புயல் காற்று வீசுகிறது... சரி... புயல் எப்படி உருவாகிறது?

storm
storm
தேனி மு.சுப்பிரமணி

தேனி மு. சுப்பிரமணி தேனியில் சுயநிதிப் பொறியியல் கல்லூரி ஒன்றில் நிருவாக மேலாளர் மற்றும் செயலாளர் (கூடுதல் பொறுப்பு) நிலையில் பணியாற்றிய தேனி மு. சுப்பிரமணி, கல்லூரி நிருவாகத்துடன் ஏற்பட்ட கருத்து வேறுபாட்டால் அங்கிருந்து வெளியேறிய பின்பு, தமிழில் வெளியாகும் பல்வேறு இதழ்களில் எழுதி வருகிறார். ஆன்மிகம், கணினி, இணையம், கல்வி உள்ளிட்ட பல்வேறு துறைகளில் இரண்டாயிரத்துக்கும் அதிகமான கட்டுரைகளை எழுதியிருக்கிறார். இதுவரை இவர் எழுதிய பத்தொன்பது நூல்கள் வெளியாகியிருக்கின்றன. இவர் எழுதிய ‘தமிழ் விக்கிப்பீடியா’ எனும் நூலுக்குத் தமிழ்நாடு அரசின் தமிழ் வளர்ச்சித் துறையின் சிறந்த நூலுக்கான பரிசு கிடைத்திருக்கிறது என்பது இங்கு குறிப்பிடத்தக்கது. நடைமுறை வாழ்க்கையில் தூயதமிழைப் பயன்படுத்தி, தமிழ் மொழியின் வளர்ச்சிக்கும், பாதுகாப்பிற்கும் உறுதுணையாக இருக்கும் இவரைப் பாராட்டித் தமிழ்நாடு அரசின் செந்தமிழ்ச் சொற்பிறப்பியல் அகரமுதலித் திட்ட இயக்ககம் 2022 ஆம் ஆண்டுக்கான ‘தூயதமிழ்ப் பற்றாளர் விருது’ வழங்கிச் சிறப்பித்திருக்கிறது. தமிழ்நாடு அரசின் தமிழ் வளர்ச்சித் துறையினால் நடத்தப்பெற்று வரும் இளந்தமிழர் இலக்கியப் பட்டறை, ஆட்சி மொழிப் பயிலரங்கம், கருத்தரங்கம் உள்ளிட்ட நிகழ்வுகளிலும், தமிழ்நாட்டிலுள்ள பல்வேறு கல்லூரிகளில் நடத்தப்பெறும் பயிலரங்கம் மற்றும் கருத்தரங்கம் உள்ளிட்ட நிகழ்வுகளிலும் கலந்து கொண்டு ‘இணையத்தமிழ்’ தொடர்பாகப் பல்வேறு பயிற்சி வகுப்புகளை நடத்தி வருகிறார். தேனித் தமிழ்ச் சங்கத்தின் தலைவராக ஆறு ஆண்டுகளாகச் செயல்பட்டு வந்த இவர், தற்போது தேனித் தமிழ்ச் சங்கத்தின் செயலாளராகவும், சென்னை, சங்கம் தமிழ் அறக்கட்டளையின் செயலாளராகவும் செயல்பட்டு வருகிறார். முத்துக்கமலம் (www.muthukamalam.com) எனும் பெயரில் பன்னாட்டுத் தமிழ் மின்னிதழ் (ISSN: 2454 - 1990) ஒன்றினை 2006 ஆம் ஆண்டில் தொடங்கி, அதன் ஆசிரியராகத் தொடர்ந்து செயல்பட்டு வருகிறார். மாதமிருமுறை புதுப்பிக்கப்பட்டு வரும் முத்துக்கமலம் இணைய இதழ் குறித்து ஆய்வு செய்து இருவர் எம்.பில் பட்டங்களைப் பெற்றிருக்கின்றனர். ‘முத்துக்கமலம் இணைய இதழின் இலக்கியப் பணிகள்’ எனும் தலைப்பில் ஒருவர் மதுரை காமராசர் பல்கலைக்கழகத்தில் முனைவர் பட்டத்திற்கான (Ph.D) ஆய்வு மேற்கொண்டு வருகிறார் என்பதும் இங்கு குறிப்பிடத்தக்கது. பல்கலைக்கழக மானியக் குழுவின் தமிழ் மொழிக்கான ஆய்விதழ்களின் பட்டியலில் முத்துக்கமலம் இதழ் ஒரு ஆண்டு காலம் இடம் பெற்றிருந்தது என்பதும் இங்கு கவனிக்கத்தக்கது.

Updated on

'Storm' (புயல்) என்ற ஆங்கிலச் சொல், சத்தம், கொந்தளிப்பு என்ற பொருளைக் குறிக்கும் 'sturmaz' என்ற ஆதி செருமானிய சொல்லிலிருந்து வந்ததாகும். இந்தப் புயலினால் மின்னல், இடிமழை, பனிப்பொழிவு, கனமழை, ஆலங்கட்டிமழை, பனிப்புயல், பலமான மழைக்காற்று, கடும் உறைபனி, புழுதிப்புயல், மணற்புயல், வெப்பமண்டலச் சூறாவளி அல்லது வளிமண்டலத்தின் ஊடாகப் பொருட்களைத் தூக்கி வீசுவது போன்ற குறிப்பிடத்தக்க இடையூறுகள் மூலம் காற்று என்ற பருப்பொருளின் அமைதிக் குலைவு சுட்டிக்காட்டப்படுகிறது.

