வலைகளை மறுசுழற்சி செய்யும் சுற்றுச்சூழல் ஹீரோ: சிலந்திகள் பற்றி அறியாத உண்மைகள்!

Environmental hero spiders
Spider web
Published on

வீடுகளின் அழையா விருந்தாளிகள் சிலந்திப் பூச்சிகள். அவை சுற்றுச்சூழல் அமைப்புகளில் திறமையான வேட்டையாடும் தன்மை கொண்டவை. அவற்றின் சிறப்பியல்புகள் பற்றி இந்தப் பதிவில் பார்ப்போம்.

பல்வேறு வகையான சிலந்தி வலைகள்: சிலந்திகள் ‘ஸ்பின்னரெட்ஸ்’ எனப்படும் சிறப்பு சுரப்பிகள் மூலம் பட்டு உற்பத்தி செய்கின்றன. இந்த பட்டு, புரதம் சார்ந்த ஒரு பொருளாகும். இது மிகவும் வலிமையானது. அதேசமயம், இலகு ரகமான மீள் தன்மையும் கொண்டது. வெவ்வேறு சிலந்தி இனங்கள், உருண்டை வலைகள், புனல் வலைகள், தாள் வலைகள் என்று பல்வேறு வகையான வலைகளை உருவாக்குகின்றன. ஒவ்வொரு வகையான வலைகளும் சிலந்தியின் வேட்டை மற்றும்  வசிப்பிடத் தேவைகளின் அடிப்படையில் ஒரு குறிப்பிட்ட நோக்கத்திற்காக உருவாக்கப்படுகின்றன.

இதையும் படியுங்கள்:
விவசாயத்தை செழிக்க வைக்கும் மழைநீர் அறுவடை!
Environmental hero spiders

வலுவான மற்றும் மீள்தன்மை: சிலந்தி வலை நம்ப முடியாத அளவிற்கு வலிமையானது. பெரும்பாலும் இது  எஃகு எடையுடன் ஒப்பிடப்படுகிறது. இதை உடைக்காமல் நீட்டிக்க முடியும். மேலும், இது மிகவும் நெகிழ்ச்சியானது. அருகில் பறக்கும் பூச்சிகளைத் தாக்கி வலைக்குள் உறிஞ்ச உதவுகிறது.

பல வலைகளில் இரையைப் பிடிக்க ஒட்டும் பட்டு போன்ற ஒரு பொருள் இதில் பூசப்பட்டிருக்கும். பூச்சிகள் வலைகளுக்கு அருகில் பறக்கும்போது அந்த ஒட்டும் தன்மையான பட்டினால் சிக்கிக் கொள்கின்றன. பின்பு சிலந்திகள் அவற்றை எளிதாகப் பிடித்துத் தின்கின்றன.

மேலும், சிலந்திகள் தங்கள் வலை மூலம் பரவும் அதிர்வுகளுக்கு உணர்திறன் கொண்டவை. இந்த அதிர்வுகள் இரையை கண்டறியவும், அதன் அளவை மதிப்பிடவும், அதை பின்தொடர்வது மதிப்புள்ளதா என்பதை தீர்மானிக்கவும் உதவுகின்றன.

இதையும் படியுங்கள்:
இயற்கை துப்புரவுப் பணியாளர்கள் பிணந்தின்னிக் கழுகுகளின் மகத்துவம்!
Environmental hero spiders

சுய மறுசுழற்சி: சில சிலந்திகள், தங்கள் உடலில் புரதம் தேய்ந்து போகும்போது அல்லது புதிய இடத்திற்குச் செல்ல வேண்டி இருக்கும்போது அதை மறுசுழற்சி செய்ய தங்கள் சொந்த வலையை உண்கின்றன. இது ஆற்றலை சேமிக்கவும் புதிய பட்டு உற்பத்தி செய்யவும் உதவுகிறது.

இரையின் கண்ணுக்குத் தெரியாது: சிலந்தி வலைகள் பெரும்பாலும் மிக மெல்லியதாக இருக்கின்றன. கிட்டத்தட்ட கண்ணுக்குத் தெரியாத நூல் அளவுக்குப் பயன்படுத்தி கட்டமைக்கப்படுகின்றன. இதனால் இரைகளின் கண்ணுக்குத் தெரியாமல் சில சமயங்களில் இருக்கும். அதனால் பொறியில் வந்து அகப்பட்டுக் கொள்கின்றன.

எட்டுக் கால்கள்: ஆறு கால்களைக் கொண்ட பூச்சிகளைப் போல் அல்லாமல், சிலந்திகளுக்கு எட்டுக் கால்கள் உள்ளன. இவை மிகவும் சிறப்பு வாய்ந்தவை. சிறிய முட்கள் போன்ற நகங்கள் கொண்டவை. இவற்றினால் அவை மேற்பரப்புகளை பிடிக்கவும், வலைகளை சுழற்றவும் மற்றும் இரைகளைப் பிடிக்கவும் உதவுகின்றன. சில சிலந்திகளால் காலப்போக்கில் இழந்த கால்களை மீண்டும் உருவாக்க முடியும்.

இதையும் படியுங்கள்:
மலைத் தேனீக்களின் ரகசிய வாழ்க்கை சுழற்சி முறை!
Environmental hero spiders

விஷ கோரைப்பற்கள்: பெரும்பாலான சிலந்திகள் விஷ சுரப்பிகளுடன் இணைக்கப்பட்ட கோரைப்பற்களைக் கொண்டுள்ளன. இந்த விஷ கோரைப்பற்கள் தங்கள் இரைகளை அசைக்க அல்லது கொல்ல விஷத்தை வெளிப்படுத்த உதவுகின்றன. விஷம் இரையின் உள் உறுப்புகளை எளிதில் பாதித்து அவற்றை நுகர்வதற்கு சிலந்திகளுக்கு உதவுகிறது.

எட்டு கண்கள்: சிலந்திகளுக்கு பொதுவாக எட்டுக் கண்கள் இருக்கின்றன. பல கண்கள் இருந்தபோதும் பெரும்பாலான சிலந்திகளுக்கு கண் பார்வை குறைவு. மாறாக, அவை தங்கள் சூழலை உணர வலை அதிர்வுகள், வாசனை மற்றும் தொடுதலை நம்பியுள்ளன.

பல சிலந்திகள் தங்கள் இரைகளை வேட்டையாட தங்களை மறைத்துக்கொள்ளும் திறன் பெற்றவை. பதுங்கியிருந்து தாக்கும் தந்திரங்களை பயன்படுத்துகின்றன. இரையை நெருங்கும் வரை ஒளிந்திருந்து தாக்குகின்றன.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com