பாம்பு என்றால் படையே நடுங்கும்... ஆனா இவனுக்கு மட்டும் பயமே கிடையாது! எவன்டா அவன்?

Snake
Snake
Published on

பாம்பு என்றால் பயப்படாத மனிதர்களே கிடையாது. நான் யாருக்கும் பயப்பட மாட்டேன் என்று கூறுபவர்கள் கூட இந்த பாம்பை பார்த்தால் நடுங்குவார்கள். ஆனால் பாம்பு பிடிக்கும் வீரர்கள் அதன் அருகில் சென்று தைரியமாக பிடிப்பார்கள். ஏனென்றால் அவர்கள் முறையான பயிற்சி பெற்றிருப்பார்கள்.

இந்த பாம்பை நேருக்கு நேர் எதிர்க்கொள்ளும் ஒரு விலங்கு என்றால் அது கீரி தான். மனிதர்கள் உட்பட பல விலங்குகளை தன்னுடைய விஷத்தின் மூலம் சிறிது நேரத்திலேயே உயிரிழக்க செய்யும் விஷம் கொண்ட பாம்பு நாகப்பாம்பு. இது தான் உலகிலேயே மிக விஷத்தன்மை கொண்ட பாம்பு. ஆனால் கீரி நாகப்பாம்பின் தலை மற்றும் கழுத்து பகுதியில் தாக்கி சிறிது நேரத்திலேயே அதை விழ செய்திடும்.

பெரும்பாலான கீரி மற்றும் பாம்பு சண்டைகளில் 70-80 சதவீதம் கீரி தான் வெற்றி பெறுகிறது. விஷத்தன்மை கொண்ட பாம்பு கடியில் இருந்து கீரி எவ்வாறு தப்பிக்கிறது. காலங்காலமாக இவை சண்டையிட்டு கொள்வதற்கான காரணம் என்ன என்பதை பற்றி பார்க்கலாம்.

Mongoose Vs Snake
Mongoose Vs Snake

பாம்பு vs கீரி:

மனிதர்களில் பலரும் சண்டையிட்டு கொண்டால், 'ஏன் பாம்பு, கீரி போன்று சண்டையிட்டு கொள்கிறீர்கள்?' என கேட்போம். அந்த வகையில் இயற்கையிலேயே இவை சண்டையிட்டு கொள்வதை வழக்கமாக வைத்திருக்கின்றன. பரம எதிரி என பலரும் கூறி கேள்விப்பட்டிருப்போம். இதற்கு சிறந்த உதாரணம் இந்த கீரியும், பாம்பும் தான். பாம்பு உயிர் வாழ வேண்டும் என்பதற்காக கீரியை கொல்வதும், பாம்பிடம் இருந்து தப்பிக்க பாம்பை கீரி கொல்வதும் காலங்காலமாக நடந்து கொண்டிருக்கிறது. கீரியின் குட்டிகளை பாம்பு கொல்வதால் இந்த சண்டை நடக்கிறது.

பாம்பின் விஷத்தில் கீரி தப்பிப்பது எப்படி?

பொதுவாக இரண்டும் சண்டையிட்டு கொள்ளும் போது பாம்பு அதன் பற்களை கொண்டு கீரியை கடிக்கும். ஆனால் கீரியின் மேற்புறத்தோல் தடிமனாகவும், கடினமாகவும் இருக்கும். எனவே பாம்பு, கீரியை பற்களால் கடித்தால் அதற்கு பாதிப்பு ஏற்படாது. மேலும் ஒரு சில நேரங்களில் பாம்பின் விஷம் கீரியின் உடலில் கலந்தாலும், அந்த விஷத்தை எதிர்த்து கீரியின் உடலில் ஒரு வேதிப்பொருள் சுரக்கும். 

இதையும் படியுங்கள்:
ஒரே கடியில் 100 பேரை கொல்லக்கூடிய பாம்பு எது தெரியுமா? 
Snake

சுமார் 30 நிமிடங்களில் உயிரை பறிக்கும் பாம்பின் விஷத்தில் ஆல்பா-நியூரோடாக்சின் (Alpha-Neurotoxin) என்ற மூலக்கூறு உள்ளது. இந்த விஷம் தான் மரணத்தை ஏற்படுத்துகிறது. இந்த விஷம் கீரியின் உடலில் கலந்த உடன், கீரியின் நோய் எதிர்ப்பு மண்டலம்  அசிடைல்கொலின் ரிஃப்ளெக்ஸ் என்னும் வேதிப்பொருளை சுரக்கும். இது பாம்பின் விஷத்துடன் வினைபுரிந்து அதை சமன் செய்துவிடும். 

எனினும் நாகப்பாம்பின் விஷத்திற்கு கீரியிடம் 100 சதவீதம் நோய் எதிர்ப்பு சக்தி இல்லை. ஆனால் கீரி இறந்து போவதற்கு போதுமான விஷம் அதன் உடலில் கலந்தால் தான் இறந்து போகும். எனவே சுறுசுறுப்பான, பெரிய வலுவான கீரி பாம்புடன் சண்டையிட்டு பாம்பை வென்றுவிடுகிறது.

நீங்கள் இருக்கும் இடத்தில் பாம்பு வந்தால் பாம்பு பிடிப்பவர்களை தொடர்பு கொள்ளவும். எந்த ஒரு பாதுகாப்பும் இல்லாமல் பாம்பின் அருகில் செல்வது ஆபத்தானது.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com