Goblin Shark: பாக்கவே பயங்கரமா இருக்கே.. அவ்ளோ ஆழத்துல எப்படி வாழுது?

Goblin Shark
Goblin Shark

ஆழ்கடல் என்பது நமது கற்பனைக்கும் அப்பாற்பட்ட பல மர்மங்களைக் கொண்டுள்ளது. அத்தகைய மர்மம் நிறைந்த இடத்தில் வாழும் ஒரு புதிரான உயிரினம்தான் கோப்ளின் சுறா. இது பல நூறு ஆண்டுகளாக ஆழ்கடலில் மறைந்து வாழ்வதால் ‘வாழும் புதைப்படிவம்’ என்றும் சொல்லப்படுகிறது. பார்ப்பதற்கே திகிலூட்டும் தோற்றத்தைக் கொண்ட இந்த சுறாக்கள், விஞ்ஞானிகளையும் இயற்கை ஆர்வலர்களையும் வெகுவாகக் கவர்வதில் ஆச்சரியம் எதுவும் இல்லை. 

கோப்ளின் சுறாக்களின் தோற்றம்: இந்த வகை சுறாக்கள் கடலின் ஆழத்தில் இருளில் வாழும் அரிய வகை இனமாகும். மற்ற சுறாக்களில் இருந்து இதை வேறுபடுத்துவது, அதன் தனித்துவமான தோற்றம் மற்றும் பண்புகள். நீளமான மூக்கு, அகலமான தாடை, இளஞ்சிவப்பு - வெள்ளை கலந்த உடலுடன் பார்ப்பதற்கு சயின்ஸ் ஃபிக்சன் கதைகளில் வரும் பூதத்தைப் போல இருக்கும். 

வாழும் புதைப்படிவம்: இந்த இனம் மில்லியன் கணக்கான ஆண்டுகளாக எவ்வித மாற்றமும் இன்றி அப்படியே இருப்பதால், இவற்றை ‘வாழும் புதைப்படிவம்’ என அழைக்கின்றனர். இதன் காரணமாகவே இந்த சுறா இனம் வரலாற்றில் மிகப்பெரும் இடத்தைப் பிடித்துள்ளது. கோப்ளின் சுறாக்களின் பழமையான அம்சங்களான, அதன் தனித்துவமான தாடை அமைப்பு, எலும்புக்கூடு, உடலமைப்பு போன்றவை, சுறாக்களின் பரிணாம வளர்ச்சியின் கடந்த காலம் பற்றிய பார்வையை நமக்கு வழங்குகிறது. 

ஆழ்கடல் சவால்கள்: ஆழ்கடலில் வாழ்வதென்பது அவ்வளவு எளிதானதல்ல. ஆனால் கோபிளின் சுறாக்கள் அத்தகைய கடினமான சூழலில் வாழ்வதற்கு குறிப்பிடத்தக்க தந்திரங்களைப் பின்பற்றுகின்றன. இருளான இடங்களிலும் தனது மூக்கில் உள்ள உணர்ச்சி உறுப்புகளைப் பயன்படுத்தி, தனக்கான இறையைத் தேடிக் கொள்கிறது. அதே நேரம், நீண்டு வெளியே வரும் அதன் தாடை அமைப்பு, உடனடியாக இரையைக் கவ்வி உணவாக மாற்றிக்கொள்ள அனுமதிக்கிறது. 

இதையும் படியுங்கள்:
உடலில் புரதம் குறைவாக உள்ளது என்பதற்கான 5 அறிகுறிகள்!
Goblin Shark

பார்ப்பதற்கு பயங்கரமான தோற்றத்தில் இருந்தாலும், கோபிளின் சுறாக்கள் தங்களின் பெரும்பாலான நேரத்தை ஆழ்கடலிலேயே கழிப்பதால், இன்று வரை முழுமையாகப் புரிந்து கொள்ளப்படாத இனமாகவே உள்ளது. இருப்பினும் சில சமயங்களில் மீன் பிடிக்கும்போது இவை வலைகளில் சிக்கிக்கொள்ளும் அச்சுறுத்தல்களை எதிர்கொள்கின்றன. 

இந்த பதிவின் மூலமாக, மில்லியன் கணக்கான ஆண்டுகளாக இருளில் வாழ்ந்து கொண்டிருக்கும் கோபிளின் சுறாக்களின் மீது வெளிச்சம் பட்டுள்ளது என்றுதான் சொல்ல வேண்டும். இதன் மூலமாக பூமியில் ஆராயப்படாத நிலையில், பல்வேறு வகையான உயிரினங்கள் உள்ளது என்பதை நம்மால் அறிய முடிகிறது. உண்மையிலேயே இதுபோன்ற புதுமையான உயிரினங்கள் இயற்கையின் அதிசயம்தான். 

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com