
நீங்கள் தற்போது கடலில் இருப்பதாக வைத்துக் கொள்வோம். நீங்கள் நீந்தி சென்றுக் கொண்டிருக்கும் போது அடிப்பட்டு ஒரு சொட்டு ரத்தம் வந்தாலும், அதை ஒரு கிலோ மீட்டருக்கு அப்பால் இருக்கும் சுறா மீன்களால் மோப்பம் பிடித்து வர முடியுமாம். சுறா மீன்களுக்கு ரத்தத்தை மோப்பம் பிடிக்கும் சக்தி அதிகம்.
ஏனெனில், சுறா மீன்களுக்கு இதன் மூலம் தெரிய வருவது என்னவென்றால், அங்கே ஒரு உணவு இருக்கிறது. அது காயப்பட்டிருக்கிறது. அங்கே சென்றால் அந்த உணவை சீக்கிரம் சாப்பிட்டு விடலாம் என்பதே. ஆகவே, ரத்தத்தை மோப்பம் பிடிப்பதற்கு சுறா மீன்கள் பரிணாம வளர்ச்சியடைந்துள்ளன.
அதுப்போல மனிதர்கள் மழையின் வாசத்தை நன்றாக உணர்வது போல பரிணாம வளர்ச்சியடைந்திருக்கிறோம். எப்படி சுறா மீன்களால் ரத்தத்தை கடலில் உணர முடிகிறதோ அதுப்போல மனிதர்களால் 2000 மடங்கு அதிகமாக மழையின் வாசத்தை உணர முடியுமாம்.
எங்கோ பெய்கிற மழையினுடைய வாசத்தை நாம் வேறு எங்கோ இருந்துகூட உணர முடியுமாம். மழைக்கான வாசம் எப்படி உருவாகிறது என்றால், செடிகள் ஒரு வகையான எண்ணெயை உற்பத்தி செய்யும்; பேக்டீரியா Geosmin என்ற காம்பவுண்டை உருவாக்கும். மழை தரையில் விழும் போது மண்ணில் இருந்து இந்த இரண்டு Compound உம் வெளியிலே வரும். அதனால் தான் மழை பெய்யும் போது வாசனை வருகிறது. அந்த வாசனைக்கு பெயர் Petrichor.
இதை கேட்க சாதாரணமாக இருந்தாலும், இது மனிதர்களுக்கு மிக பெரிய பரிணாம வளர்ச்சி என்றே சொல்ல வேண்டும். ஏனெனில், நம்மை பொருத்தவரை மழை என்பது மிகபெரிய Life source ஆக பார்க்கப்படுகிறது. மழை பெய்தால் நிலம் வளமாகும், நிறைய செடிகள் வளரும், அதற்காக விலங்குகள் வரும், நல்ல தண்ணீர் கிடைக்கும். இதனால் நாம் எளிதாக உயிர் வாழ்வதற்கு ஏற்ற இடமாக அது மாறிவிடும்.
இப்போது நாம் இருக்கும் இடத்தில் தண்ணீர் பற்றாக்குறையாக இருக்கிறது என்றால், தூரத்தில் மழை பெய்யும் போது அதன் வாசனையை வைத்து நாம் அந்த இடத்தை கண்டுப்பிடித்து சென்று விடுவோம். இதன் காரணமாக தான் மனிதர்களுக்கு மழை வாசனையை தூரத்தில் இருந்தே உணரும்படி பரிணாமவளர்ச்சி அடைந்துள்ளோம்.
இதை கேட்கும் போது பயங்கர ஆச்சர்யமாக இருக்கிறதல்லவா? அடுத்தமுறை மழையின் வாசத்தை உணரும் போது அது நம்முடைய வாழ்வாதாரமாக இருந்திருக்கிறது என்பதை நினைவில் வைத்துக் கொள்ளுங்கள்!