
எறும்புண்ணி எனப்படும் இந்திய பாங்கோலின் பற்றி சில விவரங்கள்.
இவை இந்திய துணைக் கண்டத்தை பூர்வீகமாகக் கொண்டவை.
செதில்கள் மற்றும் வால் தடிமானாக இருக்கும்.
இந்த விலங்கு பலூட்டி வகையை சார்ந்தது.
நீளமான வாலும் கொண்ட இவை கூர்மையயான முகம் உடையவை.
இவை இரவில் இரை தேடும். எறும்பு, கரையான், ஈசல் இவைகளை உண்ணும்.
இவைகளின் முன்னங்காலில் உள்ள நீளமான நகங்கள் எறும்புகள் செதில்களை தோண்டி எடுக்க ஏதுவாக அமைந்துள்ளன.
எறும்பு உண்ணிகளுக்கு பற்கள் இல்லை. நீண்ட உருண்டையான நாக்கை பயன்படுத்தி புற்றுக்குள் செலுத்தி நாக்கின் பசை மூலம் இறையை பிடித்து உண்ணுகின்றன.
பிற விலங்குகளிடமிருந்து பாதுகாத்துக்கொள்ள ஒரு இரும்பு குண்டு போல் சூருட்டிக்கொள்ளும் தனித்தன்மை படைத்தவை
மரங்களில் ஏறி மர எறும்புக்களை உண்ணும் திறமை கொண்டவை.
இவை இலங்கையில் மழை காடுகள் புல் வெளிகளிலும், வாழ்கின்றன.
ஒரு குட்டியை ஈனும். அந்த குட்டி கரடிக் குட்டிப்போல் தாயின் முதுகில் சவாரி செய்யும்.
நான்கு வகை எறும்பு உண்ணிகள் (பாங்கோலின்கள்) ஆசியாவில் உள்ளன.
அவை இந்திய பாங்கோலின், சுண்டா பாங்ககோலின், பிலிப்பைன் பாங்கோலின், சீன பாங்கோலின்.
பெரியவகை எறும்பு உண்ணிகள் சுமார் 1.8 மீட்டர் நீளமும் 30 கிலோ எடை உடையவை. இந்தவகை நாள் ஒன்றுக்கு 20 ஆயிரம் எறும்புகளை விழுங்கும்.
இவைகளின் இறைச்சிகாவும், மருத்தவ குணம் இருப்பதாக கருதுவதால் செதில்களுக்காக்கவும் இவை வேட்டை ஆடப் படுகின்றன.
இவைகளின் தோல்களும் பயன்படுத்தப்படுகின்றன.
இவற்றின் செதில்கள் நிறம் இவை வாழும் சூழல், பூமியின் நிறத்தை ஒத்து மாறிவிடும்.
உலகில் அதிகமாக கடத்தப்படும் பலூட்டி விலங்கினம் எறும்பு உண்ணிகள் ஆகும்.
கடத்தல்காரர்களிடமிருந்து எறும்பு உண்ணிகளை காப்பாற்ற பல்வேறு நடவடிகைகள் மேற்க்கொள்ளப்.பட்டு வருகின்றன.