உயர் காற்றழுத்த அமைப்பு சூழ்ந்திருக்கும்போது, குறைந்த அழுத்த மையம் படிப்படியாக வளர்ச்சியடைந்து புயல்கள் உருவாகின்றன. எதிரெதிர் சக்திகளின் இந்தக் கலவையானது காற்றை உருவாக்கி, திரள் கார்முகில் போன்ற புயல் மேகங்களை உருவாக்கும். வெப்பமான நிலத்திலிருந்து வீசுகின்ற சூடான காற்றிலிருந்து குறைந்த அழுத்தத்தில் குறிப்பிட்ட ஒரு சிறிய பகுதி உருவாகலாம். இதனால் பேய்க்காற்று, சூறாவளிச் சுழல்காற்று போன்ற இடையூறுகள் ஏற்படுகின்றன.

புயல்களின் தோற்றம் ஒன்றாக இருப்பினும், அதன் நிலைகளுக்கேற்ப அதனைப் பல பெயர்களில் வகைப்படுத்துகின்றனர். 

பனிப்புயல்:

காலம் மற்றும் இருப்பிடத்தின் அடிப்படையில் பனிப்புயலுக்கு மாறுபட்ட வரையறைகள் உள்ளன. பொதுவாக, ஒரு பனிப்புயல் என்பது அதிக விசை கொண்ட கடுங்காற்றுடன் வீசும். குறைந்தது ஒரு மணி நேரத்திற்கு 5 சென்டிமீட்டர் அல்லது 2 அங்குலம் என்ற வீதத்தில் பனி திரண்டு குவியும். 10 பாகை செல்சியசு வெப்பநிலைக்கும் குறைவான கடுங்குளிர் நிலவும். பனிப்புயல் சிலசமயம் மணிக்கு 300 கிலோமீட்டர் வேகத்தில் கூட வீசுவதுண்டு. பனிப்புயலால் பெருஞ்சேதம் உண்டாகும். அண்மையில், அமெரிக்கா முழுவதும் வீசிய பனிப்புயலில் இந்த வெப்ப வரையறைகள் எல்லாம் விலகி மிகக்கடுமையான குளிர் நிலவியது.

வெடிப் புயல்:

மத்திய அட்சரேகை குறைந்த காற்றழுத்தப் பகுதியில், குறிப்பாக பெருங்கடலில் விரைவாகத் தோன்றும் காற்றழுத்தத் தாழ்வு பகுதி நிலத்தின் மீதும் ஏற்படலாம். இந்தப் புயல்களின்போது, வீசும் காற்று, சக்திவாய்ந்த டைபூன், அரிக்கேன் போன்ற சூறாவளிகள் போல இருக்கும்.

கரையோரப் புயல்:

கடலோரப் பகுதிகளைத் தாக்குகின்ற பெரிய மற்றும் இராட்சத அலைகளின் எழுச்சி இருக்கும். அவற்றின் தாக்கத்தால் கடலோரங்களில் அரிப்பு மற்றும் கடல் வெள்ளம் போன்ற ஆபத்துகள் இருக்கும்.

டெரெகோ:

டெரெகோ என்பது பரவலாகவும் நீண்ட நேரமாகவும் நேர் கோட்டில் வீசக்கூடிய புயலாகும். இது நிலத்தை அடிப்படையாகக் கொண்டு வேகமாக நகரும் இயல்புடனும் கடுமையான இடியுடனும் தொடர்புடையது ஆகும்.

இதையும் படியுங்கள்:
கடலில் மூழ்கும் காடுகள்… தமிழ்நாட்டில்தான்… எங்கு தெரியுமா?
storm

பேய்ப்புழுதி:

குறிப்பிட்ட ஓர் இடத்தில் மட்டும் சிறிய காற்று மேல்பகுதியை நோக்கி அரைமீட்டர் முதல் சில மீட்டர்கள் வரை உயர்ந்து குறுகிய காலம் வீசும் பலமான காற்று பேய்ப்புழுதி எனப்படுகிறது.

புழுதிப்புயல்:

அதிக அளவு மணல் அல்லது மண்ணை வாரித் தூற்றும் அளவுக்கு வீசும் காற்று புழுதிப் புயல் எனப்படுகிறது. இச்சூழ்நிலையில் பார்வைத்திறன் வெகுவாக மறைக்கப்படும்.

நெருப்புப்புயல்:

நெருப்புப்புயல் அல்லது தீச்சூறாவளிகள் கொந்தளிப்புடன் காணப்படும். தங்களுக்கான வீசும் காற்றை அவையே உருவாக்கி நிலைநிறுத்திக் கொள்கின்றன. பொதுவாக, நெருப்புப்புயல் என்பது ஓர் இயற்கை நிகழ்வாகும். காட்டுத்தீ போன்ற பெரும் தீயிலிருந்து இவை உருவாகின்றன. செயற்கையாக வெடிகுண்டுகளையும், எரிகுண்டுகளையும் வீசுவதன் மூலம் நகரங்களிலும் இவற்றை உருவாக்க முடியும்.

கடுங்காற்று:

மணிக்கு 39 முதல் 55 மைல் வேகத்தில் நீடித்த காற்றுடன் கூடிய ஒரு வெப்பமண்டல புயல் பொதுவாகக் கடுங்காற்று என அழைக்கப்படுகிறது.

logo
Kalki Online
kalkionline.com