எத்தனால் எரிபொருள் பற்றி உங்களுக்குத் தெரியுமா? இது ஒரு சாராயம்! 

Ethanol Fuel.
Ethanol Fuel.

சமீப ஆண்டு காலமாகவே புதைப்படிவ எரிபொருளான பெட்ரோல் டீசல் போன்றவற்றின் பயன்பாட்டை குறைக்கும் விதமாக இந்தியா குறிப்பிடத்தக்க முன்னேற்றங்களை செய்து வருகிறது. இதில் அதிகம் கவனம் பெற்ற ஒரு நம்பிக்கைக்குறிய மாற்றாக எத்தனால் எரிபொருள் இருக்கிறது. கரும்பு, சோளம் அல்லது செல்லுலோஸ் போன்ற புதுப்பிக்கத்தக்க மூலங்களில் இருந்து உற்பத்தி செய்யப்படும் எத்தனால் அபரிமிதமான ஆற்றலைக் கொண்டுள்ளது. எனவே எத்தனால் பயன்பாட்டின் சாதகங்கள் பற்றி இந்த பதிவில் தெரிந்து கொள்ளலாம். 

பல நாடுகளைப் போலவே இந்தியாவும் புதைப்படிவ எரிபொருட்களை சார்ந்திருக்கும் நிலையை மாற்ற நினைக்கிறது. இதற்கு எத்தனால் எரிபொருள் ஒரு சிறந்த தீர்வாகும். ஏனெனில் இதை பெட்ரோலுடன் கலப்படம் செய்யும்போது, அதிகப்படியான பெட்ரோலியம் சார்ந்த எரிபொருட்களின் நுகர்வு குறைகிறது. எனவே இதன் மூலமாக இந்தியாவின் எரிசக்தி பாதுகாப்பு மேம்பட வாய்ப்புள்ளது.

இந்தியாவின் மிகப்பெரிய பலங்களில் அதன் பறந்து விரிந்த விவசாய வளம் ஒன்றாகும். எத்தனால் உற்பத்திக்கான நம்பத் தகுந்த மூலப்பொருட்களை வழங்கும் கரும்பு உற்பத்தியில், இந்தியா மிகப்பெரிய உற்பத்தியாளர்களில் ஒன்றாக உள்ளது. மேலும் கரும்பு அடிப்படையிலான எத்தனாலைப் பயன்படுத்த அரசாங்கம் ஊக்கத்தொகைகளையும் வழங்குகிறது. கூடுதலாக சோளம் மற்றும் செல்லுலோஸ் போன்ற மாற்று மூலப் பொருட்களை ஆராய்வதற்கான ஆராய்ச்சி மற்றும் மேம்பாடு முயற்சிகளை இந்தியா தொடங்கி, எதிர்காலத்தில் எத்தனால் உற்பத்திக்கான சாத்தியத்தை மேலும் அதிகரிக்கிறது. 

புதைப்படிவை எரிபொருட்களான பெட்ரோல் டீசலை விட எத்தனால் எரிபொருள் பல சுற்றுச்சூழல் நன்மைகளை வழங்குகிறது. இது கிரீன்ஹவுஸ் வாயு உமிழ்வை குறைத்து காலநிலை மாற்றத்திற்கு எதிராக செயல்படுகிறது எனலாம். எத்தனால் என்பது தூய்மையாக எரியும் எரிபொருளாகும். இது எரியும்போது மனித ஆரோக்கியத்திற்கு தீங்கு விளைவிக்கும் கார்பன் மோனாக்சைடு மற்றும் நைட்ரஜன் ஆக்ஸைடுகள் வெளியேறுவதில்லை. 

இதையும் படியுங்கள்:
மாட்டுப் பாலிலிருந்து எரிபொருள் தயாரிக்கும் முயற்சியில் கனடா நிறுவனம்.
Ethanol Fuel.

எத்தனால் எரிபொருள் உற்பத்தி இந்தியாவின் கிராமபுற பொருளாதாரத்திற்கு குறிப்பிடத்தக்க ஊக்கத்தை அளிக்கும். இதன் உற்பத்திக்கு கணிசமான அளவு விவசாய மூலப்பொருட்கள் தேவைப்படுவதால், விவசாயிகள் தங்களின் வருமானத்தைப் பெருக்கி அவர்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தும் வாய்ப்புகள் உருவாகிறது. மேலும் எத்தனால் தொழிற்சாலையின் வளர்ச்சி, கிராமப்புறங்களில் வேலைவாய்ப்பை உருவாக்குவும், கிராமப்புற வளர்ச்சியை எளிதாக்கவும், விவசாய சமூகங்களின் வாழ்க்கைத் தரத்தை உயர்த்தவும் வழிவகை செய்யும். 

எத்தனால் எரிபொருளை ஊக்குவிப்பது மூலமாக, இந்தியா அதன் பொருளாதார வாய்ப்புகளை வலுப்படுத்த முடியும். மேலும் இது பசுமையான எதிர்காலத்திற்கும் பங்களிக்கிறது. நிலையான எரிசக்தி ஆதாரத்தை நோக்கிய பயணம், எத்தனால் எரிபொருளைப் பயன்படுத்தத் தொடங்குவது மூலமாக இந்தியா மேலும் சரியான பாதையில் செல்வது உறுதி செய்யப்படும். 

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com