
விவசாயம் என்பது அத்தியாவசியமானது. அதை இயற்கையிலேயே ஒவ்வொருவரும் கற்று கொண்டு விட்டால் சிக்ககள் இல்லை.
பெரிய அளவு விவசாயம் செய்யாவிட்டாலும், எளிதான தோட்டகலை குறிப்புகளை தெரிந்து கொள்வது அவசியமாகும். சிறிய சிறிய செடிகள் வளர்ப்பதும் விவசாயமே ஆகும். அதை அடுத்த படிக்கு எடுத்து சென்று காய்கறி, பழங்கள் என அனைத்தையும் விளைவிப்பது நமக்கு நன்மையை தரும். இயற்கையாக கண்முன்னே விளைச்சல் செய்யப்படுவதால் உடல் ஆரோக்கியத்திற்கும் நன்மை பயக்கும். அப்படி வீட்டிலேயே கிராம்பு எப்படி வளர்ப்பது என்று பார்க்கலாம்.
கிராம்பு ஒரு முக்கியமான இந்திய மசாலா ஆகும். இது கிட்டத்தட்ட ஒவ்வொரு இந்திய உணவு வகைகளிலும் அதன் பயன்பாட்டைக் கூட்டியுள்ளது.
நீங்கள் தோட்டக்கலையை விரும்புபவராக இருந்தால் உங்கள் வீட்டிலேயே கிராம்பு செடிகளை வளர்த்து புதிய கிராம்புகளை அனுபவிக்கலாம். கிராம்பு பல்வேறு மருத்துவ குணங்களை கொண்டுள்ளது. முக்கியமாக பற்கள் சார்ந்த பிரச்சனைகளுக்கு பல தீர்வுகளை அளிக்க கூடியதாகும்.
முதலில் கிராம்பு செடியிலிருந்து சில பழுத்த பழங்களை சேகரிப்பதன் மூலம் நீங்கள் கிராம்பு விதைகளை தயாரித்து கொள்ள முடியும். பிறகு விதைகளை இரவு முழுவதும் ஊறவைத்து, விதை மேலோட்டத்தை அகற்ற வேண்டும்.
கிராம்பு நடுவதற்கு மழைக்காலம் சிறந்ததாகும். ஜூன் முதல் ஜூலை நல்ல நேரமாகும். ஒரு நடவு குழி 75 செ.மீ நீளம், அகலம் மற்றும் ஆழம் கொண்டதாக இருக்க வேண்டும். ஒரு துளையிலிருந்து மற்றொரு துளைக்கு தூரம் 6 முதல் 7 செமீ வரை இருக்க வேண்டும். கிராம்பு சாகுபடிக்கு நீர்ப்பாசனம் தேவைப்படுகிறது. வெப்பமான காலநிலையில் தொடர்ந்து தண்ணீர் தேவைப்படும்.
கிராம்பு பூக்கள் பூப்பதற்கு முன்பே வெட்டப்படுகின்றன. கிராம்பு பழம் 2 செ.மீ. நீளம் கொண்டதாகும். சந்தையில் கிராம்புகளின் விலை மிக அதிகமாகும். இதன் மூலம் நீங்கள் உங்கள் வீட்டிற்கு மட்டுமல்லாமல் வியாபாரம் செய்து நல்ல லாபம் ஈட்டலாம். ஒரு செடியிலிருந்து 2 முதல் 3 கிலோ வரை கிராம்பு கிடைக்கும்.
வீட்டில் வளர்ப்பது எப்படி?
நர்சரி கார்டன்களிலேயே கிராம்பு விதைகளை பெற்று கொள்ளலாம். முதலில் மண்ணை காயாமல் பார்த்து கொள்வது அவசியமாகும். ஏனென்றால் கிராம்பு விவசாயத்திற்கு தண்ணீர் அவசியமாகும். சின்ன மண்பானையிலேயே மேலே கூறிய வழிமுறைகளை பின்பற்றி விதைகளை நடவு செய்து உரம் இட்டு வளர்த்தால் கிராம்பு கிடைத்துவிடும்.