ஆஸ்திரேலிய கலாசாரத்தில் முக்கிய இடம் பிடித்துள்ள கங்காருவின் தனிச்சிறப்புகள்!

Australia's cultural animal kangaroo
Australia's cultural animal kangaroo
Published on

ங்காரு ஆஸ்திரேலியாவின் தேசிய விலங்காகும். இது ஆஸ்திரேலியாவைப் பூர்வீகமாகக் கொண்டது. ஆஸ்திரேலியாவின் தனித்துவமான அடையாளங்களில் ஒன்றாகும். கங்காருவின் தனிச்சிறப்புகள் பற்றி இந்தப் பதிவில் பார்ப்போம்.

கங்காருவின் தனிச்சிறப்புகள்:

கலாசார முக்கியத்துவம்: கங்காரு ஆஸ்திரேலிய பழங்குடி மக்களின் கலாசாரம் மற்றும் புராணங்களில் குறிப்பிடத்தக்க இடத்தைப் பிடித்துள்ளன. மேலும், பூர்வீக கலை மற்றும் கதைகளில் முக்கிய இடம் வகிக்கின்றன.

ஆஸ்திரேலிய மதிப்புகளின் உருவகம்: கங்காரு பெரும்பாலும் ஆஸ்திரேலிய நாட்டின் பல்வேறு மதிப்புகளின் பிரதிநிதியாகக் கருதப்படுகிறது. இதில் பின்னடைவு, வலிமை மற்றும் பலவிதமான சூழல்களுக்கு ஏற்ப மாற்றிக்கொள்ளும் திறன் ஆகியவை அடங்கும். காடுகளில் செழித்து வளரும் அதன் திறன் ஆஸ்திரேலிய மக்களின் உணர்வுகளை பிரதிபலிக்கிறது.

தேசியப் பெருமை: உலகின் வேறு எந்தப் பகுதியிலும் காணப்படாத ஒரு தனித்துவமான விலங்காக கங்காரு ஆஸ்திரேலியர்களிடையே தேசியப் பெருமித உணர்வை தூண்டுகிறது. இது ஆஸ்திரேலியாவின் இயற்கை பாரம்பரியத்தின் சின்னமாகப் பார்க்கப்படுகிறது.

சுற்றுலா ஈர்ப்பு: உலகெங்கிலும் உள்ள பார்வையாளர்கள் கங்காருக்களை அவற்றின் இயற்கையான வாழ்விடங்களில் வந்து பார்த்து ரசிப்பதற்காகவே ஆஸ்திரேலியாவுக்கு வருகிறார்கள். இதனால் அதனுடைய அந்தஸ்து மேலும் உறுதிப்படுகிறது.

துள்ளல் இயக்கம்: கங்காருக்கள் அவற்றின் தனித்துவமான துள்ளல் இயக்கங்களுக்கு பெயர் பெற்றவை. இவை நீண்ட தூரம் திறமையாக பயணிக்கின்றன. அவற்றின் வலிமையான மற்றும் தசைகள் கொண்ட பின்னங்கால்கள் குதிப்பதற்காக சிறப்பாக வடிவமைக்கப்பட்டிருக்கின்றன. ஒரே பாய்ச்சலில் 30 அடி வரை கூட அவற்றால் பாய முடியும்.

பெரிய கால்கள்: இவற்றுக்கு பெரிய நீளமான பாதங்கள் உள்ளன. அவை நிலைத் தன்மையை வழங்குகின்றன. அதிக தூரம் தாவி குதித்தாலும் ஸ்டெடியாக ஒரு இடத்தில் நிற்க உதவுகின்றன.

வால்: அவற்றின் தடிமனான தசை வால் பல நோக்கங்களுக்காக உதவுகிறது. இது துள்ளும்போது எதிர் சமநிலை போல திசை மாற்றி செயல்படுகிறது. அவை ஓய்வெடுக்கும்போதும் உட்கார்ந்திருக்கும்போதும் அவற்றின் எடையை தாங்கி நிற்கின்றன.

ஸ்பெஷல் பை: கங்காருக்களுக்கு ஒரு தனித்துவமான பை உள்ளது. தங்களுடைய குட்டிகளை பாதுகாப்பான பைகளில் வைத்து வளர்க்கின்றன. கதகதப்பான மற்றும் பாதுகாப்பான சூழலை குட்டிகளுக்கு இது தருகிறது.

இதையும் படியுங்கள்:
மகிழ்ச்சியான வாழ்க்கைக்கு மனதில் கொள்ளவேண்டிய 5 மந்திரங்கள்!
Australia's cultural animal kangaroo

சூழல்களுக்கு ஏற்ற உடல் அமைப்பு: காடுகள் மற்றும் புல்வெளிகள் முதல் வறண்ட பாலைவனங்கள் வரை பரந்த அளவிலான ஆஸ்திரேலிய சூழல்களுக்கு இந்த விலங்குகள் நன்றாகப் பொருந்துகின்றன. அந்த நாட்டின் பல்வேறு கால நிலைக்கு ஏற்ப தங்களை தகவமைத்துக் கொள்கின்றன. அதிக வெப்பநிலையை பொறுத்துக் கொள்வதற்கும் ஏற்றவாறு அவற்றின் உடல் அமைப்பு உள்ளன. பொதுவாக கும்பல் கும்பலாகத்தான் இவை வாழ்கின்றன. எனவே, இவற்றின் பாதுகாப்பு மற்றும் ஆதரவு சரியாகப் பராமரிக்கப்படுகிறது.

செவித்திறன் மற்றும் பார்வை: கங்காருகளுக்கு சிறந்த செவித்திறன் உண்டு. மேலும். தொலைதூர ஒலிகளைக் கூட இவற்றால் கேட்க முடியும். பெரிய கண்கள் இவற்றின் தலையின் பக்கங்களில் அமைந்துள்ளன. நன்றாக தெளிவான பார்வையை வழங்குகின்றன. தூரத்தில் வரும் வேட்டையாடுபவர்களை கூடக் கண்டறிய உதவுகின்றன. தமது தனித்துவமான பண்புகளால் கங்காருக்கள் ஆஸ்திரேலியாவின் கவர்ச்சிகரமான உயிரினங்களாக ஆக்குகின்றன.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com