

மரப்பட்டையே உணவு! கண்ணுக்கே தெரியாமல் வாழ்ந்தாலும் கண்ணை பறிக்கும் நிறம்! பொன் வண்டுகளின் அதிசய உலகத்தை காண்போமா?
பொன்வண்டுகள் குடும்பத்தில் 15 ஆயிரத்திற்கும் மேற்பட்ட இனங்கள் உள்ளன. ஒவ்வொன்றும் வித்தியாசமாக அனைவரையும் கவரும் விதமாக பளபளப்பான வண்ணங்களை கொண்டுள்ளன.
பொன்வண்டின் வாழ்வியல்
பெண் பொன்வண்டு இறந்த மரங்கள், கருகப்போகும் மரங்கள், தீப்பிடித்த மரங்களில் உள்ள பட்டைகளிலும் வேர்களுக்கு அடியிலும் முட்டையிட்டு தன் வேலையை பார்க்கச் சென்றுவிடும். இந்த முட்டைகளிலிருந்து 1-2 வாரங்களில் லார்வாக்கள் வெளிவரும். இது கொசுக்களின் லார்வாக்களை போன்று தலைப்பகுதி பெரிதாகவும் உடம்பு சிறிதாக புழு போலக் காட்சி தரும்.
இந்த லார்வாக்கள் மரத்திற்குள் துளையிட்டு 1-3 ஆண்டுகள் வரை லார்வா நிலையிலேயே வாழ ஆரம்பிக்கும். மரத்தையே இது உணவாக உட்கொண்டு வண்டாக மாறுவதற்கு தேவையான அனைத்து ஊட்டச்சத்துக்களையும் மரத்திலேயே எடுத்துக் கொள்கின்றன. 2 வருடங்கள் வரை இதே நிலையை தொடரும். அதன் பிறகு பூபா நிலையை அடைகின்றன. இந்த நிலையில் சில வாரங்கள் மட்டுமே அசைவற்று காணப்படும். அதன் பிறகு அதை உடைத்துக்கொண்டு பொன்வண்டுகளாக வெளிவருகின்றன.
இந்த பொன்வண்டு இனத்தில் ஒரு லார்வா அதிகபட்சமாக 51 ஆண்டுகள் லார்வா நிலையிலேயே வாழ்ந்து பூச்சிகளாக வெளிவந்துள்ளது கண்டறியப்பட்டுள்ளது. லார்வா நிலையில் இருந்து பூபா நிலையை அடைந்து பொன்வண்டுகளாக வெளிவரும் இவற்றின் ஆயுட்காலம் 2 வாரங்கள் முதல் 2 மாதங்கள் மட்டுமே.
பொன்வண்டுகளின் வேலை
இந்த இடைப்பட்ட காலத்தில் இனப்பெருக்கம் செய்வது மட்டுமே பொன்வண்டுகளின் வேலையாக இருக்கிறது. பெண் பொன்வண்டுகளைத்தேடி இணைந்து முட்டையிட்ட பிறகு பெண் பொன்வண்டுகள் இறந்துவிடும். அடுத்த சில நாட்களில் ஆண் பொன்வண்டும் இறந்துவிடும். இந்த காலத்தில் பொன்வண்டுகள் மிக குறைந்த அளவு உணவுகளையே உட்கொள்ளுகின்றன.
சிறப்பியல்புகள்
மெலனோபிலா என்ற பொன்வண்டு இனம் 60-70 கிமீக்கு அப்பால் காட்டு தீ ஏற்பட்டாலும் அதாவது UV Rays யை உணரும் திறன் பெற்றிருக்கின்றன. இதனை அறிந்துகொண்டு மரம் எறிந்த பிறகு 70 கிமீ பயணம் செய்து எறிந்த மரத்தில் முட்டைகளை இடுகின்றன.
1980 களில் ஒரு பொன்வண்டு இனம் ஆஸ்திரேலியாவில் ரோட்டோரங்களில் இருக்கும் பியர் பாட்டில்களில் ஒரு குறிப்பிட்ட காலத்தில் பெண் பொன்வண்டுகளாக பாட்டில்களை நினைத்து வெயில் காலத்தில் உடலில் நீர்ச்சத்து குறைந்து இறக்க நேரிடும் அளவிற்கு இனப்பெருக்கம் செய்துள்ளது. அதாவது அருகில் பெண் வண்டுகள் வந்தபோது கூட அதனை அலட்சியப்படுத்தும் அளவிற்கு பியர் பாட்டில்களின் மேல் மோகம் கொண்டிருந்ததை டேரில், டேவிட் என்பவர்கள் ஆராய்ச்சி செய்து கூறியதால், வேடிக்கையான சிந்திக்கவும் சிரிக்கவும் வைக்கக்கூடிய ஆச்சரியங்களை வெளிப்படுத்துவதற்கு வழங்கப்படும் நோபல் பரிசை 2011 ல் பெற்றிருக்கின்றனர்.
இந்த பரிசிற்கு ஆஸ்திரேலியா அரசு எதிர்ப்பு காட்டவில்லை என்றாலும் மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்த பாட்டில்களை ரோட்டோரங்களில் தூக்கி வீசக்கூடாது என தடை விதித்துள்ளது.
நகைகளான பொன்வண்டு
பல மாதங்கள் வரை தண்ணீரோ, உணவு உட்கொள்ளாமல் பறக்காது என்பதால் மெக்கட்ஸ் என்ற பொன்வண்டு இனத்தை மக்கள் ஆபரணங்களாக அணிய ஆரம்பித்துள்ளனர். இதில் சிறிய நகைகளை ஒட்டி பின் ஊசியால் துளையிட்டு உயிருள்ள ஆபரணமாக விருப்பமாக அணிய ஆரம்பித்துள்ளனர்.
பல்வேறு வாழ்வியல் அதிசயங்களை கொண்டுள்ள பொன்வண்டுகளையோ அல்லது உயிருள்ள விலங்குகளையோ பறவைகளையோ துன்புறுத்துவதோ ஆபரணமாக அணிந்து கொள்வதோ மனிதர்களுக்கு அழகல்ல.