Beehive Ginger: இது இஞ்சி இல்ல ஷாம்பூ… என்னடா சொல்றீங்க?

Beehive Ginger
Beehive Ginger

உலகில் உள்ள தனித்துவமான மற்றும் கவர்ச்சிகரமான தாவரங்கள் என்று வரும்போது Beehive Ginger அதன் தனித்துவமான தோற்றம் மற்றும் மருத்துவப் பண்புகளுக்காக தனித்து நிற்கிறது. ‘ஷாம்பு இஞ்சி’ அல்லது ‘பைன்கோன் இஞ்சி’ என்று அழைக்கப்படும் இந்த தெற்கு ஆசியாவை பூர்வீகமாகக் கொண்ட இஞ்சி வகை, இதன் சிகிச்சைப் பண்புகளுக்காக மிகவும் பிரபலமானது. இப்பதிவில் இந்த வித்தியாசமான Beehive Ginger பற்றிய சில சுவாரசிய தகவல்களைத் தெரிந்து கொள்ளலாம் வாங்க. 

Beehive Ginger செடி சுமார் 5அடி உயரம் வரை வளரக்கூடிய ஒரு தாவரமாகும். இதன் முக்கியமான அம்சம் என்னவென்றால், அதன் பூ தான். பார்ப்பதற்கு ஒரு தேன் கூடு போல இருக்கும் இதன் தோற்றம், சிறுசிறு பூக்களை கொண்ட ஒரு பெரிய தொகுப்பாகும். இதன் காரணமாகவே இதற்கு ‘தேன்கூடு இஞ்சி’ என்ற பெயர் வந்தது. 

இந்த அமைப்பு முதிர்ச்சி அடையும்போது சிவப்பு நிறமாக மாறி பார்ப்பதற்கே கவர்ச்சிகரமாக இருக்கும். இந்த பூவை கை வைத்து பிழிந்தால் ஷாம்பூ போன்ற ஜெல் வெளிவரும். அதைப் பயன்படுத்தி தலை குளிக்கலாம்.

இந்த இஞ்சி வெப்ப மண்டல மற்றும் மித வெப்ப மண்டலப் பகுதிகளில் செழித்து வளரக்கூடியதாகும். இவற்றின் வேர் தண்டுகளைப் பயன்படுத்தி புதிய செடிகளை நாம் உருவாக்கலாம். 

மருத்துவப் பயன்கள்:

  1. Beehive இன்ஜியில் அழற்சி எதிர்ப்பு பண்புகள் உள்ளன. இது வீக்கத்தை குறைக்கவும், பிற அழற்சி நிலைகளின் தொடர்புடைய வலியைப் போக்கவும் உதவும். 

  2. பாரம்பரியமாகவே இந்த இஞ்சி, செரிமானத்தை மேம்படுத்தவும் செரிமான அசௌகரித்தைப் போக்கவும் பயன்படுத்தப்படுகிறது. 

  3. சில ஆய்வுகளில் இந்த இஞ்சியில் ஆண்டிமைக்ரோபியல் பண்புகள் இருப்பதாக கண்டறியப்பட்டுள்ளன. இது சில பாக்டீரியாக்கள் மற்றும் புஞ்சைகளை எதிர்த்து போராட உதவும். 

  4. தேன் ஹைவ் இஞ்சியில் ஆக்சிஜனேற்றங்கள் இருப்பதால், உடலில் தீங்கு விளைவிக்கும் ப்ரீ ரேடிக்கல்களை நடுநிலையாக்க உதவுகின்றன. 

  5. மேலும் இதன் நறுமணம், நறுமண சிகிச்சையில் பயன்படுத்துவதற்கு ஏற்றதாக அமைகிறது. எனவே இவற்றை சில எண்ணெய்கள் மற்றும் சிகிச்சை குளியல் போன்றவற்றின் போது மன அழுத்தத்தைக் குறைக்க பயன்படுத்துகின்றனர். 

  6. உலகின் சில பகுதிகளில் இந்த இஞ்சியை உணவுகளிலும் பயன்படுத்துகின்றனர். குறிப்பாக அவை தளிராக இருக்கும்போது, சாலட்டுகள் மற்றும் ஊறுகாய் தயாரிக்க பயன்படுத்தப்படுகிறது. 

இதையும் படியுங்கள்:
Drumstick Dosa: முருங்கைக்காய் தோசை வித் இஞ்சி சட்னி!
Beehive Ginger

இந்த இஞ்சி வகை நமது ஊரில் பார்ப்பது அரிதுதான் என்றாலும், ஒருவேளை இந்த இஞ்சி சார்ந்த பொருட்களை நீங்கள் உணவில் சேர்க்க விரும்புகிறீர்கள் என்றால், தகுந்த சுகாதார நிபுணருடன் கலந்து ஆலோசிப்பது நல்லது. பெரும்பாலும் இந்த இஞ்சி மேற்பூச்சு பயன்பாட்டிற்கு பாதுகாப்பானதாக சொல்லப்படுவதால், யாருடைய ஆலோசனையைப் பெறாமலும் இதை உணவில் சேர்க்க வேண்டாம். 

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com