உடலில் புரதம் குறைவாக உள்ளது என்பதற்கான 5 அறிகுறிகள்!

5 signs that the body is low in protein.
5 signs that the body is low in protein.
Published on

புரதம் என்பது மனித உடலில் உள்ள பல்வேறு உயிரியல் செயல்முறைகளுக்கு உதவும் அத்தியாவசிய மைக்ரோநியூட்ரியெண்ட். இது புதிதாக திசுக்கள் உருவாவதற்கும், திசுக்களை சரி செய்வதற்கும், என்சைம்கள் மற்றும் ஹார்மோன்கள் உற்பத்தியாவதற்கும் உதவுகிறது. குறிப்பாக நோய் எதிர்ப்பு செயல்பாட்டை அதிகரித்து உடலுக்குத் தேவையான ஒட்டுமொத்த ஆற்றலை வழங்குவதும் புரதம்தான். எனவே உடலில் போதுமான அளவு புரதம் இல்லாதபோது பல்வேறு விதமான பாதிப்புகள் ஏற்படலாம். 

உடலுக்கு போதுமான அளவு புரதம் கிடைக்காதபோது, அல்லது உட்கொள்ளும் புரதத்தில் சில அத்தாவசிய அமினோ அமிலங்கள் இல்லாதபோது, புரதக் குறைபாடு ஏற்படுகிறது. ஆனால் இதை யாரும் பெரிதாகக் கண்டு கொள்வதில்லை. எனவே இந்தப் பதிவில் புரதக் குறைபாட்டின் 5 அறிகுறிகள் என்னவென்று தெரிந்து கொள்வோம். 

1. தசை இழப்பு மற்றும் பலவீனம்: நான் தொடக்கத்தில் சொல்லியது போலவே நமது தசை வளர்ச்சிக்கும், தசையை முறையாக பராமரிப்பதற்கும் புரதம் முக்கியமானது. எனவே போதிய புரதத்தை உட்கொள்ளவில்லை எனில், தசை இழப்பு, உடல் பலவீனம், சோர்வு மற்றும் ஒட்டுமொத்த வலிமை குறைவுக்கும் அது வழிவகுக்கும். 

2. திரவ ஏற்றத்தாழ்வுகள்: உடலில் திரவ சமநிலையை பராமரிக்க புரதம் முக்கிய பங்கு வகிக்கிறது. போதிய அளவு புரதம் இருந்தால் மட்டுமே திசுக்களில் திரவம் சமநிலையுடன் இருக்கும். திசுக்களில் அதிகமாக திரவம் சேர்ந்து, கால்களில் வீக்கத்தை ஏற்படுத்தலாம். அல்லது எடிமா எனப்படும் அடிவயிறு வீங்கிய தோற்றத்தை ஏற்படுத்தும் வாய்ப்புள்ளது.

3. காயம் மெதுவாக குணமடையும்: திசுக்களை சரி செய்வதற்கும், காயத்தை குணப்படுத்துவதற்கும் புரதம் அவசியம். போதிய அளவு புரதம் உட்கொள்ளவில்லை என்றால் காயத்தை குணப்படுத்தும் செயல்முறை தாமதப்படலாம். இது காயங்கள் நீண்ட நாள் ஆறாமல் இருக்க வழி வகுக்கும். மெதுவாக காயம் ஆறினால் தொற்று ஏற்படும் அபாயம் அதிகரிக்கும்.

இதையும் படியுங்கள்:
தலை முடி பற்றிய கவலையா? இந்த 5 விட்டமின் E நிறைந்த உணவுகளை சாப்பிடுங்கள்! 
5 signs that the body is low in protein.

4. தோல் முடி மற்றும் நகப் பிரச்சனைகள்: ஒருவருக்கு புரோட்டின் குறைபாடு இருந்தால் அது பல்வேறு விதமான தோல் நோய்கள் மூலமாக அறிகுறிகளாக வெளிப்படும். வறண்ட, மெல்லிய தோல், தோலில் தடிப்புகள், தலைமுடி பலகீனம், மற்றும் நகங்கள் எளிதாக உடையும் அளவுக்கு மாறிவிடும். 

5. குறைந்த நோயெதிர்ப்பு சக்தி: ஆன்ட்டிபாடி மற்றும் நோயெதிர்ப்பு மண்டலத்தின் பிற உற்பத்திகளுக்கு, புரதம் மிக மிக அவசியம். எனவே ஒருவர் போதிய புரதம் உட்கொள்ளவில்லை என்றால் அது நோய் எதிர்ப்பு மண்டலத்தை பலவீனப்படுத்தி நோய்த் தொற்றுக்கள், மற்றும் நோய்களால் எளிதில் பாதிக்க வழிவகுத்துவிடும். 

இந்த பதிவு ஒரு விழிப்புணர்வுக்காக தகவலை தெரியப்படுத்தும் நோக்கிலேயே எழுதப்பட்டதாகும். உங்களுக்கு இதுகுறித்த முழு விவரங்கள் தெரிய வேண்டுமெனில் தகுந்த மருத்துவரை ஆலோசித்து, தேவையானவற்றை அறிந்து கொள்ளுங்கள். 

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com