வெயில் தாக்கம் குறையாததால் இளநீர் தட்டுப்பாடு அதிகரிப்பு!

வெயில் தாக்கம் குறையாததால் இளநீர் தட்டுப்பாடு அதிகரிப்பு!
Published on

வெயிலின் தாக்கம் குறையாததால் இளநீர் தட்டுப்பாடு தமிழ்நாடு முழுவதும் அதிகரிக்கத் தொடங்கி இருக்கிறது. கோடைக் காலம் முடிவடைந்த போதும் வெயிலின் தாக்கம் இன்னும் நாடு முழுவதும் குறைந்தபாடில்லை. இதனால் மக்கள் பலரும் தங்களின் உடல் சூட்டை தணிப்பதற்காக இளநீரை தேடிச்சென்று பருகுகின்றனர்.

இளநீரின் 100 மில்லி லிட்டர் நீர்மத்தில் 19 கலோரி ஆற்றல் இருக்கிறது. இளநீரில் 95 சதவீதம் நீர் மற்றும் 4 சதவீதம் கார்போஹைட்ரேட்டுகள், புரதம் மற்றும் கொழுப்பு 1 சதவீதம் உள்ளன. மேலும், இளநீரில் சிறிய அளவில் வைட்டமின்கள் மற்றும் உணவு தாதுக்களும் காணப்படுகின்றன. இதனால் இளநீர் மருத்துவ குணம் வாய்ந்ததாகவும், உடல் ஆரோக்கியத்துக்கு ஏற்றதாகவும் உள்ளது.

இந்த நிலையில், இந்த ஆண்டு தற்போது வரை பெய்ய வேண்டிய மழை பொழியாமல் இருப்பதால் நிலங்கள் வறண்டு காணப்படுகின்றன. இதனால் பல்வேறு உணவு பொருட்களின் விளைச்சலும் பெருமளவில் பாதிக்கப்பட்டிருக்கின்றன. இதன் தொடர்ச்சியாக, இளநீர் விளைச்சலும் அதிக அளவில் பாதிக்கப்பட்டிருக்கிறது. கோடைக் காலத்தில் சுட்டெரித்த வெயிலின் காரணமாக அதிக அளவிலான இளநீர் தென்னை மரங்களில் இருந்து பறிக்கப்பட்டன. அதன் பிறகு போதிய அளவு நீர் இல்லாமல் இளநீர் விளைச்சலுக்குக் காலதாமதம் ஏற்பட்டிருக்கிறது. மேலும், பூச்சிகளின் தாக்கம் மற்ற விலங்குகளின் ஆபத்துகளாலும் இளநீர் வரத்து குறையத் தொடங்கி இருக்கிறது.

தற்போது இளநீர் மொத்த விற்பனையில் ஒரு ரூபாய் உயர்ந்து 31 ரூபாய் வரை விலை உயர்ந்துள்ளது. இவ்வாறு டன் ஒன்று 12,500 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. தற்போது இளநீர் வரத்து குறைவாக இருக்கிறது. அதேநேரம், தேவை அதிகரித்து இருப்பது விலை உயர்வுக்கு வழி வகுக்கின்றன.

விவசாயிகள் இளநீருக்கு எதிர்பார்த்த விலை கிடைக்காத சூழலே தற்போது நிலவுகிறது. இதன் காரணமாக, விவசாயிகள் இளநீரை பறிக்க காலம் தாழ்த்தத் தொடங்கியிருக்கின்றனர். எதிர்பார்க்கும் அதிக விலை கிடைக்கும் பொழுது பறிப்பதற்காக அவை விட்டு வைக்கப்பட்டு இருப்பதாகக் கூறப்படுகிறது. இதனால் வெயில் தாக்கத்தால் பாதிக்கப்படும் மக்கள் இளநீரை அருந்த அதிக விலை கொடுக்க வேண்டி இருப்பது குறிப்பிடத்தக்கது.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com