பெரும்பாலானோர் இன்று வாழ்க்கையில் மகிழ்ச்சி, திருப்தி, நிம்மதி இந்த மூன்றையும் தேடி அலைகின்றனர். இந்த அவசர உலகில் பொருளாதாரம், குடும்ப அமைப்பு, பணி சூழல் போன்ற காரணங்களால் ஓடிக்கொண்டே இருப்பவர்களுக்கு வாழ்க்கையில் மகிழ்ச்சியாக வாழ்வதற்கான5 மந்திரங்களை இந்தப் பதிவில் தெரிந்து கொள்வோம்.
1. நன்றியுணர்வு பயிற்சி: நேர்மையான, மகிழ்ச்சியான வாழ்க்கைக்கு நன்றி உணர்வு மிகவும் இன்றியமையாதது. இன்று நம்மிடம் உள்ள விஷயங்களை எந்த அளவுக்குப் பாராட்டுகிறோமோ, அவ்வளவு அதிகமாக நாம் மகிழ்ச்சியாகவும் திருப்தியாகவும் இருப்பதை உணர முடியும். இல்லாததை நினைத்து வருந்துவதை விட, நம்மிடம் இருக்கும் நல்ல விஷயங்களுக்கு நன்றியுணர்வோடு இருந்தாலே வாழ்வில் நிம்மதி கிடைக்கும்.
2. மன்னிப்பைப் பழகுங்கள்: வெறுப்புணர்வு இருக்கும் இடத்தில் மன்னிப்பு வராது. வெறுப்புணர்வை வைத்திருந்தால் உடல் ரீதியாகவும் உணர்ச்சி ரீதியாகவும் நாம் பலவீனம் அடைகிறோம். ஆகையால், வெறுப்புணர்வை விட்டு புகார்களை நீக்கி நேர்மறை எண்ணங்களுக்கு நம் மனதில் இடம் கொடுத்து மன்னிப்பு கேட்டு பழகினால் வாழ்க்கை மகிழ்ச்சியாக இருக்கும்.
3. உங்களுக்கு மகிழ்ச்சியைத் தரும் விஷயங்களைச் செய்யுங்கள்: மகிழ்ச்சி, திருப்தி, சாதனை இவை அனைத்தும் நேர்மறையான வாழ்க்கை வாழ்வதனால் மட்டுமே கிடைப்பதாகும். ஆகையால், முதலில் நீங்கள் உங்களுக்கு மகிழ்ச்சியைத் தரும் செயல்களை செய்து பழகுங்கள். விரும்பியதை செய்ய சிறந்த வாழ்வு கிடைக்கும். மகிழ்ச்சியே சிறந்த வாழ்க்கை வாழ்வதற்கான முக்கிய சாராம்சம்.மகிழ்ச்சியாக இருந்தால், வாழ்க்கை முற்றிலும் தயாராகவும் வளமாகவும் மாறும் என்பதில் சந்தேகமே இல்லை.
4. நேர்மறையுடன் உங்களைச் சுற்றி வையுங்கள்: எதிர்மறையாக பேசுபவர்களிடமிருந்து விலகி, நம்மையும் நம்முடைய செயல்களையும் ஊக்கப்படுத்தும் நேர்மறை எண்ணம் கொண்டவர்களிடம் மட்டுமே நட்பு பாராட்டி அவர்களுடன் நேரத்தை செலவிட முயற்சிக்க வேண்டும். நேர்மறையை வெளிப்படுத்துவது பெரும்பாலும் நமக்குள் நேர்மறையை பராமரிக்க உதவுகிறது.
5. சுய கவனிப்பில் கவனம் செலுத்துங்கள்: ஒவ்வொருவரும் அவர்களுடைய சுய பாதுகாப்பில், அதாவது வழக்கமான உடற்பயிற்சி, சீரான உணவு, போதுமான தூக்கம், ஓய்வெடுக்க நேரம் ஆகியவற்றை பின்பற்றுவதால் உடலும் மனமும் நலம் பெற்று நேர்மறையான வாழ்வுக்கு உதவுகிறது. நம்முடைய ஆரோக்கியத்தில் எவ்வளவு கவனம் செலுத்துகிறோமோ அவ்வளவு நேர்மறையாகவும் முழுமையானதாகவும் மகிழ்ச்சியாகவும் நிம்மதியாகவும் வாழ்வை உணர முடியும்.
மேற்கண்ட 5 விஷயங்களை கவனமுடன் செயல்படுத்தி வாழ்வில் மகிழ்ச்சியையும் நிம்மதியையும் பெறுங்கள்.