

நன்னாரி குறுகிய நீண்ட இலைகள் நீண்ட மீன் வடிவில உடைய கம்பி போன்ற கொடி இனம். இக்கொடியின் பூக்கள் வெளிப்புறம் பசுமையாகவும், உள்புறம் கத்தரிப்பு நிறத்திலும் கலந்து இருக்கும். இதன் நறுமணம் உள்ள வேர்களே மருத்துவ பயன் உடையது. நன்னாரி நறுக்கு, மூலம் நறுநீண்டி, பாதாள மூலிகை போன்ற பல பெயர்களால் அழைக்கப்படுகிறது. இது சித்தா, ஆயுர்வேத, ஓமியோபதியிலும் அதிக அளவில் பயன்படுத்தப்படுகிறது.
தமிழகத்தின் எல்லா பகுதிகளிலும் தானே வளரக்கூடியது. நன்னாரியில் பக்க விளைவுகள் கிடையாது. நன்னாரி என்றாலே சர்பத்தான் நமக்கு நினைவுக்கு வரும். நன்னாரி சர்பத் குடிப்பதற்கு இதமான உடல் வியர்வையை கூட்டி, சிறுநீர் பிரியவும், உடல் உஷ்ணத்தை தணிக்கும் கல்லீரலைக் குணப்படுத்தும். ஜீரண சக்தியை கொடுக்கும் ஒரு பொருளாகவும் கருதப்படுகிறது.
இதில் எண்ணற்ற மருத்துவ பலன்கள் நமக்கு கிடைக்கின்றன. நன்னாரி வேரை ஒரு துணியில் கட்டி மண் பானையில் குடிநீரில் போட்டு அந்த நீரை குடித்து வந்தால் உடல் வெப்பம், தாகம் தீர்க்கும். ரத்ததத்தில் கலந்த நச்சுக்களை அகற்றி தூய்மைப்படுத்தும்
தாகம் தணிய
நன்னாரி சர்பத்தை தண்ணீரில் ஊற்றி சிறிது எலுமிச்சை சாறு, கலந்து குடித்தால் கோடை காலத்தில் ஏற்படும் தாகத்தை தணித்து, உடல் சூடு, நீர் இழப்பை சமன்படுத்தும் ஒரு சிறந்த மூலிகையே நன்னாரி வேர் ஆகும்.
சிறுநீர் எரிச்சல், மலச்சிக்கல், பித்தம், உடல் வலி, தோல் நோய்களைக் குணப்படுத்த உதவுகிறது. இது இரத்தத்தை தூய்மைப்படுத்தி உடலுக்கு புத்துணர்ச்சி மற்றும் ஆற்றலை வழங்குகிறது.
நன்னாரி வேர் சித்த மருத்துவத்தில் பயன்படுத்தப் படுகிறது. உடலுக்கு புத்துணர்வு கொடுக்கக் கூடியதும் குளிர்ச்சி தர வல்லதுமான நன்னாரி வேரின் மருத்துவ குணங்களை பார்ப்போம்.
மலச்சிக்கல் தீர
அரை ஸ்பூன் நன்னாரி வேர் பொடியுடன் பத்து உலர்ந்த திராட்சை சேர்த்து நீர் விட்டு கொதிக்கவிட்டு வடிகட்டி இரவு நேரத்தில் குடித்து வந்தால் மலச்சிக்கல் சரியாகும்.
பித்தம் தீர
நன்னாரி வேரை அரைத்து தேனில் கலந்து சாப்பிட்டு வந்தால் அதிக பித்தம் தீரும். நன்னாரி வேரை அரைத்து கந்தாழைக் சாற்றுடன் சேர்ந்து சாப்பிட்டால் வண்டுக் கடியினால் ஏற்பட்ட அனைத்து விஷபாதிப்புகளும் தீரும்.
நன்னாரிவேர் பொடியை அரை கிராம் அளவு எடுத்து வெண்ணெயில் குழைத்து காலை மாலை சாப்பிட வெண் குஷ்டம் தீரும்.
பச்சை நன்னாரி வேர் 5 கிராம் எடுத்து அரைத்து ஒரு டம்ளர் பாலில் சாப்பிட்டு வர மூலச்சூடு, மேக வெட்டை, நீர்க்கடுப்பு, நீர் சுருக்கு, வறட்டு இருமல் ஆகியவை தீரும்.
கோடை காலத்தில் ஏற்படும் அம்மை, சிறுநீர் எரிச்சல், ரத்த சீதபேதி போன்றவற்றை சரி செய்யக்கூடிய தன்மை நன்னாரிக்கு உண்டு. இது நோய்எதிர்ப்பு சக்தி உடையது
வெயில் காலத்தில் ஏற்படும் நோய்களிலிருந்து பாதுகாத்துக்கொள்ள எளிய மருந்தாக நன்னாரி பயன்படுகிறது. நன்னாரி வேரை நீர் விட்டு காய்ச்சி எடுத்து வடிகட்டி அதில் வெல்லம், எலுமிச்சை சாறு கலந்து தயாரிப்பதே நன்னாரி சர்பத். இது கோடைகாலத்தில் சிறந்த பானமாக திகழ்கிறது.
வெளிநாடுகளில் விளையாட்டு வீரர்கள் நன்னாரி கலந்த பானங்களை அடிக்கடி குடிப்பதால் உடற்பயிற்சி செய்யும்போது உடலில் ஏற்படும் அதிக வெப்பம் தணிந்து உடலுக்கு புத்துணர்வு கிடைக்க நன்னாரி உதவுகிறது என்று கூறுகின்றனர்.