சுற்றுச்சூழல் தூய்மையோடு, மருத்துவ மூலிகையாகவும் பயன்படும் வீட்டுத் தோட்டம்!

சுற்றுச்சூழல் தூய்மையோடு, மருத்துவ மூலிகையாகவும் பயன்படும் வீட்டுத் தோட்டம்!

பூங்காவுக்கு நடைபயிற்சிக்கோ, பொழுதுபோக்கவோ சென்றால் சில நிமிடங்களில் மனம் லேசாகிவிடும். காரணம் அங்கிருக்கும் விதவிதமான மரங்களும், செடிகளும் அழகிய பூக்களுமே. அதை நம் வீட்டிலோ, மாடியிலோ வளர்த்தால் அதுவே வீட்டுத் தோட்டம். வெறுமனே அழகுக்காக செடி வளர்ப்பதற்கு ஆசைப்படுபவர்கள் நிறையப் பேர் உண்டு. இவர்கள் விதவிதமான பல வண்ணங்களில் குரோட்டன் செடிகள் வளர்த்து பூந்தோட்டம் அமைத்து பராமரிப்பர். சிலர் இடமில்லாதபோது செடிகளை பூந்தொட்டியில் வளர்த்து அழகாக்குவார்கள். வெறும் அழகுக்கான பூச்செடிகளாக இல்லாமல் அவை நறுமணத்தை பரப்பும், வீட்டையும் இனிமையாக்கும்.

குறிப்பாக மல்லி, முல்லை, ஜாதிமல்லி, செம்பருத்தி செடிகளையும் வளர்க்கலாம். இவை நறுமணம் தருவதோடு, பெண்களுக்கு தலையில் சூடவும், தெய்வப் படங்களுக்கு வைத்தும் வழிபடலாம். வீட்டுத் தோட்டத்தில் ரோஜா, செண்டுமல்லி, செம்பருத்தி, சம்பங்கி செடிகளை தொட்டியிலோ, தரைலோ வளர்க்கலாம்.

இதையும் படியுங்கள்:
முருங்கை மரத்தில் கம்பளி பூச்சியா? என்ன செய்யலாம்?
சுற்றுச்சூழல் தூய்மையோடு, மருத்துவ மூலிகையாகவும் பயன்படும் வீட்டுத் தோட்டம்!

இயற்கை மீதும், இயற்கை சார்ந்த முறையில் அக்கறை கொண்டவர்கள் தங்கள் வீட்டில் மூலிகை தோட்டம் அமைக்கலாம். சுவாசக் கோளாறுகளுக்கும், ஜலதோஷத்துக்கும் சிறந்த நிவாரணம் தரும் மூலிகைகள் நிறைய உள்ளன. இதில் முதன்மையானது துளசி. இது சளி, ஜலதோஷம், இருமல் அனைத்துக்கும் நிவாரணம் தரும். அடுத்து, தூதுவளை. இந்தக் கீரை கோழையை அகற்றும், மார்சளி நீங்கும். அடுத்து கற்பூரவல்லி. குழந்தைகளுக்கு சளி, ஜலதோஷத்திற்கு நிவாரணமாகப் பயன்படுகிறது. இவை மட்டுமின்றி, கீழாநெல்லி, நித்யகல்யாணி, கறிவேப்பிலை, வெற்றிலை எனவும் வளர்க்கலாம்.

வெறுமனே தோட்டம் வைத்தால்  மட்டும் போதாது. அதை முறையாகப் பராமரித்து களைச் செடிகளை அகற்றி, தேவையான உயரத்தில் வளர்க்க வேண்டும். இதற்கு இயற்கை எருவையும், காய்கறிக் கழிவுகளையும் உரமாக்கிப் போடலாம். நம்ம ஊர் தட்ப வெப்ப நிலைக்கு ஏற்ப செடிகளை வளர்த்தால் அவை செழிப்புடன் வளரும். அவை வளர்வதற்கு ஏற்ற மண் ரகம் உள்ளதா என்பதை விவசாய நிபுணர்களின் கருத்து கேட்டு என்னென்ன செடிகள் வைக்கலாம் என முடிவு செய்து வளர்க்கலாம். இந்தத் தோட்டத்துக்காக நாம் செய்யும் உடல் உழைப்பு நமக்கு சிறந்த உடற்பயிற்சியாகவும் அமைகிறது.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com