Drumstick Dosa: முருங்கைக்காய் தோசை வித் இஞ்சி சட்னி!

Drumstick dosa
Drumstick dosa

முருங்கைக்காய் சீசன் இது. நிறைய கிடைக்கும் முருங்கைக்காய்களை கொண்டு சாம்பார் மட்டுமல்லாமல் மணமான தோசையும் செய்யலாம். முருங்கைக்காயில் உடலுக்கு தேவையான அத்தியாவசிய ஊட்டச்சத்துக்கள் நிறைந்துள்ளன. குறிப்பாக உங்களது இரும்பு சத்து தேவையை முருங்கைக்காய் பூர்த்தி செய்யும். எனவே அவ்வப்போது முருங்கைக்காயை உங்களது உணவில் சேர்த்துக் கொள்வதன் மூலமாக, என்றும் ஆரோக்கியமாக இருக்கலாம். முருங்கக்காய் தோசை எப்படி செய்வது என்று இப்பதிவில் பார்க்கலாம்.

(முருங்கைக்காய் தோசை)

தேவையான பொருட்கள்:

  • முருங்கைக்காய் 10

  • ரவை ஒரு கப்

  • அரிசி மாவு ஒரு கப்

  • உப்பு தேவையானது

  • புளித்த தயிர் 1/2 கப்

  • சீரகம் 1/2ஸ்பூன்

  • கருவேப்பிலை சிறிது

முருங்கைக்காய் தோசை செய்முறை:

முருங்கைக்காயின் மேலுள்ள தோல் எல்லாம் சீவி விட்டு இட்லி தட்டில் ஐந்து நிமிடம் வைத்து வேக விடவும். பிறகு மிக்ஸியில் போட்டு சிறிது தண்ணீர் விட்டு நைசாக அரைத்தெடுக்கவும்.

அரைத்ததை மெல்லிய சல்லடை கொண்டு வடிகட்டி அதில் ரவை, அரிசி மாவு, உப்பு, தயிர் சேர்த்து கலக்கவும். கருவேப்பிலையை கிள்ளிப்போட்டு, சீரகம் அரை ஸ்பூன் எடுத்து கையால் நன்கு கசக்கி சேர்த்து, தேவையான அளவு நீர் விட்டு மெல்லிய தோசைகளாக வார்த்தெடுக்கவும்.

அனைவராலும் விரும்பி உண்ணக்கூடிய மணமும், சுவையும் நிறைந்த முருங்கைக்காய் தோசை தயார். இதனுடன் இஞ்சி சட்னி சேர்த்து சாப்பிட ருசியாக இருக்கும்.

(இஞ்சி சட்னி)

தேவையான பொருட்கள்:

  • இஞ்சி ஒரு பெரிய துண்டு

  • உப்பு

  • புளி கொட்டைப்பாக்களவு

  • வெல்லம் ஒரு துண்டு

  • காய்ந்த மிளகாய் 2

  • பெருங்காயத்தூள் சிறிது

இதையும் படியுங்கள்:
Sea Moss: தைராய்டை குணப்படுத்தும் கடல் பாசி! 
Drumstick dosa

இஞ்சி சட்னி செய்முறை: இஞ்சியை தோல் சீவி துண்டுகளாக்கி உப்பு, புளி, காய்ந்த மிளகாய், வெல்லம் எல்லாம் சேர்த்து மிக்ஸியில் அரைத்து எடுக்கவும். நல்லெண்ணையில் கடுகு, கருவேப்பிலை தாளித்துக் கொட்டி பெருங்காயத்தூள் கலந்து விட ருசியான வாய்க்கு இதமான இஞ்சி சட்னி தயார்.

முருங்கைக்காய் தோசை & இஞ்சி சட்னி காம்பினேஷன் வேற லெவலில் இருக்கும். இது சுவையாக இருப்பது மட்டுமின்றி, உடலுக்கும் ஆரோக்கியமானது என்பதால், இப்போதே உங்கள் வீட்டில் இருப்பவர்களுக்கு செய்து கொடுத்து அசத்துங்கள்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com