Heat Shield Paint
Heat Shield Paint

சுற்றுச்சூழலை பாதிக்கும் ACக்கு மாற்று இதுதான்!

Published on

வெயில் காலங்களில் இப்போதெல்லாம் வெப்பநிலையை தாங்க முடிவதில்லை. இதன் காரணமாகவே பலரும் தங்களது வீடுகளில் ஏசி வாங்கி மாட்டிக்கொண்டு குலுகுளுவென இருக்கிறார்கள். ஆனால். அந்த ஏசியால் உலக வெப்பநிலை மேலும் அதிகரிக்கும் வாய்ப்புள்ளது. ஏசியிலிருந்து வெளியேறும் வாயுக்கள் உலக வெப்பமயமாதலுக்கு முக்கியக் காரணமாகத் திகழ்கிறது.

ஆனால், ACக்கு மாற்றாக வீடுகளில் சில வகையான மேற்பூச்சுகளை பூசுவதனாலேயே வீட்டின் வெப்பநிலையை குறைக்க முடியும். அடர் நிறங்களுக்கு வெப்பத்தை உறிஞ்சும் தன்மை அதிகம் இருக்கும். உதாரணத்திற்கு கருப்பு நிறம் அதிகப்படியான வெப்பத்தை உள்ளே இழுக்கும் தன்மை படைத்தது. அதனாலேயே அதை வெயில் காலங்களில் அணியக் கூடாது என்பார்கள்.

லேசான நிறங்கள் குறைந்த வெப்பத்தையே உள்ளே உறிஞ்சும். இதன் காரணமாகவே சமீப காலமாக ஹிட் ஷீல்ட் அல்ட்ரா வெள்ளைப்பூச்சுகள் வீடுகளின் மேற்புறத்தில் பூசப்படுகின்றன. இவை கிட்டத்தட்ட 95 சதவீதம் வரை வெப்பத்தையும் ஒளியையும் பிரதிபலித்து விடுகின்றன. எனவே, ஹாங்காங்கை சேர்ந்த விஞ்ஞானிகள் பீங்கான் பொருட்களைப் பயன்படுத்தி வெள்ளைப் பூச்சு ஒன்றை உருவாக்கியுள்ளனர். இதை ஒருவர் தனது வீட்டுக் கூரையின் மீது பூசினால், 99.6 சதவீத ஒளி மற்றும் வெப்பத்தை பிரதிபலித்துவிடும் என்கின்றனர்.

இதையும் படியுங்கள்:
துபாய் செயற்கைத் தீவுகளால் கடல்வாழ் உயிரினங்களுக்கு ஆபத்து!
Heat Shield Paint

இதுவரை கண்டுபிடிக்கப்பட்ட மேற்பூச்சுகளில் இதுதான் அதிகபட்சம் பிரதிபலிக்கும் திறனைக் கொண்டது. இதில் அலுமினியமும் பயன்படுத்தப்பட்டுள்ளது என்பதால் 1000 டிகிரி செல்சியஸ் வெப்பத்தையும் தாங்கும். மேலும், எளிதில் தீப்பிடிக்காது. இது வெள்ளை நிறத்தில் மட்டுமின்றி, மற்ற பிற நிறங்களிலும் கிடைக்கும். விரைவில் இது மக்களின் பயன்பாட்டுக்கு வந்தால் ஏசிக்கு வேலை இல்லாமல் போய்விடும் என்கின்றனர் விஞ்ஞானிகள். ஏனெனில், இந்த மேற்பூச்சை வீட்டின் மீது பூசிவிட்டால் வீடு குளுகுளுவென மாறிவிடும்.

logo
Kalki Online
kalkionline.com