள், 6 நாவல்கள், இரு கவிதைத் தொகுப்புகள், ஒரு மொழிபெயர்ப்பு நூல், ஒரு கட்டுரை நூல், ஒரு ஆய்வுக் கட்டுரை நூல், 5 சிறார் கதைத் தொகுப்புகள் வெளியாகியுள்ளன. சிறுகதை மற்றும் நாவல் போட்டிகளில் பல பரிசுகளும், சில விருதுகளும் பெற்றவர். பொருளாதாரம் உட்பட பல்வேறு பிரிவுகளில் இவரது கட்டுரைகள் மற்றும் சிந்திக்க வைக்கும் சிறுகதைகள் கல்கி ஆன்லைனில் தொடர்ந்து இடம் பெற்று வருகின்றன.

Updated on: 

எல் நினோ குறுந்தொடர்: இந்தியா மற்றும் தமிழகத்தில் எல் நினோ பாதிப்புகள் - அத்தியாயம் 4

இதுவரை பசிபிக் கடலில் தொடங்கும் எல் நினோ, உலகம் முழுவதும் எப்படிப் பரவுகிறது என்பதைப் பார்த்தோம். இனி, நமக்கு மிக நேரடியாகச் சம்பந்தப்பட்ட கேள்விக்கு வருவோம். இது இந்தியாவையும் தமிழகத்தையும் எப்படிப் பாதிக்கிறது?

தென்மேற்குப் பருவமழை மீதான தாக்கம்:

இந்தியாவின் பெரும்பாலான பகுதிகளுக்கு முதன்மையான மழை, தென்மேற்குப் பருவமழை (ஜூன் முதல் செப்டம்பர் வரை) ஆகும். எல் நினோ நிகழும்போது இந்தியக் கோடைப் பருவமழை சராசரிக்குக் குறைவாக இருக்கும் நிகழ்தகவு அதிகரிக்கிறது; ஆனால் எல் நினோ இருந்தாலே கண்டிப்பாக மழை குறையும் என்பதில்லை. இந்திய வானிலை ஆய்வுத் துறையும், எல் நினோவின் தீவிரம் பருவமழையில் ஏற்படும் தாக்கத்தின் அளவைத் தீர்மானிக்கும் என்று கூறுகிறது.

பசிபிக் கடலில் எல் நினோ ஏற்படும்போது, இந்தியப் பெருங்கடலின் மேலுள்ள காற்றழுத்த அமைப்பும் மாற்றமடைகிறது. வங்காள விரிகுடா, அரபிக்கடல் ஆகிய இரண்டிலிருந்தும் ஈரப்பதம் நிறைந்த காற்று இந்தியாவை நோக்கி வருவது பலவீனமடையக்கூடும்.

Loading content, please wait...