யானைக்கு மதம் பிடித்தால்...?

Musth Elephant
Musth Elephant

- தா.சரவணா

இந்த உலகில், ரயில், கடல், யானை ஆகிய மூன்றையும் எத்தனை முறை பார்த்தாலும் போதும் எனத் தோன்றாது என்பார்கள். அந்தளவுக்கு இந்த மூன்றும் எத்தனை முறை என்றாலும் பார்த்து ரசித்துக்கொண்டே இருக்கலாம். ஆனால், யானைக்கு மதம் பிடித்தால்...?

யானைகள் மொழியில் ‛மஸ்து’ன்னா மதம் எனப் பெயர். இது நவம்பர் முதல் ஜனவரி வரையில் யானைகளின் இனச் சேர்க்கை காலத்தில், நெத்தியில் இருந்து மஸ்து நீர் வடியும். பாகன் மேல் பாசம் உள்ள யானைகள், மஸ்து ஆரம்ப நிலையிலேயே பாகனை எச்சரிக்கை செய்யும்.

சாதாரணமாக ஒற்றை கால் சங்கிலியால் யானைகளைக் கட்டிப் போடுவார்கள். ஆனால், மஸ்து அறிகுறி ஆரம்பமாகும்போதே இரு கால்களுக்கும் சங்கிலி போட்டுவிடுவார்கள். சாதாரணமாக அங்குசத்தைப் பார்த்தால் கட்டுப்படும் யானை, மஸ்து நேரத்தில் கட்டுப்படாது. அதன்பிறகு யாரும் அருகே நெருங்கமுடியாது. மஸ்து காலமான இந்த மூன்று மாதமும் அதற்கு ஒரே இடம்தான். அந்த மஸ்து நீர் வாசம், நீண்ட தூரம் வீசும். அந்த வாசம் நுகரும் காட்டு யானைகள் அந்த ஏரியாலேயே இருக்காது.

இதையும் படியுங்கள்:
'யானைப் பாகனுக்கு யானையால்தான் சாவு' – ஏன் இப்படிச் சொல்கிறார்கள்?
Musth Elephant

மஸ்து நிலையில் இருக்கும் யானை வினோதமாக நடந்துகொள்ளும். தும்பிக்கையை தூக்கி தந்தங்களின் மீது போட்டுக்கொள்ளும். அமைதியற்று, ‛உர்’ என உருமிக்கொண்டே இருக்கும். எப்போது யானையிடம் உருமல் சப்தம் வருகிறதோ, அப்போது அதன் அருகே செல்லக்கூடாது. இது கோபத்தின் அறிகுறியாகும்.

பார்வை வெறித்தபடி இருக்கும். மண், செடி, கொடிகளை தலை மீது போட்டுக்கொள்ளும். அதிக பசி எடுக்கும் வரை சாப்பிடாது. மஸ்து நீரை தும்பிக்கையால் தொட்டு, தொட்டு ருசி பார்க்கும். அந்த சுவை யானையை மேலும் மேலும் வெறி ஏற்றும்.

அதனால் மஸ்து நேரத்தில் நூறு பேர் எதிரில் நின்றாலும், அபார ஞாபக சக்தி கொண்ட யானை, தன்னோட பாகன் மேலான பகையைத் தீர்க்க, தன்னிலை மறந்து, வெறி கொண்டு முதலில் பாகனைத்தான் தேடும். அப்போது பாகன் சிக்கினால் அவ்வளவுதான், ஆள் காலி.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com