ஆமைகளை பாதுகாக்க ஏவுகணை சோதனையை நிறுத்திய இந்திய நிறுவனமான டிஆர்டிஏ.
இந்திய ராணுவத்திடம் உள்ள பல்வேறு வகையான ஏவுகணைகள், இந்திய நிறுவனங்களுல் தயாரிக்கப்படும் ஏவுகணைகள் ஒடிசா மாநிலம் அருகே இருக்கக்கூடிய கடலோர தீவு பகுதியான வீலர் தீவில் சோதனை செய்யப்படுவது வழக்கம். இவ்வாறு டி ஆர் டி ஏ இப்பகுதியில் அடிக்கடி ஆயுத சோதனைகளை நடத்தி வருகிறது.
அதே நேரம் ஒடிசா மாநிலம் வீலர் தீவில் ஆலிப் ரிட்லே என்ற அரிய வகை ஆமை ஜனவரி முதல் மார்ச் மாதம் வரை முட்டையிட்டு குஞ்சு பொறிக்கும். மேலும் ஒடிசா மாநிலம் கஞ்சம் மாவட்டம் ருஷிகுப்யாரூகெரி பகுதியில் 6 லட்சத்திற்கும் அதிகமான ஆமைகள் முட்டையிட்டு குஞ்சு பொறிக்கும். இந்த ஆலிப் ரிட்லே ஆமை இனம் அழிந்து வரும் பட்டியலில் இருப்பதாலும், ஆமைகளை பாதுகாக்கவும் ஒடிசா மாநில வனத்துறை டிஆர்டிஏ-விற்கு கோரிக்கை ஒன்றை விடுத்திருக்கிறது.
இதன்படி ஆமைகள் முட்டையிட்டு குஞ்சு பொறிக்கும் ஜனவரி முதல் மார்ச் மாதம் வரை வீலர் தீவில் ஏவுகணை சோதனைகளில் ஈடுபடுவதை நிறுத்த வேண்டும். சோதனையின் மூலம் எழுப்பப்படும் அதிகபட்ச வெளிச்சத்தின் காரணமாகவும், சத்தத்தின் காரணமாகவும் ஆமைகள் பாதிக்கப்படுகின்றன என தெரிவிக்கப்பட்டு இருக்கிறது.
இதை அடுத்து டிஆர்டிஏ வரும் ஜனவரி மாதம் முதல் மார்ச் மாதம் வரை வீலர் தீவில் ஏவுகணை சோதனை மற்றும் ஆயுத சோதனையில் ஈடுபடுவதை முற்றிலும் நிறுத்துவதாக அறிவித்திருக்கிறது. அரசின் சார்பில் ஆமைகள் பாதுகாப்பு தனி அதிகாரியும் தற்போது நியமிக்கப்பட்டிருக்கிறார்.