Environment affecting women
Environment affecting women

பெண்களை பாதிக்கும் சுற்றுச்சூழல் காரணிகள்!

Published on

சுற்றுச்சூழலால் ஏற்படும் மாற்றங்களினால் சில சமயம் பெண்கள் பாதிப்புக்கு உள்ளாகின்றனர். அப்படிப் பெண்களை பாதிக்கும் சில சுற்றுச்சூழல்கள் குறித்து இந்தப் பதிவில் பார்க்கலாம்.

1. விவசாயப் பணி: இந்திய நாட்டில் கிராமங்களில் அதிகமான மக்கள் விவசாயப் பணிகளில் ஈடுபடுகிறார்கள். தொழில் நுட்பங்கள் அதிகரித்த காரணத்தால் அதிகமான மகசூல் பெற வேண்டும் என்ற எண்ணத்தில் இரசாயன உரங்களும், பூச்சிக்கொல்லி மருந்துகளும் பயன்படுத்தப்படுவதன் காரணமாக பெண்களின் உடல் நலன் பாதிக்கப்படுகிறது. விளைபயிர்களுக்கு இரசாயன உரங்கள் இடுவதும் பெரும்பாலான சூழ்நிலைகளில் பெண்கள்தான். எனவே விவசாய வேலைகளை செய்யும்போது அவர்கள் சுவாசிக்கின்ற காற்றும் மாசுபட்டதாக இருக்கின்ற காரணத்தால் பெண்களின் சுற்றுச்சூழல் பாதிக்கப்படுகின்றன.

2. குடிநீர்: மனிதனுக்குத் தேவையான மற்றும் இன்றியமையாத பொருட்களில் குடிநீர் மிகவும் முக்கியமானதாகும். குடிநீரினால் ஒருசில நோய்கள் பரவுகின்றன. எனவே, குடிநீர் கொண்டு வந்து சேர்ப்பதற்காக பல மைல்கள் நடந்து செல்ல வேண்டிய சூழ்நிலை ஏற்படுகிறது. ஒருசில கிராமங்களில் மழைக்காலத்தில் மழைத் தண்ணீரை குளத்தில் சேகரித்து வைத்து குடிதண்ணீராகப் பயன் டுத்திய காலமும் உண்டு. இச்சூழ்நிலையில் பெண்கள்தான் அதிக கவனம் செலுத்தி குடிநீர் சேகரிப்பதில் ஏற்படும் பல்வேறு இடையூறுகளைச் சந்திக்க வேண்டிய கட்டாயம் ஏற்படுகிறது.

3. உணவு சமைத்தல்: குடிநீர் எவ்வளவு முக்கியமானதாகக் கருதப்படுகிறதோ அதுபோல உணவும் இன்றியமையாததாகக் கருதப்படுகிறது. உணவு சமைப்பதில் பெண்கள் முக்கியப் பங்கு வகிக்கின்றனர். கிராமப் புறங்களில் உணவுப் பொருட்கள் சமைப்பதற்கு விறகுகள் பயன்படுத்தப்படுகின்றன. அவ்வாறு விறகுகள் பயன்படுத்துவதால் புகை உருவாக்கப்படுகிறது. புகை ஒரு கழிவுப்பொருள். சமையல் செய்து கொண்டிருக்கும் பெண் புகையைச் சுவாசிக்க வேண்டிய சூழ்நிலை உருவாகிறது. இதன் காரணமாக கண், நுரையீரல், இருதயம் போன்ற உறுப்புகள் பாதிக்கப்படுகின்றன. வீடுகளில் பொருட்களை சுத்தப்படுத்தும்போதும், வீடுகளை சுத்தம் செய்யும் போதும் பெண்களுக்கு சுற்றுப்புறச்சூழலால் பாதிப்பு ஏற்படுகிறது.

4. பொருளாதார சூழல்கள்: ஆண், பெண் சமத்துவத்திற்கு ஒரே வழியாக இருப்பது பெண்களுக்கு பொருளாதார அடிப்படையில் அதிகாரம் அளிப்பதாக இருக்க வேண்டும். பெண்கள் பொதுவாக தொடக்கத் தொழில்களில் மட்டுமே ஈடுபடுகின்றனர். ஊதியத்திலும் பாலின வேறுபாட்டில் ஏற்றத்தாழ்வு ஏற்படுகிறது. எண்ணிக்கையில் அதிகமான பெண்கள் அமைப்பு சாரா தொழில்களில் ஈடுபடுவதால் போதுமான தகவல்கள் கிடைக்கப்படுவதில்லை. இதற்குரிய காரணம், ஊதியமில்லாத உழைப்பாளராகவும், வீட்டு வேலைகளிலும் செயல்படுவதால் புள்ளி விவரங்கள் கிடைக்கப்படுவது இல்லை. பெண்கள் புரியும் ஒருசில பணிகளுக்கு மதிப்பு கணக்கிட முடியாது. பெண்களின் பொருளாதார சூழலில் மாற்றம் அதிகமாக ஏற்படவில்லை.

இதையும் படியுங்கள்:
ஒர்க் அவுட் செய்ய நேரமில்லையா? ஸ்கிப்பிங் செய்யலாமே!
Environment affecting women

5. சமூக இடர்பாடுகள்: சுற்றுச்சூழல் பாதிப்புகள் மற்றும் இயற்கை அழிவுகள், பெண்களை மேலும் பாதிக்கின்றன. குறிப்பாக, வெள்ளம், புயல் போன்றவற்றின்போது பெண்கள் பாதுகாப்பான இடங்களில் தங்க முடியாமல் ஆண்களுக்கு மட்டுமே முன்னுரிமை வழங்கப்படுவதால் பெண்களின் சமூக வாழ்வில் மாற்றம் ஏற்படுகிறது.

6. பாதுகாப்பு இல்லாமை: சில சமூகங்களில் இயற்கை அழிவுகளின்போது பெண்கள் தங்கள் பாதுகாப்பை நிலைநாட்டுவதை கடினமாக உணருகிறார்கள். வெளியே செல்லும்போது அவர்களுக்கு பாலியல் மற்றும் குடும்ப வன்முறை அதிகமாக ஏற்பட்டால் அவர்களின் நிலை மேலும் மோசமாகிறது.

பெண்களின் சுயநலத்தை பாதுகாக்கும் விதமாக சுற்றுச்சூழல் பிரச்னைகளை சமாளிக்க தனிப்பட்ட முயற்சிகள் மற்றும் அரசாங்க நடவடிக்கைகள் அவசியமாகின்றன.

logo
Kalki Online
kalkionline.com