செங்கடல் ஏன் சிவப்பாக இருக்கிறது? விஞ்ஞானம் சொல்லும் அதிரடி உண்மை!

Why is the Red Sea red?
Red sea
Published on

செங்கடல் சிவப்பாக இருப்பதால் அது அப்பெயரால் அழைக்கப்படவில்லை.‌ அதில் சிவப்பு கலந்த ப்ரௌன் நிறத்தில் ஆல்கே பூப்பதால்தான் அப்படி அழைக்கப்படுகிறது. இந்த ஆல்கேயின் நிறம் தண்ணீரில் சேர்வதாலேயே இதை சிவப்பு கடல் என்று நாம் அழைக்கிறோம். இந்த உலகம் கடல்களால் சூழப்பட்டுள்ளது.‌ ஆப்பிரிக்காவிலும் ஆசியாவிலும் உள்ள கடல்தான் சிவப்புக் கடல் என (Red sea) அழைக்கப்படுகிறது. இது ஆப்பிரிக்கா மற்றும் அரேபிய தீபகற்பத்தின் இடையே அமைந்ததாகும். இது சுமார் 2250 கி.மீட்டர் நீண்டுள்ளது.‌ எகிப்து, சூடான், எனிட்ரியா, சவுதி அரேபியா மற்றும் இஸ்ரேல் வரை இது செல்கிறது. இதை ரிஃட் பள்ளத்தாக்கு என்பார்கள். இது 3000 மீட்டர் வரை ஆழம் கொண்டது.

நிலப்பகுதியில் மேம்படும் மழை நதிப் பகுதியில் பாயும்போது இடைப்பட்ட பகுதிகளில் இருக்கும் உப்பையும் சேர்த்துக் கொள்கிறது. இந்தத் தண்ணீர் கடலை அடைந்ததும் கடல் நீரில் உப்பு சேர்கிறது. ஆனால், கடல் நீர் ஆவியாகும்போது கனமான உப்புக்களும் தாதுக்களும் கடலிலேயே தங்கி விடுவதால் கடல் நீர் உப்பாகி விடுகிறது.

இதையும் படியுங்கள்:
"கூட்டுக் குடும்பம்னா இதுதான்!" - மத்தவங்க குழந்தைக்கு சோறு ஊட்டுற தவிட்டுக் குருவியோட தாராள மனசு!
Why is the Red Sea red?

இந்த தாதுப் பொருட்கள் அடர்த்தியை அதிகரிப்பதால் கடலில் பொருட்கள் மிதக்கின்றன‌. சிவப்பு நிற பாசிகள் நீரின் மேற்பரப்பில் பூக்கும்போது கடல் சிவப்பு நிறத்தில் காட்சி அளிக்கும். கடலின் அடிப்பகுதியில் உள்ள சிவந்த வண்டல் மண் மற்றும் சிவப்பு பவளப் பாறைகள் காரணமாக இது செங்கடல் என அழைக்கப்படுகிறது.

சிவப்புக் கடல் உலகிலேயே மிக வெப்பமான மற்றும் உப்புத் தன்மை நிரம்பிய கடல் பகுதியாகும். Trichodesmium erythraeum என்ற ஆல்கே வகை அதிக அளவில் இதில் காணப்படும். இது மெடிடெரேனியன் கடல் மற்றும் சூயஸ் வாய்க்காலை  இணைக்கிறது.

சிவப்புக் கடல் பற்றிய சுவையான செய்திகள்:

உலகில் 10லிருந்து 30 சதவிகித கடல்வாழ் உயிரினங்கள் வேறு எங்கும் காணாத நிலையில் இந்தக் கடலில் காணப்படுகிறது. இதன் தெற்குப் பகுதி இந்தியப் பெருங்கடலுடன் சேர்ந்து gate of tears என்று அழைக்கப்படுகிறது.

ஹைட்ரோ தெர்மல் பண்பால் இக்கடலின் உள்ளே உப்புக் குளங்களும், உலோக மணலும் காணப்படுகின்றன. இக்கடல் நீரில் உப்புத்தன்மை அதிக அளவில் இருப்பதால் இதில் நீந்துவது மிதப்பது போன்று இருக்கும். இக்கடல் பகுதியில் சேதமடைந்த கப்பல் பகுதிகள் பாதுகாப்பாக இருக்கின்றன. இக்கடலின் மையப் பகுதியில் குறைந்த அலைகளே காணப்படும். ஆப்பிரிக்கா மற்றும் அரேபியா இடையே இக்கடல் காணப்படுகிறது.

இதையும் படியுங்கள்:
வாழ்வாதாரம் தேடி வருடம்தோறும் கண்டம் விட்டு கண்டம் இடப்பெயர்ச்சி செய்யும் பறவைகளின் வியத்தகு பயணம்!
Why is the Red Sea red?

உலகிலேயே உப்புச் சுவை மிகுந்ததாக இது கருதப்படுகிறது. சாதாரணமான அளவை விட அதிக உப்பு இதில் உள்ளது. இதற்குக் காரணம் இதன் நீர் ஆவியாவதுதான். மேலும், எந்த நதியும் இதில் கலக்காததும் ஒரு காரணமாகும். இதில் உள்ள பவளப் பாறைகள் இந்தக் கடலின் வெப்பத்தைத் தாங்கக்கூடிய பண்பைப் பெற்றுள்ளது. இக்கடலின் உள்ளே உள்ள உலோக மணலில் துத்தநாகம், சில்வர் போன்றவை இருப்பதாக அறியப்படுகிறது‌. உலகின் அதிக மீன் இனம் மற்றும் பவழங்கள் இதில் அதிக அளவு காணப்படுவதற்குக் காரணம் இதன் உப்புத்தன்மைதான்.

இக்கடல் நீர் மிக சுத்தமாக இருக்கும். ஏனென்றால், இதில் எந்த ஆறுகளும் கலப்பதில்லை. இக்கடல் கிறிஸ்து பிறப்பதற்கு 2500 ஆண்டுகளுக்கு முன்பு எகிப்தியர்களால் கண்டுபிடிக்கப்பட்டது. இக்கடலின் மையப்பகுதி சுமார் 2000 மீட்டர் ஆழம் கொண்டது‌. இங்கு அதிக அளவில் உப்புக் குளங்கள் உள்ளன. இது ஆக்சிஜன் இல்லாத குளங்களாகும்.

இந்த செங்கடல் பற்றிய புராணக் கதை ஒன்று உண்டு. இஸ்ரேல் மோசஸ் மற்றும் அவருடன் இருந்தவர்கள் எகிப்து படையிடமிருந்து தப்பிக்க செங்கடல் வழியாக செல்ல அது வழி விட்டதாகக் கூறப்படுகிறது. பண்டைக் காலத்தில் வியாபாரம்  மற்றும் வணிகம் பெருக இது முக்கியக் காரணமாக இருந்துள்ளது.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com