பற்கள் எதற்கு? நாக்கு போதுமே… 

எறும்புத்தின்னி
எறும்புத்தின்னி
Published on

எறும்புத்தின்னி விலங்குகள் பற்றி கேள்விப்பட்டிருக்கிறீர்களா? இவை பற்கள் இல்லாத தனித்துவமான விலங்குகள். பற்கள் இல்லாமல் எப்படி உணவை உட்கொள்கின்றன என நீங்கள் நினைக்கலாம்? ஆனால், அதற்கு ஏற்றவாறு இந்த விலங்குகளின் உடல் அமைப்பு அற்புதமான மாற்றங்களைப் பெற்றுள்ளது. 

பற்கள் இல்லாததால் எறும்புத்தின்னிகளின் உணவு உண்ணும் முறை முற்றிலும் வித்தியாசமாக இருக்கும். சில வகை இரும்புத்தின்னிகள் நீண்ட கூர்மையான நகங்களை பயன்படுத்தி, மரங்களில் ஏறி பூச்சி, புழுக்களைப் பிடித்து உண்ணும். மற்ற சில வகைகள் நீண்ட நாக்கைப் பயன்படுத்தி, மெதுவாக நகரும் இறையைப் பிடித்து உண்ணும்.‌ இந்த விலங்கு எறும்பு புற்றுகளின் உள்ளே தனது நீளமான நாக்கை செலுத்தி இலட்சக்கணக்கான எறும்புகளைப் பிடித்து உண்ணும். 

இவற்றின் உடல் அமைப்பு அவற்றின் வாழ்க்கை முறைக்கு ஏற்ப தனித்துவமானது. அவற்றின் நீண்ட நகங்கள் மரங்களைப் பிடித்து ஏறவும், இரையைப் பிடிக்கவும் உதவும். மேலும், அவற்றின் ஒட்டும் தன்மை கொண்ட நாக்கு இரையை பிடித்து உண்ணவும், தண்ணீர் குடிக்கவும் உதவுகிறது. இந்த விலங்கின் தோல் கனமாக இருப்பதால் அவற்றை பிற விலங்குகள் வேட்டையாடுவதில்லை. 

எறும்புத்தின்னிகள் பெரும்பாலும் மரங்களில் வாழும். மரங்களில் ஏறி உணவைத் தேடி தூங்கும். சில வகை எறும்புத்தின்னிகள் தனியாகவே வாழும் தன்மை கொண்டவை. இந்த விலங்குகள் பொதுவாக இரவில் சுறுசுறுப்பாக இருக்கும். இந்த விலங்குகள் தங்கள் தனித்துவமான உடல் அமைப்பு மற்றும் வாழ்க்கை முறையால் சுவாரஸ்யமான விலங்குகளாக உள்ளன. பற்கள் இல்லாமல் இருந்தாலும் இவை தங்கள் சூழலுக்கு ஏற்ப தங்களை தகவமைத்துக் கொண்டு வெற்றிகரமாக வாழ்ந்து வருகின்றன. 

இதையும் படியுங்கள்:
வயிற்றில் காணப்படும் உணவு சேமிப்புக் கிடங்கு... இது ஒரு விசித்திர எறும்பு!
எறும்புத்தின்னி

இந்த தனித்துவமான விலங்கைப் பற்றி மேலும் ஆராய்வது, இயற்கையின் அற்புதமான தகவமைப்புகளைப் பற்றி நாம் மேலும் தெரிந்துகொள்ள உதவும். 

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com