

புயல் வரப்போகிறது என்றால் முதலில் தண்ணீர் இருப்பு. அதன்பின் மொபைல் சார்ஜ் பற்றி யோசிப்போம்... ஆனால், பாதிப்பை அதிகரிக்கும் மரங்களைப் பற்றி யோசிப்போமா?
என்னென்ன விஷயங்கள் ஆபத்தை ஏற்படுத்தும்?
இந்தியாவின் கடலோர மற்றும் அதிக காற்று வீசும் மண்டலங்களில் தாவரங்களுக்குப் புயல்களால் பல அச்சுறுத்தல்கள் ஏற்படுத்துகின்றன. மரங்கள், தாவரங்களைப் பாதுகாக்க புயல் வருவதற்கு முன்பே சில விஷயங்களைச் செய்வது மிகவும் அவசியம். தேசிய பேரிடர் மேலாண்மை ஆணையத்தின் (NDMA) கூற்றுப்படி வீடுகள் அல்லது மின் கம்பிகளுக்கு அருகில் உள்ள காய்ந்த (prune dead) அல்லது பலவீனமானக் கிளைகள் (weak branches), இறக்கும் மரங்களை(remove dying trees) முதலில் அகற்ற வேண்டும்.
அகற்றினால் மரங்களின் கீழ் நிறுத்தப்படும் இரண்டு சக்கர வாகனங்கள், கார் மற்றும் கனரக வாகனங்களின் சேதாரங்கள் தவிர்க்கப்படும், பறக்கக்கூடும் குப்பைகளின் எண்ணிக்கையைக் குறைக்கிறது. வாழை அல்லது கரும்பு போன்ற மெல்லிய தாவரங்களுக்கு மூங்கில் குச்சிகள் அல்லது கயிறுகளைப்(remove dying trees) பயன்படுத்தி ஆதரவு(support) கொடுங்கள். இது பலத்தக் காற்றின்போது அவற்றை கீழே சாயாமல் நிமிர்ந்து வைத்திருக்க உதவுகிறது.
புயலை எதிர்த்து நிற்கும் மரங்கள்
புயல் எதிர்த்து நிற்கும் மரங்களைத் தேர்ந்தெடுப்பது மற்றொரு நீண்டகால உத்தியாகும். வேப்ப மரம், நாவல் பழ மரம், மாமரம் போன்ற மரங்கள் ஆழமான வேர்கள் மற்றும் பரந்து வளரக்கூடியவை(canopies). அவை பலத்த காற்று சேதத்திற்குத் திறம்பட எதிர்த்து நிற்பவை. இருப்பினும் நகர்ப்புறங்களில் உள்ள கட்டடங்கள், மேல்நிலை மின் கம்பிகளை(overhead wires) விட்டு தள்ளி மரங்களை நடுவது தேவையற்ற ஆபத்தைக் குறைக்கிறது.
புயல் சேதாரத்தை எப்படி முன்கூட்டியே கணிக்கலாம்?
ஒரு மரம் ஒரு சூறாவளியின்போது சேதத்தை ஏற்படுத்துமா என்பதைக் கண்டறிய அதன் சாய்வு கோணம்(leaning angle), வேர் வெளிப்பாடு(root exposure), கிளைகளின் அடர்த்தியை வைத்துக் கணிக்கலாம்.
ஆழம் இல்லாத வேர்கள், காய்ந்த தண்டுகள்(hollow trunks) அல்லது அதிகம் மேல் பகுதி வளர்ச்சி(heavy top growth) கொண்ட மரங்கள் விழவோ, உடையவோ அதிக வாய்ப்புள்ளது. ஒரு மரம் கட்டடங்களுக்கு அருகில் இருந்தாலோ அல்லது கூரைகளுக்கு மேல் கிளைகள் தொங்கிக்கொண்டிருந்தாலோ; அதை வெட்ட வேண்டும் அல்லது அதற்கு தற்காலிக ஆதரவையாவது(Temporary support) கொடுக்க வேண்டும் .
சிறிய தாவரங்கள் புயல் எச்சரிக்கைகளின்போது தாவரங்களுக்கு அதிகமாக நீர்ப்பாசனம் செய்வதைத் தவிர்க்கவும். ஏனெனில் ஈரமான மண் வேர் பிடியைப் பலவீனப்படுத்துகிறது. புயலுக்குப் பிறகு பூஞ்சை தொற்று(fungal infections), வேர் அழுகலைத்(root rot) தடுக்க; வயல்கள், தோட்டங்களில் இருந்து தேங்கியிருக்கும் மழை நீரை வெளியேற்ற வேண்டும். ஆக புயலைப் பொறுத்தவரை நாம் எவ்வளவு தயாராக இருக்கிறோம் என்பது முக்கியமானது.
எந்த மரங்கள் பாதிக்கப்படக்கூடியவை என்பதை அறிந்து முன்கூட்டியே செயல்படுவது; தேவையற்ற சேதத்தைத் தடுக்கவும், அதனால் பாதிக்கக்கூடும் உயிர்களையும் காப்பாற்றவும் உதவும்.