
உலகம் எண்ணிலடங்கா இயற்கை அதிசயங்கள் நிறைந்துள்ளதாக இருக்கிறது. பொதுவாகவே விலங்கினங்கள் ஒன்றோடு ஒன்று சேர்ந்த பின் கருவுறுதல் நிகழும். ஆனால், எவ்வித சேர்க்கையுமின்றி விலங்கினங்கள் கருவுறுதலை ஆராய்ச்சியாளர்கள் `Virgin Births’ என்று அழைக்கின்றனர்.
இயற்கையில் நிறைய விஷயங்கள் நாம் எதிர்பார்க்காத வகையில் நுண்ணியதாகவும் பெரிதளவிலும் இருக்கின்றன. அந்த வகையில் சிலவகை பெண் விலங்குகள் ஆண் விலங்குகளின் துணையின்றிக் குழந்தை பெற்றுக்கொள்ளும் திறனை இயற்கையாகவே பெற்றுள்ளது. அவற்றை இக்கட்டுரையில் காண்போம்.
பைதான்ஸ்
பைதான்ஸ் வகைகளில் தெல்மா என்ற பெண் ரெட்டிகுலெட்டட் மலைப்பாம்புகள் இனச்சேர்க்கை இல்லாமலே முட்டையிடும் தன்மை கொண்டவையாக இருக்கின்றன மேலும் ஒரு மலைப்பாம்பு 6 முட்டைகள் வரை இடக் கூடியது.
முதலைகள்
முதலைகள் முட்டையிட்டு இனப்பெருக்கம் செய்கின்றன இவை மணலில் துளை தோண்டி முட்டைகளை புதைத்து அடைகாக்கின்றன. ஆண் விலங்கு துணியில்லாமல் முதலைகளும் பார்த்தினோஜெனிசிஸ் முறை மூலம் இனப்பெருக்கம் செய்து கொள்கிறது.
சுறாக்கள்
சில வகை சுறா இனங்களில் பான்னெட்ஹெட் சுறா வகை மட்டும் பார்த்தினோஜெனிசிஸ் என்ற முறை மூலம் இனச்சேர்க்கை இல்லாமல் இனப்பெருக்கம் செய்கிறது.
கொமோடோ டிராகன்கள்
இந்த கொமோடோ டிராகன்கள் துணை இல்லாமல் இனப்பெருக்கம் செய்யும் திறனை பெற்றுள்ளது. பெண் கொமோடோ டிராகன்கள் ஆண் துணையின்றி எளிதாக முட்டைகளை இடுகின்றன. மேலும் தேவைப்படும்போது தாங்களாகவே இனப்பெருக்கம் செய்யும் திறனை பெற்றுள்ளது.
கலிஃபோர்னியா காண்டோர்ஸ்
கழுகு வகையை சார்ந்த கலிபோர்னியா காண்டோர்ஸ் ஆண் துணையின்றி இனப்பெருக்கம் செய்யும் திறனை பெற்றுள்ளது. மேலும் மரபணுசோதனையின்போது சில குஞ்சுகள் தாயின் மரபணுவை மட்டும் பெற்று இருப்பது தெரியவந்துள்ளது.
கேப் தேனிக்கள்
தேனி வகைகளில் கேப் தேனீக்கள் தெலிடோக்கி மூலம் இனப்பெருக்கம் செய்யும். இவை தனித்துவமான பாலினமற்ற இனப்பெருக்க முறையை அவை பின்பற்றுகின்றன.
அஃபிட்ஸ்
பூச்சி வகைகளில் அஃபிட்ஸ் பூச்சி வகை, இனச்சேர்க்கை இல்லாமல் இனப்பெருக்கம் செய்யக்கூடிய உயிரியாகும். இந்த இனச்சேர்க்கை மூலம் அதன் தொகையை விரைவாகப் பெருக்கிக் கொள்ளும்.
மார்மர்கிரெப்ஸ்
நண்டு வகைகளில் ஒன்றான மார்மர்கிரெப்ஸ் அல்லது மார்பிள்டு வகை நண்டு துணை இல்லாமல் இனப்பெருக்கம் செய்யக்கூடியவை. இவை பாலின மக்கள் இனப்பெருக்கத்தில் ஈடுபடுகிறது.
மேற்கூறிய விலங்குகள் அனைத்தும் இனச்சேர்க்கை இல்லாமல் இனப்பெருக்கத் திறனை பெற்று அதிசய விலங்குகளாக உலகில் வலம் வருகின்றன.