சபர்மதி ஆறு ராஜஸ்தான் மாநில உதய்ப்பூர் மாவட்டத்தில் உள்ள ஆரவல்லி குன்றில் உற்பத்தியாகிறது. இது துவங்கும் இடத்தில் இதனை "வாகல்" என்று அழைக்கிறார்கள். இந்த ஆற்றின் பெரும் பகுதி குஜராத் மாநிலத்தில் பாய்ந்து அரபிக் கடலிலுள்ள காம்பே வளைகுடாவில் கலக்கிறது. சபர்மதி ஆறு 371 கிலோமீட்டர் நீளமுடையது.
அகமதாபாத், காந்திநகர் இரண்டும் இவ்வாற்றின் கரையில் அமைந்துள்ளது. மகாத்மா காந்தி தனது ஆசிரமத்தை இதன் ஆற்றங்கரையில் அமைத்தார். குஜராத்தின் அகமதாபாத் நகரில் ஓடும் சபர்மதி ஆறு நமது கூவம் ஆற்றைப் போன்றே சாக்கடை ஆறாகத்தான் ஓடியது.
இந்த நதியின் பாரம்பரியத்தையும் அதன் கரையோரத்தில் பரந்து கிடக்கும் நிலப்பரப்பையும் பாதுகாக்க எண்ணி திரு. நரேந்திர மோடி அவர்கள் இதனை நகரவாசிகளுக்கான ஒரு பொழுதுபோக்கு அம்சமாக மாற்ற திட்டமிட்டு தொழிற்சாலை கழிவுகளை கொட்டும் இடமாகவும், நகரத்தின் சாக்கடை நீர் கலந்து மாசுபட்ட இதனை படகு சவாரி செய்யவும், மாலை பொழுதில் குடும்பத்துடன் பொழுதைக் கழிக்கவும், எப்போதும் வற்றாத ஜீவநதியாகவும் ஆக்கி காட்டினார்.
மழைக்காலங்களில் சபர்மதி ஆற்றில் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டு அது அகமதாபாத் நகரினுள் புகாமல் இருக்க நதியின் இருபுறமும் பலமான தடுப்பு சுவர்கள் அமைக்கப்பட்டன.
நியூயார்க், லண்டன், சிங்கப்பூர் மட்டும்தான் நதிகளை நகர மக்களின் வாழ்க்கையோடு இணைந்த பகுதியாக ஆக்க முடியும் என்பதில்லை. அகமதாபாத்தும் அதனை நிரூபித்து காட்டியுள்ளது.