

இயற்கை பல வகைகளில் நமக்கு தேவையான, பலவிதமான மருத்துவ குணங்கள் கொண்ட, மற்றும் மருத்துவ பலன்கள் அல்லாத, பல்வேறு வகை சத்துகள் மற்றும் ருசிகளை தரவல்ல காய்கறி, கிழங்கு வகை, பழவகைகள், போன்ற இன்ன பிற பொருட்களை வழங்குகிறது.
இயற்கை நமக்கு இறைவன் கொடுத்த பொியதொரு கொடையாகும். அது வகையில் கருணைக்கிழங்கு, உருளைக்கிழங்கு, சேப்பங்கிழங்கு, சர்க்கரை வள்ளிக்கிழங்கு, முள்ளங்கிக்கிழங்கு, இப்படி அநேக வகைக்கிழங்குகள் நமக்கு பல்வேறு வகைகளில் உணவாகவும் மருந்தாகவும் பயன்படுகின்றன. அவற்றில் இந்த பதிவில் கருணைக் கிழங்கையும், அதன் மருத்துவ தன்மையையும் நாம் காணலாம்.
கருணைக்கிழங்கு நமக்கு சிறந்த உணவாகப் பயன்படும். கிழங்கு வகைகளில் மருத்துவ குணம் கொண்ட கருணைக்கிழங்கில் இருவகை உண்டு. அவை காரும் கருணை, காராக்கருணை, என பிாிக்கப்பட்டுள்ளது.
காராக்கருணையை சேணைக்கிழங்கு என அழைப்பாா்கள்.
கருணைக்கிழங்கை சாதாரணமாக சமைத்துச் சாப்பிட்டால் காரும் தன்மை கொண்டது. அதனால் நன்கு வேகவிட்டு புளி சோ்த்து சமைத்தால் காரும் தன்மை குறையும்.
அதேபோல அரிசி களைந்த நீாினில் வேகவைத்தாலும் காரல் தன்மையானது குறைந்து, நாவில் அரிப்பு நமைச்சல் போன்றவை வரவே வராது. மேலும் இந்த கிழங்கானது சீரண சக்தியை துாிதமாக்கும் வல்லமை கொண்டது.
உடல் உஷ்ணமிகுதியால் வரும் மூலச்சூடு, எரிச்சல் மலச்சிக்கலைத் தீா்க்கவல்லது.
சித்தா ஆயுா்வேத மருத்துவ முறைகளுக்கும் லேகியம் செய்யவும் பயன்படுகிறது.
வாராவாரம் உணவில் சோ்த்து வருவதால் உடல் வலி போக்க வல்லது. நரம்புகளுக்கும் வலு சோ்க்கும் தன்மை கொண்டது.
சில பெண்களுக்கு வெள்ளைப்படுதல் போன்ற நோயிலிருந்து குணமடைய கருணைக்கிழங்கை சாப்பிடலாம்.
கருனைக்கிழங்கை குழம்பில் சோ்ப்பதோடு வேகவைத்து மசியல் செய்தும் சாப்பிடலாம். நல்ல சுவையாகவும் இருக்கும். நாள்பட்ட காய்ச்சல் இருந்தாலும் குணமாகும்.
அதேபோல காராக்கருணையும் (சேணைக்கிழங்கு) சமஅளவு மருத்துவ குணம் கொண்டதே! அதை தோல் சீவி வறுவல், பொாியல் செய்தும் சாப்பிடலாம். காராக்கருணை பொிய அளவில் விளையும். அதை நாம்நமது தேவைக்கேற்ப வாங்கிக் கொள்ளலாம். அதில் காரும் தன்மை கிடையாது.
ஆக, இரண்டு கிழங்குகளையும் அவ்வப்போது உணவில் முறைப்படி சோ்த்துக்கொள்வதே நமது உடல் ஆரோக்கியத்திற்கு நல்லது. இயற்கை நம்மிடம்எதையும் எதிா்பாராமல் நமது உடல் ஆரோக்கியத்திற்கேற்ப பல வகைகளில் உதவி செய்கிறது.
நம்மில் சிலரோ அதை சரிவர உபயோகிக்காமல் மறந்து விடுகிறோம். எனவே இயற்கையை நேசிப்போம் இயற்கை வளங்களை பாதுகாப்போம்!