வீட்டுத் தோட்டங்களில் அதிகம் காணப்படும் மல்லிகை பூச்செடிகள் இருந்து அதிகமான பூக்களை பூக்க செய்யவும், விரைவாக போக்க செய்யவும் எடுக்க வேண்டிய நடவடிக்கைகள்.
பெரும்பான்மையான வீட்டுத் தோட்டங்களில் பூக்களுக்கென்று தனி இடம் இருக்கும். அதிலும் குறிப்பாக ரோஜா, மல்லிப்பூவை வளர்க்க மக்கள் ஆர்வம் காட்டுவர். ஆனால் மல்லிப்பூ செடியில் இருந்து அதிக பூக்கள் பூக்கவில்லை, பூக்கள் வளர காலதாமதம் ஏற்படுகிறது என்று பலரும் சொல்ல கேட்டிருப்போம்.
இப்படி வீட்டுத் தோட்டத்தில் வளர்க்கப்படும் மல்லி பூச்செடியில் அதிக பூக்களைப் பூக்க செய்ய தண்ணீர் மட்டும் போதாது. அதற்குத் தேவையான சத்துக்களையும் அளிக்க வேண்டும். அதற்காக பணம், பொருளை செலவு செய்ய தேவை இல்லை. வீட்டில் உபயோகப்படுத்திய முட்டைகளின் ஓடுகளை எடுத்துக்கொண்டு அவற்றை வெயிலில் காய வைத்து மொறுமொறுத் தன்மை ஏற்படும் வரையிலும், துர்நாற்றம் போகும் வரையிலும் காய வைத்து, பிறகு அதை ஒரு பாட்டிலில் அடைத்து அதனுடன் வினிகரை சிறிதளவு சேர்த்துக்கொண்டால் நீர்க்குமிழிகள் வரும்.
சிறிது நேரம் இவ்வாறு ஊறவைத்து பிறகு சிறிதளவு தண்ணீர் சேர்த்து அதை செடிகளில் ஸ்பிரே செய்தால் செடிகள் நன்கு வளரும் அதிக பூக்கள் பூக்கும். அல்லது வாழைப்பூ தோலை எடுத்துக்கொண்டு அவற்றை சிறுக சிறுக வெட்டி பாட்டில் அடைத்து, அதனுடன் தண்ணீரை சேர்த்து 3 நாட்கள் வரை ஊறவைத்து பிறகு அவற்றை வடிகட்டி மேலும் கூடுதலாக தண்ணீரை சேர்த்துக்கொண்டு ஸ்பிரே செய்தால் மல்லிப்பூ அதிகம் பூக்கும்.
மேலும் இந்த நடவடிக்கையின் மூலம் செடிக்கு அதிகமான பொட்டாசியம் கிடைக்கும். இதன் மூலம் கிடைக்கும் சத்து காரணமாக செடி நன்கு பூக்கக்கூடும். மேலும் ஊற வைத்த வாழைப்பூ தோல், கூல் போன்ற காட்சியளிக்கும். அவற்றையும் மண்ணில் கொட்டி வைத்தால் மண்ணின் சத்துக்களும் அதிகரிக்கும். இதனால் மல்லி பூ அதிகமாகவும், விரைவாகவும் பூக்கும்.