
வாகை மரம் பழங்காலத்திலிருந்து நம் வாழ்க்கையில் ஒன்றிய மரமாக விளங்குகிறது. தமிழ் இலக்கியங்களில் இடம்பெற்றுள்ள முக்கிய மரமாக கூறப்படுகிறது. வாகை மரம் ஆனது காற்றில் உள்ள நச்சுக்களை நீக்கி தூய்மையான காற்றைத் தருகிறது.
மண்ணரிப்பை தடுக்கிறது. இந்த மரம் செம்மண், சரளை கலந்த செம்மண், மணல், கரிசல் மண் நீர்ப்பாசன பகுதிகள் போன்ற இடங்களில் வளரக்கூடிய மரமாகும்.
மருத்துவ குணங்கள் கொண்டது
வாகை மரம் இது வறட்சியை தாங்கி வெப்பமான பகுதிகளிலும் வளரக்கூடிய மரம் என்று கூறப்படுகிறது. வாகையில் சிறுவாகை, பெறுவகை, நிலவாகை, காட்டு வாகை, செவ்வாகை, கருவாகை, தூங்கு வாகை என பல வகைகள் உள்ளது. வாகை மரத்தின் பட்டை, இலை / பூ என அனைத்து பாகங்களும் மருத்துவ குணங்களை கொண்டுள்ளது.
வாகை மரத்தைக்கொண்டு கதவு, ஜன்னல், பருப்புப் கடையும் மத்து, தானிய பெட்டி, உலக்கை போன்ற மரச்சாமான்கள் தயாரிக்க பயன்படுகிறது.
மரச்செக்கு உலையில்
ஆயிரக்கணக்கான மரங்கள் இருந்தாலும் விதைகளை ஆட்டி சூடேற, எண்ணெய்களைப் பிரித்து எடுக்கும் சக்தி இந்த வாகை மரத்திற்கு உண்டு என்பதால் செக்குகளில் வாகை மரத்தின் செக்குகள் முதல் தரம் வாய்ந்ததாக கருதப்படுகிறது. மேலும் இதன் விதைகளில் இருந்து எடுக்கப்படும் எண்ணையின் சத்துக்களும் மருத்துவ குணங்கள் குறையாமல் கிடைக்க உதவுகிறது.
குணமாகும் நோய்கள்
சர்க்கரை நோய், வயிற்று வலி, பாக்டீரியா, பூஞ்சை, தொற்று, பாம்பு, விஷக்கடி தோல் நோய், வெள்ளைப்படுதல் மூட்டு வலி, குஷ்டம், தொழுநோய், வீக்கம், கண் அரிப்பு, கண்ணீர் வடிதல் மூக்கடைப்பு, பசியின்மை, வாத நோய், மூலநோய் என பல நோய்களுக்கு வாகை மரத்தின் ஒவ்வொரு பாகங்களும் திகழ்கிறது.
மருத்துவ பயன்கள்
வாகை மரத்தின் இலைகளை சுத்தமான அம்மியில் அரைத்து கண் இமைகளில் வைத்து கட்டினால் கண் சிவப்பு, கண் எரிச்சல் குணமாகும்.
வாகை மரப்பட்டையை நிழலில் உலர்த்தி பொடியாக்கி சலித்து சலித்து வைத்துக்கொண்டு தேவைப்படும்போது ஒரு கிராம் அளவு எடுத்து ஒரு டம்ளர் பாலில் கலந்து குடித்து வர பசியை தூண்டும். மேலும் வாய்ப்புண், வயிற்றுப் புண் ஆற்றும்.
வாகை மரப்பொடி ஒரு கிராம் எடுத்து வெண்ணெயில் கலந்து சாப்பிட்டால் உள்மூலம், இரத்தம் மூலம், வெளி மூலம் குணமாகும் ஒரு கிராம் வாகைமர பொடியை மோரில் கலந்து குடித்தால் பெரும் கழிச்சல் நோய் குணமாகும். இந்த பொடியை அடிபட்ட காயங்களில் வைத்து கட்டினால் புண்கள் விரைவில் ஆறும்.
மூக்கடைப்பு குணமாக இதன் கொழுந்துகளை நசுக்கி மூக்கில் நுகர்ந்தால் மூக்கடைப்பு நீங்கும். மூட்டு வலி மற்றும் வீக்கம் குணமாக இதன் குலைகளை விளக்கெண்ணெயில் வதக்கி இளம் சூட்டில் வைத்து கட்டினால் வலி குறையும். மேலும் யானைக்கால் நோய் / விரை வீக்கம் போன்வற்றிற்கு இதை பயன்படுத்தலாம்.
வாகை பூக்களை 20 எடுத்து மிளகு சேர்த்து ஒரு ட்டர் தண்ணீரில் கொதிக்க வைத்து அரை லிட்டராக காய்ச்சி தேன் கலந்து குடித்தால் விஷக்கடியால் ஏற்படும் தொந்தரவு கை கால் குடைச்சல், குத்தல் சரியாகும்.
வாகைமரத்தின் விதைகள் மற்றும் பூ மொட்டுகளை சம அளவு எடுத்து தேங்காய் எண்ணெயில் காய்ச்சி கை கால் வலி, தொழு நோய்களுக்கு மருந்தாக பயன்படுத்தலாம்.
வாகை பூக்களை கசாயம் செய்து தேன் கலந்து குடித்து வந்தால் நுரையீரல் அலர்ஜி, ஆஸ்துமா, வயிற்றுப்போக்கு குணமாகும்.
வாகைமரத்தின் விதையிலிருந்து கிடைக்கும் எண்ணெய் குஷ்ட நோய்க்கும், தொழு நோய்க்கும் மருந்தாகும்.
மேலும் வாகை மரத்தின் பூ நறுமணம் தைலம் தயாரிக்கவும் பயன்படுகிறது.
வாகை மரத்தின் பூ முதல் அனைத்து பாகங்களுமே மருத்துவ குணங்கள் நிறைந்தது. வாகைவெற்றி பெறுவதற்கு மட்டுமல்லாமல் மனிதகுலத்தின் பல நோய்களுக்கும் மருந்தாகிறது.