
Zebra செடி சமையலறை காற்றின் நச்சுக்களை நீக்கி, பிராண வாயுவை வெளியிடுகிறது. இது சமையலறையில் உணவு தயாரிக்கப்படும் இடத்தின் சூழலை மிகவும் சுத்தமாக வைத்திருக்க உதவுகிறது.
இந்தச் செடி பார்ப்பதற்கு சிறிய அளவில் இருப்பதால் உங்கள் சமையலறை இடத்தை அடைத்துக்கொள்ளாமல் இருக்கும்.
இந்தச் செடியை பராமரிப்பதும் மிகவும். சுலபமாகும். அதிகத் தண்ணீரும் தேவைப்படாது. அவ்வப்போது நீர் ஊற்றினாலே போதும்.
இதன் பச்சை பசேலென்று இருக்கும் இலைகளைப் பார்க்கும்போது மன அழுத்தம் நீங்கி, மகிழ்ச்சி உண்டாவதால் சமையல் வேலையை நீங்கள் அனுபவித்துச் செய்வீர்கள்.
இச்செடியின் பச்சை இலைகளில் வெள்ளைக் கோடுகளும் காணப்படும். இலைகளின் இந்த கண்களைக் கவரும் தோற்றம் உங்கள் சமையலறையின் அழகை இன்னும் மெருகூட்டும்.
இது சிறிய அளவில் இருந்தாலும் ஈரத்தன்மையை வெளிப்படுத்தக்கூடிய பண்பு கொண்டது. இதனால் உங்கள் சமையலறையின் வறண்ட சூழலைத் தடுத்து, ஈரப்பதத்துடன் வைக்கிறது.
இந்தச் செடியில் நச்சுத்தன்மை இல்லாததால் பயப்படாமல் இதை சமையலறையில் வைக்கலாம்.
இதன் தோற்றமும், நல்ல வண்ணமும், அழகும் புதினா மற்றும் துளசியைப் போன்று ஆரோக்கியமானதாக இருப்பதால் வீட்டிற்குள் அதுவும் சமையலறைக்குள் வைக்க ஏற்றச் செடியாகும்.
பெங் சுயி வாஸ்து பிரகாரம் இந்தச் செடி எதிர்மறை ஆற்றல்களை உறிஞ்சி, நேர்மறை ஆற்றல்கள் தருவதாக அறியப்படுகிறது. அமைதியான மற்றும் நேர்மறையான சக்தியைத் தூண்டக்கூடிய பண்பை பெற்றது இந்த வரிக்குதிரை செடிகள்.
இந்தச் செடியில் சீசனின்போது நல்ல மஞ்சள் நிறப் பூக்கள் பூக்கும். பச்சை பசேலென உள்ள இலையோடு, மஞ்சள் பூக்கள் நிறைந்து மிகவும் அழகாகக் காட்சி தரும். இந்த வரிக்குதிரை செடியை உங்கள் சமையலறையில் வைத்து அறையின் அழகை மேம்படுத்துங்கள்.